Total Pageviews

Saturday, June 16, 2012

மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் ,,,




மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.


மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.


மீனாட்சி அம்மன் திருக்கோவில் சுமார் ௮௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலினுள் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயககர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக் கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கலையழகு மிக்க மண்டபங்கள் இருக்கின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் இங்கு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாகும். இம்மண்டபத்தில் 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது. (இந்த புது மண்டபம் முழுவதும் சிறு வணிகக்கடைகளாக அமைக்கப்பட்டு உள்ளது.)
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும். 'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' ஆலயத்தில் மீனாட்சி , சுந்தரேஸ்வரர் விகிரக வடிவிலும் பூரிக்கப்படுகின்றன.

மதுரை மீனாட்சியில் அமைந்துள்ள முதன்மை விக்கிரகம் முழுவதுமாக தூய மரகத மாணிக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும். மரகத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில் காட்சி தரும் மூல விக்கிரகத்தினை "மரகதவல்லி" எனவும் அழைக்கின்றனர்.
மதுரை மீனாட்சி கோவில் 45 ஏக்கர் (180,000 சதுர மீட்டர்கள்) நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் மொத்த தள அமைப்பு 254 மீட்டர் நீளமும் 237 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.
இந்த ஆலயம் 8 கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்பணிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது தட்டுக்களை (அடுக்கு) கொண்ட கோபுரங்களுள் பிரசித்தமானதும் மிக உயரமானதுமாக தெற்கு வாசல் 170 அடி (52 மீற்றர்) உயரமுடையது.மற்றய வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161 அடி உயரம் என்பதும் குறிப்பிடதக்கது.
மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் (1000 தூண்கள்) மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது.
600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும் , மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
ஆலய உட்பகுதியில் ஒரு ஏக்கர் விஸ்தீரனத்தில் அமைந்துள்ள பொற்தாமரை குளமும் , தலவிருட்ஷமான கடம்ப மரமும் ஆலயத்தின் வரலாற்றில் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.
பலநூற்றாண்டு பழமையான கட்டிடவேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த ஆலயம் நவீன பல் வர்ண பூர்ச்சுக்களால் தற்காலத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ளது.
வரலாற்று தொன்மையும் பிரமிக்கவைக்கும் கலை நுணுக்கமும் ஒன்றுசேர உள்ள இந்த ஆலயமனது உலக அதிசையங்களின் வரிசையில் போட்டி போட்டது நினைவிருக்கலாம்.
ஒரு நகரம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும், அதன் கட்டமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் வீதி அமைப்புகள் எவ்வாறு உருவாகப்பட வேண்டும் என்பதை மதுரையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கர்ம வீரர் காமராஜர் கூறி உள்ளார். அது மீனாட்சி அம்மன் கோவிலையும் அதைச்சுற்றி உள்ள வீதிகளையும் கருத்தில் கொண்டே.

Wednesday, June 13, 2012

என் கைகளை வெட்டினார்கள்,,,




சிறு விதையில் நான் ,
மறைந்து முட்டினேன்,
பூமி வழி விட்டது,
மழை நீரில் வளர்ந்தேன்,
சூரியனை பார்த்து வளர்ந்தேன்,
வளர்ந்தேன், வளர்ந்தேன்,
கனி கொடுக்கும் அளவிற்கு
பல வருடமாக வளர்ந்தேன்,
சாலை ஓரமாம், சாலை
விரிவாக்கமாம், என் கைகளை
வெட்டினார்கள், உங்களை மாதிரி
அழ தெரியவில்லை, ஒன்றும்
மட்டும் புரிந்தது, எவ்வளவு தான்
உங்களுக்கு உழைத்தாலும் உங்க
மனித புத்திய காட்டிடுவீங்க,
என் கடைசி உயிர் மூச்சும்
உங்களுக்காவே.
 

காதல் யாரிடம் என்று தேடாதே




காதல்...........

அன்பு உன்னிடம்...

பாசம் என்னிடம்...

காதல் யாரிடம் என்று தேடாதே

அது நம் இருவரிடம்.....
 

ஒரு லிட்டர் பெட்ரோல் என்னால் 5 ரூபாய்க்கு தர முடியும் - ராமர் பிள்ளை சவால்




ஒரு லிட்டர் பெட்ரோல் என்னால் 5 ரூபாய்க்கு தர முடியும் - ராமர் பிள்ளை சவால்

பெட்ரோல் விலை ஏறும்போது எல்லாம் ராமர் பிள்ளை முகம் ஞாபகத்துக்கு வரும். என்ன செய்கிறார் என்று தேடிப் பார்த்தோம். சென்னையில் வசித்தாலும் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு இருக்கும் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் பிடித்தோம். 

