Total Pageviews

Saturday, May 5, 2012

ஏலக்காய் - அரிய மருத்துவ குணங்கள்

ஏலக்காய் - அரிய மருத்துவ குணங்கள்



ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை...

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.



Thanks & Regards

Sugavanam N, M.A., F.I.I.I., MBA
CEO and Chief Strategic Consultant,

Mobile: AirTel: 91-9940058497, BSNL: 91-9445437117, Vodafone: 91-9176871191
Landline: 91-44-2498-4148

Please visit our Official web site:  www.suga-consulting-services.com 

சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரம்




''எங்க வீட்டுல மட்டும் மின்வெட்டு பிரச்னை கிடையாதுங்க'' என்று ஜாலியாகச் சிரிக்கிறார் சுரேஷ்.


சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசிக்கும் இவர், தனியார் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநர். தன்னுடைய வீட்டில் சோலார் தகடுகளைப் பொருத்தி, அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்திவருகிறார்.


''மழை நீர் சேகரிப்புத் திட்டம் உள்பட ஏகப்பட்ட திட்டங்களை நம்ம அரசு அறிமுகப்படுத்துவதற்கு முன்னாடியே என் வீட்டுல அறிமுகப்படுத்திட்டேன். காரணம், நல்ல விஷயங்கள்ல நாம மத்தவங்களுக்கு முன் மாதிரியா இருக்கணும்கிற எண்ணம் தான்.


வீட்டுல சோலார் தகடுகளை பொருத்தின இந்த மூணு மாசமா ஒரு செகண்ட் கூட எங்க வீட்ல கரண்ட் கட் கிடையாது. மின் விசிறி, லைட்டுகள்னு எங்க வீட்டுக்கான மின்சாரத்தேவை சுமார் ஒரு கிலோ வாட். அதுக்காக, 10 சோலார் தகடுகளை பொருத்தி இருக்கேன். சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரம், நேரடியாக மெயின் போர்டில் சேரும்படி இணைப்புக் கொடுத்து இருக்கேன். அப்படி கிடைக்கிற மின்சாரத்தை 10 இன்வெர்ட்டர் பேட்டரிகளில் சேமிச்சு வெச்சுப் பயன்படுத்துறேன்.


சோலார் தகடுகளில் இருந்து கிடைக்கிற மின்சாரத்தைக் காலையில் இருந்து சாயங்காலம் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். இரவு வேளைகளில் பேட்டரியில் சேமிக்கப்பட்டு உள்ள மின்சாரத்தை பயன்படுத்துவோம். இங்கே நான் பொருத்தி இருக்கிற சோலார் தகடு, இன்வெர்ட்டர் பேட்டரிகளுக்கு கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் செலவாச்சு. இது பெரிய தொகை தான். ஆனால், இதில் 80 ஆயிரம் ரூபாயை அரசாங்கம் மானியமா கொடுத்தாங்க. 20 ஆயிரம் ரூபாய் செலவில் கூட சோலார் தகடுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம்.


இப்ப பெரும்பாலான வீடுகள்ல டிஷ் ஆண்டனா இருக்கிற மாதிரி வருங்காலத்துல எல்லா வீட்டு மாடிகளிலும் சோலார் தகடுகள் இருக்கும். என்கிட்ட ஏகப்பட்ட பேர் இதைப் பற்றி விசாரிக்கிறாங்க. இதை ஃபாலோ பண்ணினா பவர்கட்டுக்கு கட் சொல்லலாம்...!'' சிரிக்கிறார் சுரேஷ்.


முடிந்தால், முடிந்தவர்களும் இந்த முறையை பின்பற்றலாமே.....





For further details and Solar Energy consulting, contact:



SUGA Consulting Services

Flat No.C-3-4, C-Block, 3rd Floor, Panna Oasis Apts,
35-36, M.K. Amman Koil Street, Mylapore, Chennai – 600004.

Mobile:

Airtel: 99400-58497,
BSNL: 94454-37117, 94458-88703,
Vodafone: 98842-87303, 91768-71191
Landline: 91-44-2498-4148



SUGA Consulting Services – Blog
Please visit our blog for our SUGA Consulting Services activities
http://suga-consulting-services.blogspot.com/



SUGA Employment Services – Blog
Please visit our blog of SUGA Employment Services, for Employment Opportunities and Employment Services.
http://suga-employment-services.blogspot.com/

SUGA Educational Services – Blog


Please visit our blog of SUGA Educational Services, to know the Educational Services provided by us.
http://suga-educational-services.blogspot.in/

SUGA Business Services – Blog
Please visit our blog of SUGA Business Services, to know the Business Services provided by us
http://suga-business-services.blogspot.in/


