Total Pageviews

Tuesday, May 29, 2012

ரம்புட்டான் பழம் பற்றிய தகவல் !!!!




ரம்புட்டான் பழம் பற்றிய தகவல் !!!!

ரம்புட்டானின் தாய்நாடு மலேசியா எனக் கருதப்படுகிறது.ஆரம்ப காலங்களில் தெற்காசியாவின் கிழக்கு வலய நாடுகளில் பிரதானமாக பயிர்ச்செய்யப்பட்ட இது தற்போது மத்திய அமெரிக்காவிலும், கப்ரியன் தீவுகளிலும் பயிர்ச்செய்யப்படுகிறது.எலகில் பிரதானமாக ரம்புட்டான உற்பத்தி மேற்கொள்ளப்படும் நாடு தாய்லாந்து ஆகும்.
ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. ரம்புட்டான் பழம் கிழக்காசியா (சீனா ) மற்றும்தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டது. ரம்புத்தான் ஆஸ்திரேலியா, நியூ கினி, ஆப்பிரிக்கா, இலங்கை,அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைகின்றது.

இலங்கையில் பயிர்ச்செய்யப்படும் பழங்களிடையே ரம்புட்டான் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. பழத்தின் விதையைச் சூழ உட்கொள்ளக் கூடிய சாறு நிறைந்த சதைப்பகுதி காணப்படுவதால் அது மக்களிடையே விரும்பப்படும் பயிராக மாறியுள்ளது.

ஒரு ரம்புத்தான் மரம் நடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் பழம் காய்க்க தொடங்கி விடும். ஒரு ரம்புத்தான் பழம் முழுமையாக பழுப்பதற்கு 90 முதல் 120 வரை எடுத்துக் கொள்கின்றது. ரம்புத்தான் பழம் பிஞ்சாக இருக்கும் பொழுது பச்சை நிறத்தில் இருக்கும். அதுவே பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரகங்களுக்கு ஏற்றார்ப் போல ஒரு ரம்புத்தான் மரம் ஒரு பருவத்திற்கு 80 கிலோ முதல் 200 வரையிலான கைகளைத் தரும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள் . எல்லோருக்கும் பிடித்த பழம் . ஆடி மாதத்தில் இந்த பழ சீசன் . அந்த நேரத்தில் மட்டும் குவியலாக குவிந்து கிடக்கும் எல்லா இடமும் இந்த பழம் . ரம்புட்டான் பழம் மஞ்சள் , சிகப்பு என இரண்டு வகைகளில் உண்டு . . உள்ளே தோலை உரித்தால் அதற்குள் சதை பற்றுடன் விதையுடன் இருக்கும் அந்த சதையை சாப்பிட வேண்டும் . மிகவும் நன்றாக இருக்கும்

No comments:

Post a Comment