Total Pageviews

Thursday, May 3, 2012

வெண்டைக்காயின் மருத்துவ குணம் !!!



வெண்டைக்காயின் மருத்துவ குணம் !!!

வெண்டைக்காயில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.

வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதையை காபிப் பொடியாகப் பயன்படுத்துகிறார்க்ள.

கொழுப்பை கரைக்கும்

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.

வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

ஆண்மையை அதிகரிக்கும்

வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

நன்மை தரும் பாக்டீரியா

இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப்படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம்.

வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ் (laxative.) உள்ளது. இது உடல் நலனுக்கு ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது. வாய்வு கோளாறுகளை தடுக்கிறது. வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல் உதிர்தலை தடுக்கும்.

இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மினுமினுப்பான தோலையும் பெறலாம். சுறுசுறுப்பாகவும் வாழலாம்.

Monday, April 30, 2012

ஆடாதொடை - அருமருந்து




ஆடாதொடை தமிழக்ம் முழுவதும் காணப்படும் ஒரு குறுஞ்செடியினம்.நீண்ட ஈட்டி வடிவ இலைகளையும்,வெள்ளை நிறப்பூக்களையும் உடைய செடி.சளி,இருமல்,வயிற்றுபூச்சிகளை போக்குவதில் அருமருந்து இது.
1.இலைச்சாற்றை சில துளிகள் தேனுடன் கலந்து சாப்பிட்டு வர இரத்தவாந்தி,மூச்சுத்திணறல்,இரத்தம் கலந்த சளி குணமாகும்.
2.இலைச்சாற்றை எருமைப்பாலுடன் காலை மாலை சாப்பிட்டு வர சீதபேதி,இரத்தபேதி குணமாகும்.
3.இதன் 10 இலைகள் எடுத்து நீரில் போட்டு காய்ச்சி தேனுடன் கலந்து 40 நாட்கள் காலை,மாலை சாப்பிட்டு வர என்புருக்கி,சளிசுரம்,விலாவலி ஆகியன குணமாகும்.
4.ஆடாதொடை வேருடன்,கண்டங்கத்திரி வேர் கலந்து இடித்து அதில் 1கிராம் வீதம் தினமும் தேனில் கலந்து சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு,சுவாசகாசம்,சன்னி,ஈளை,இருமல்.எலும்புருக்கி,ஆகியன தீரும்.
5,இதன் உலர்ந்த இலைகளை ஊமத்தை இலையில் சுருட்டி புகைபிடிக்க மூச்சுத்திணறல் தீரும்.
6,இதனுடன் அக்காரகாரம்,சித்தரத்தை,இலவங்கம்,ஏலம்,சர்க்கரை,தேன் கலந்து செய்யப்படும் ஆடாதொடை மணப்பாகு என்புருக்கி,மார்ச்சளி,இருமல்,ஃபுளுரசி,ஆஸ்துமா,நிமோனியா ஆகியவை குணமாகும்.குரல் இனிமை கிடைக்கும்.
7.ஆடாதொடையுடன்கோரைக்கிழங்கு,பற்படாகம்,விஷ்ணுகிரந்தி,துளசி,சீந்தில்,கஞ்சாங்கோரை,பேய்ப்புடலை ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் கஷாயம் அனைத்து சுரங்களுக்கும் குணமளிக்கக் கூடியது.
8.கருவுற்ற பெண்கள் இதன் வேரில் கஷாயம் வைத்து கடைசி மாதத்தில் அருந்தி வர சுகப்பிரசவம் உண்டாகும்
 

Sunday, April 29, 2012

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !



மாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாகமற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளதுநீங்கள் மிகவும் படபடப்பாகவும்தொய்வாகவும் உள்ளீர்கள் திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்,
அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம் , ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??
  துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும் ,ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் ,இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்
 
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும் ,இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
 
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..தேவை இல்லாத விசயங்களையும் ,ஜோக்குகளையும் பகிர்வோர் உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள் !!!!

Tuesday, April 24, 2012

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!




ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்....

Saturday, April 21, 2012

கேன்ஸர் செல்களை அழிக்கும் திரிபலா


கேன்ஸர் செல்களை அழிக்கும் திரிபலா



ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் திரிபலா என்ற மூலிகை கணையப் புற்று நோய் வராமல் தடுப்பதாக பிட்ஸ்பெர்க் பல்கலைக் கழகத்தில் உள்ள புற்று நோய் மையத்தின் புதிய ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

கணையப் புற்று நோயால் பாதித்த சுண்டெலிகளை வைத்து இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது. மூன்று வெவ்வேறு மூலிகைகள் சேர்ந்த உலர்ந்த பொடித்த திரிபலாவை சுண்டலிகளுக்கு கொடுத்ததில் புற்று நோயால் பாதித்த கணைய செல்கள், சாதாரண செல்கள் தினமும் அழிவதைப் போல அழிந்தது தெரியவந்துள்ளது.