Email :

N.Sugavanam, CEO – nsugavanam@gmail.com,
For enquires in Consulting Services, with SUGA Consulting Services, send email to:
sugaconsultingservices@gmail.com 
For enquires in Employment Services, with SUGA Employment Services, send email to:
sugaemployment@gmail.com
For enquires in Business Services, with SUGA Business Services, send email to:
suga.business.services@gmail.com
VN Sathish, Manager – vnsathish123@gmail.com

Mobile:

Airtel: 99400-58497,
BSNL: 94454-37117, 94458-88703,
Vodafone: 98842-87303, 91768-71191
Landline: 91-44-2498-4148




Friday, May 4, 2012

உலர்ந்த திராட்சை உடலுக்கு மிகவும் நல்லது...




உலர்ந்த திராட்சை உடலுக்கு மிகவும் நல்லது...

திராட்சை! நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வ...கையுண்டு.

குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு…. என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த பழங்களை உலரவைத்து எடுக்கப்படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் இதற்கு கிசுமுசுப் பழம் என பெயரிட்டனர்.

பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயசம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந் துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

குழந்தைகள் வளர்ச்சிக்கு

வளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான். கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.

இரத்த விருத்திக்கு

எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

உடல் வலி குணமாக

பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு

கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு

மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால்உணவுகள் எளிதில் சீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகும். இந்தப் பிரச்சனைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.

தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.

குடல்புண் ஆற

அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.

இதயத் துடிப்பு சீராக

சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.

சுகமான நித்திரைக்கு

தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.

தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

உலர்ந்த திராட்சை உண்போர் கவனத்திற்கு

சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.

உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டு தான் பதப்படுத்துகின்றனர். எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு.

அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.

குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும் போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரேக் கொடுக்க வேண்டும்.

தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

Sugavanam-Tamil-Stories-Jokes: டோக்கியோவில் உள்ள தொழில்நுட்ப கல்வி மையத்தின் கட்ட...

Sugavanam-Tamil-Stories-Jokes: டோக்கியோவில் உள்ள தொழில்நுட்ப கல்வி மையத்தின் கட்ட...: Fix and install - Solar Panels on top of all Major Roads in India... Fix and install - Solar Panel on all sides of all big buildings in ...

காசம் தீர்க்கும் கற்பூரவள்ளி




காசம் தீர்க்கும் கற்பூரவள்ளி


புகை பிடிப்பவரா....?

புகை நமக்குப் பகை என்ற வாசகம் போட்டு இருந்தும் புகைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. அரசு பொது இடங்களில் புகை பிடித்தலுக்கு தடை பிறப்பித்தும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. புகையினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்பட்டும் இந்நிலை மாறவில்லை. புகைப்பவர்கள் அதிகம் நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே நாளடைவில் புற்று நோயாக மாறுகின்றது.

இவர்கள் கற்பூரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

வியர்வை பெருக்கி

சிலருக்கு வியர்க்காமல் உடம்பு முழுவதும் படிவம் போல் காணப்படும். நமது உடலில் தோலில் பல கோடி துளைகள் உள்ளன. இவற்றின் மூலம்தான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றுகின்றன. இந்த வியர்வையின் மூலம் உடலில் உள்ள அசுத்த நீர் வெளியேறுகிறது.

இந்த வியர்வை நன்கு வெளியேறவும், வியர்வை சுரப்பிகள் நன்கு செயல்படவும் கற்பூரவள்ளியின் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும்.

காசநோய்

காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். கற்பூரவள்ளி செடியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் ஈறாடுகால் (12 அடி விட்டம்) வரை எந்த விதமான பூச்சிகளையும் அண்ட விடாது.

சித்தர்கள் இதனை கற்பக விருட்சத்துடன் ஒப்பிடுவார்கள். இதனால் கூட இதற்கு கற்பூரவள்ளி என்று பெயர் வந்திருக்கலாம்.

வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம். நாட்டைப் பாதுகாக்கும் போர்ப்படை வீரர்களைப் போல் மனிதனை இந்த கற்பூரவள்ளி பாதுகாக்கிறது.

நாமும் நம் வீட்டில் கற்பூரவள்ளியை வளர்த்து அதன் பயனைப் பெறுவோம்.


நன்றி - தமிழ் சமுதாயம்

Thursday, May 3, 2012

பாய்ஸ் பொன்மொழிகள் - எழுத்தாளர் சுஜாதா




பாய்ஸ் பொன்மொழிகள் - எழுத்தாளர் சுஜாதா

1)நாம் எடுத்துக்கொள்வதுதான் வாழ்க்கை. எப்போதும் அது அபபடித்தான் இருந்தது, இருக்கும். வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி தராது. அதை விரும்ப வேண்டும். வாழ்க்கை உனக்கு நேரமும் இடமும் மட்டும் தரும். நிரப்ப வேண்டியது உன் சாமர்த்தியம்.

