Total Pageviews

Thursday, February 3, 2011

"என் மனைவி ரொம்ப நல்லவ."

 ‎"என் மனைவி ரொம்ப நல்லவ."

"அப்புறம் ஏன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டே?"

"அவ நல்லவனு ரெண்டாவது கல்யாணம் பண்ண பிறகுதான் தெரியுது."

வெங்காய பஜ்ஜி

 பொண்ணு பார்க்க வந்தபோது மாப்பிள்ளை கேட்ட சமாச்சாரம் எங்களுக்கு அதிர்ச்சியாப் போச்சு!"
"வரதட்சணை நிறைய கேட்டாரா?"
"இல்லைங்க... வெங்காய பஜ்ஜி இருக்கான்னு கேட்டுட்டாரு!"

ப‌ச்சை மு‌ட்டை

நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா... எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்.
டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது?
நோயா‌ளி: ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன் போடு‌ம்..!

Wednesday, February 2, 2011

அன்புள்ள அப்பா...

சின்னச்சிறு குழந்தையாய் கைகளில் தவழ்ந்தாய்
என்னை நீ தாங்கிடும் வயதும் வந்தது.

உன்னிடம் கேட்பதெல்லாம் அன்பும் அரவணைப்பும்
என்னிடம் இருப்பதெல்லாம் பரிவும் புன்சிரிப்பும்.

உரையாடல் நம்மிடையே ஊடகம்தானே
விரையாமல் உடன் அமர்ந்து மகிழ்விப்பாயா?

கைப்பிடித்து நடைபழக்கி உவகை கொண்டேனே
கைதாங்கி கனிவுடனே அமர வைப்பாயா?

மறக்காமல் மீண்டும் மீண்டும் கதை சொல்வேனே
வெறுக்கிறாய் இன்று சொன்னதையே சொல்வதாய்.

அன்று சுத்தமும் ஒழுக்கமும் உனக்கு நான் கற்பித்தேன்
இன்று கைநடுங்கி சிதறும் உணவால் சினம் கொள்ளாதே.

விரிந்து வரும் விஞ்ஞானம் மனதில் பதிவதில்லை
புரிந்துகொள்ள சற்றே அவகாசம் தருவாயா?

போதும் இந்த வாழ்க்கையென இறைவனை அழைத்திட்டால்
ஆதரவாய் நீபேசி என்மனம் தேற்றுவாயா?

முதுமையில் தனிமை ஒரு தீராத கொடுமை
அது என்னை வதைத்திடாமல் அணைத்திருப்பாயா?

என்றும் அன்புடன்
உன் அன்புள்ள அப்பா...

திருக்குறள் - 2


திருக்குறள் - 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.
பொருள்:  தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையானின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

திருக்குறள் - 1

திருக்குறள் - 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள்: அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதி பகவன்,உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

Friday, October 22, 2010

யுவகிருஷ்ணா: மரம் காத்த மாணவர்க�

யுவகிருஷ்ணா: மரம் காத்த மாணவர்க�


கோவை மாவட்ட ஆட்சியர் எத்தனையோ மனுக்களை கண்டிருக்கிறார். ஆனால் இப்படி ஒரு மனுவை, வாழ்வில் முதன்முறையாக வாசிக்கிறார். ஒரு அரசமரம் நேரடியாக வாய்திறந்துப் பேசுவதைப் போன்ற வார்த்தைகள். திரும்ப திரும்ப வாசிக்கிறார்.


"நான் உங்களுக்கு நிழல் தருகிறேன். சுவாசக்காற்று தருகிறேன். அப்படியிருந்தும் என்னை ஏன் அழிக்க நினைக்கிறீர்கள்? என்னை அழித்துவிட்டு வெயிலில் வாடி, வதங்கி நீங்கள் அழிந்துப் போகாதீர்கள். என்னை நீங்கள் சாய்த்துவிட்டால், என்னை நம்பி, கிளைகள் மீது கூடுகட்டி வாழும் புள்ளினங்களுக்கு என்ன


பதில் சொல்வேன்? கார்பன்-டை-ஆக்ஸைடை நான் எடுத்துக்கொண்டு, சுத்தமான பிராணவாயுவை உங்களுக்கு தரும் என்னை அழித்திடாமல் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் காத்திட வேண்டும்!"