Total Pageviews

Thursday, April 28, 2011

திருக்குறள் - 34


திருக்குறள் - 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
பொருள்: மனம் தூய்மையாக இருப்பதே அறம்.  மற்றவை ஆரவாரத்தை தவிர வேறொன்றுமில்லை.

Tuesday, April 26, 2011

திருக்குறள் - 33


திருக்குறள் - 33
ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
பொருள்: செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

Monday, April 25, 2011

திருக்குறள் - 32


திருக்குறள் - 32
அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
பொருள்: நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை. அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

Thursday, April 21, 2011

திருக்குறள் - 31

திருக்குறள் - 31
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
பொருள்: சிறப்பையும் செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத் தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

Wednesday, April 20, 2011

திருக்குறள் - 30


திருக்குறள் - 30
அந்தணர் என்போர் அறவோர்மற்  றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
பொருள்: அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்டு அருள் புரியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவர்.

Monday, April 18, 2011

திருக்குறள் - 29


திருக்குறள் - 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காதல் அரிது.
பொருள்: குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால், அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

Monday, April 11, 2011

திருக்குறள் - 28


திருக்குறள் - 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
பொருள்: சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காடும்.