2)எந்தச் சமயத்திலும் கைவிடாமல் குறிக்கோள் வைத்து வெல். முயற்சியை நிறுத்தும்போதுதான் தோற்கிறாய்.

3)தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான் சாம்பியன்கள் மற்றவர்கள் நம்பவில்லையென்றாலும் 'நம்மால் முடியும்' என்பதை நம்பியவர்கள், முடியும் என்றால் முடியும்.

4)தோல்வியிலிருந்து எதும் கற்றுக் கொள்ளாவிட்டால்தான் அது உண்மையான தோல்வி.. தோல்வி உங்களை அடையாளம் காட்டும் நான் மற்றபடி வாழ்ந்தால் இன்னும் தப்புகள் செய்வேன்.

5)களத்தில் குதியுஙகள். கைகள் அழுக்காகட்டும், தடுக்கி விழுங்கள். எழுந்து நட்சத்திரங்களைச் சாடுங்கள்.

6)மேதை என்பது ஒரு சதவிகிதம்தான் உள்ளுணர்வு மற்றதெல்லாம் வியர்வை. ஆபத்தில்லாத, ரிஸ்க் எடுக்காத பாதைதான் அதிக ஆபத்தானது.

7)வெற்றிக்கு அதிக நாளாகும். நாள் மட்டும்தான்.

8 )சின்ன காரியங்களை நன்றாக இப்போது செய்யுங்கள். நாளடைவில் பெரிய காரியங்கள் உங்களைத் தேடிவரும். எல்லா ஆரம்பங்களும் சிறியவையே ஆரம்பிப்பதுதான் கடினம்.

9)வாய்ப்புகளைப் பெரும்பாலோர் தவறவிடுவதற்குக் காரணம் அவை உழைப்பு வடிவத்தில் வருவதால். இதுதான் சந்தர்ப்பம் என்று எதிலும் எழுதி ஒட்டியிருக்காது.

10)கிடைப்பது உயிர் வாழப்போதும். கொடுப்பதில்தான் நிஜ வாழ்க்கை இருக்கிறது. மற்றறவரை உற்சாகப் படுத்தும்போது நமக்கு எத்தனை உற்சாகம் ஏற்படுகிறது!

11)யாரும் தான்தோன்றியல்ல. நம்மை ஆக்கியவர்கள் ஆயிரம்பேர், ஒவ்வொருவரும் நமக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார்கள். உற்சாக வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். குணத்திலும், எண்ணத்திலும், வெற்றியிலும் உதவியிருக்கிறார்கள்.

12)நட்சத்திரமாக சொந்த வெளிச்சம் தேவை, சொந்தப்பாதை தேவை. இருட்டைக் கண்டு பயப்படக்கூடாது இருட்டில்தான் நடசத்திரங்கள் நன்றாக ஜொலிக்கும்.

13)தினம் பத்து நிமிஷமாவது படியுங்கள். தினம் படிக்க வேண்டியது முக்கியம். மனசுக்குள் படியுங்கள்
ஒரே சமயத்தில் நான்கைந்து புத்தகம் வைத்துக் கொண்டு படிக்கலாம்

14)எல்லோருடைய முதல் புத்தகங்களை படியுங்கள். இருபது விழுக்காடு ·Fiction, எண்பது Non-Fiction. படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை வைத்திருங்கள்

15) வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் க்யூ வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்போதெல்லாம் புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள்

16)நூலகங்களுக்கு குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள்.

Happy Birth Day..!
Writer Sujatha sir..
We really miss u a lot..!
:(:(:(

வெண்டைக்காயின் மருத்துவ குணம் !!!



வெண்டைக்காயின் மருத்துவ குணம் !!!

வெண்டைக்காயில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.

வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதையை காபிப் பொடியாகப் பயன்படுத்துகிறார்க்ள.

கொழுப்பை கரைக்கும்

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.

வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

ஆண்மையை அதிகரிக்கும்

வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

நன்மை தரும் பாக்டீரியா

இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப்படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம்.

வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ் (laxative.) உள்ளது. இது உடல் நலனுக்கு ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது. வாய்வு கோளாறுகளை தடுக்கிறது. வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல் உதிர்தலை தடுக்கும்.

இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மினுமினுப்பான தோலையும் பெறலாம். சுறுசுறுப்பாகவும் வாழலாம்.