பொதுவாக நம் உடலில் இருக்கும் கேன்சர் பாதித்த செல்கள் சீரற்ற முறையில் வளர்ந்துகொண்டுதான் இருக்கும். அழிந்த, தேவையில்லாத சாதாரண செல்கள் தினமும் அழிவதைப்போல அழியாது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் நடந்த அமெரிக்க புற்று நோய் ஆராய்ச்சி மையத்தின் ஆண்டுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

"இரைப்பை, குடல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மூலிகை திரிபலா. திரிபலாவை நீரில் கலந்து சாப்பிடும்போது பசியைத் தூண்டும் என்பதுடன் ஜீரணம் தொடர்பான பிரச்சினைகள் குணமாகும். தவிர, ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.

சுண்டெலிகளுக்கு திரிபலா பொடியைக் கொடுத்ததில் கேன்சர் செல்களை அழிப்பதில் எந்தக் பக்க விளைவும் இல்லாமல் முழு வேகத்துடன் செயல்பட்டது உறுதியானது" என்கிறார் டாக்டர் சஞ்சய் கே.ஸ்ரீவத்சவா.இந்த ஆராய்ச்சியில் பிரதானப் பங்கு வகித்த இவர், பிட்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.

இந்த ஆராய்ச்சி பற்றி விளக்கிய சஞ்சய் ஸ்ரீவத்சவா, "மனிதர்களைப் பாதித்த கணையப் புற்று நோய் செல்களை சுண்டெலிகளுக்குச் செலுத்தி, தினமும் 2 மி.கிராம் திரிபலா பொடியை வாரம் ஐந்து நாட்கள் கொடுத்தோம். திரிபலா கொடுக்காத சுண்டெலிகளைவிட வேகமாக இவற்றின் புற்று நோய் செல்கள் அழிக்கப்பட்டன. செல்களில் உள்ள புரதத்தின் அளவும் அதிகரித்தது. அதிகம் பேரைப் பாதிக்கும் புற்று நோய்களில் கணையப் புற்று நோய் 5வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து இதில் ஆராய்ச்சி செய்துவருகிறோம்" என்கிறார்.

இந்த ஆராய்ச்சி பற்றி சாய்ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் டாக்டர் வனிதா முரளிகுமார் சொல்வது, "இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளின்மேல் ஒரு புதிய வெளிச்சத்தை இந்த ஆராய்ச்சி முடிவுகள் கொடுத்துள்ளன. கடுக்காய், நெல்லிக்காய், தன்ரிக்காய் இந்த மூன்றையும் காய வைத்து பொடியாக்கி செய்யப்படுவதுதான் திரிபலா.

ஆயுர்வேத மருத்துவத்தில் 1000 ஆண்டுகளாக திரிபலா, வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்குப் பயன்படுகிறது. தவிர, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் தோலின் பளபளப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. தினமும் திரிபலா சாப்பிட்டால் உடலின் உள்உறுப்புகளை அம்மா, குழந்தையைப் பாதுகாப்பதுபோல பாதுகாக்கும் என்ற நம்பிக்கை உண்டு" என்கிறார்.

மணிகண்டன் என்பவர் தன்னுடைய பிளாக்கில் இதனை பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை இந்த வார புதிய தலைமுறையில் தன்னுடைய செய்தியாக வெளியிட்டுள்ளது..

http://manikandanji.blogspot.in/2012/04/blog-post_16.html

வெயில் கால உஷ்ணக் கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு!



வெயில் கால உஷ்ணக் கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு!








பாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோ - சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது.

பாசிப்பயறில் உள்ள சத்துக்கள்

இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

காய்ச்சல் குணமாகும்

சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

நினைவுத் திறன் கூடும்

மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அழகு சாதனப்பொருள்

குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

நன்றி : கூடல்

Tamil Nadu Arasiyal Unmaigal - Truth: சாராயம் குடிக்கும் ஆண்களின் குடும்பம் நாசமாய் போய்...

Tamil Nadu Arasiyal Unmaigal - Truth: சாராயம் குடிக்கும் ஆண்களின் குடும்பம் நாசமாய் போய்...: சாராயம் குடிக்கும் ஆண்களின் குடும்பம்  நாசமாய் போய் விடும்...