இன்னும் அதே உற்சாகத்தோடு இருக்கிறார். ''ஆகஸ்ட் வரைக்கும் காத்திருங்க சார். நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியோட வர்றேன். எல்லா சதிகளையும் முறியடிச்சு வெற்றிக்கோட்டை நெருங் கிட்டேன்'' என்று உற்சாகம் ததும்பப் பேசும் ராமர் பிள்ளையின் பேச்சு முழுவதும் அதிரடி சரவெடி. ''நான் சாதாரணக் கிராமத்து மனுஷன். உலகத் தையே வாட்டி வதைக்கிற எரிபொருள் பிரச்னைக்கு என் அறிவுக்கு எட்டுன அளவில் ஒரு பொருளைக் கண்டுபிடிச்சு, 'மூலிகைப் பெட்ரோல்’னு பேர் வெச்சேன்.

அப்போ நாடே பரபரப்பாச்சு. நாலு மாநில முதல்வர்களுக்கு முன், அதை சோதனை செஞ்சு காட்டினேன். ஆனால் என் வளர்ச்சி பல பேரைப் பயமுறுத்த ஆரம்பிச்சது. 'நான் ஒரு ஃபிராடு’னு கதை பரப்ப ஆரம்பிச்சாங்க. 'ராமர் பிள்ளை கண்டுபிடிச்சது பெட்ரோலே இல்லை’னு சொன்னாங்க. சரி, இருக்கட்டும். நான் கண்டுபிடிச்சது பெட்ரோல் இல்லைன்னே வெச்சுக் குவோம். ஆனால், என் கண்டுபிடிப்பை வண்டியில் ஊத்தினா வண்டி ஓடுதுல்ல... அதனால் வண்டிக்கு எந்த பாதிப்பும் இல்லேல்ல... அப்புறம் என்ன?

இத்தனைக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் 42 ரூபாய் விற்ற காலத்தில் ஒரு லிட்டர் 13 ரூபாய்க்கு நான் கொடுத்தேன். கொஞ்ச நஞ்சம் இல்லீங்க, 13 லட்சம் லிட்டர் பெட்ரோல் தயாரிச்சு வித்திருக்கேன். அதைக்கூட, 'பெட்ரோலிய மூலப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிச்சுட்டு பொய் சொல்றார்’னு சொன்னாங்க. 42 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கி 13 ரூபாய்க்கு விற்க, நான் என்ன லூஸா? நான் தயாரிச்சு விற்ற 13 லட்சம் லிட்டருக்கும் அரசாங்கத்துக்கு வரி கட்டி இருக்கேன். என்னைத் தப்புன்னு சொல்ற அரசாங்கம், அப்புறம் ஏன் என்கிட்ட வரி வாங்குச்சு.

நான் கண்டுபிடிச்ச எரிபொருளுக்கு, 'மூலிகை பெட்ரோல்’னு பேர் வெச்சதுதான் நான் பண்ண ஒரே தப்பு. இப்போ சொல்றேன், நான் கண்டுபிடிச்சது மூலிகைப் பெட்ரோலே கிடையாது. அது ஒரு மாற்று எரிபொருள். அதுல என்ன தப்புன்னாலும் சொல்லுங்க, ஒப்புக்கிறேன். 'இதைப் போட்டா வண்டி சீக்கிரம் ரிப்பேர் ஆகுது. வழக்கத்தை விட குறைவான மைலேஜ் கிடைக்குது. சுற்றுச்சூழலுக்கு ஆபத்து’ இப்படி எந்தக் குறையையும் என் மாற்று எரிபொருளில் சொல்லவே முடியாது'' என்று படபடவெனப் பேசியவரிடம், ''ஆகஸ்ட் அறிவிப்புப் பற்றி சொல்லுங்களேன்'' என்றதும், அடுத்த ஷாக் கொடுத்தார்.

''என் கண்டுபிடிப்பை எப்படியாவது மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கணும்னு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜியை சந்திச்சுப் பேசினேன். அவர்கிட்ட என் மாற்று எரிபொருளை சோதனை செஞ்சு காட்டினேன். அதைத்தொடர்ந்து அண்ணா ஹஜாரே, பாபா ராம்தேவையும் சந்திச்சுப் பேசினேன். இந்த மும்மூர்த்திகளும் என் கண்டுபிடிப்பைப் பார்த்து ஆர்வமாயிட்டாங்க. அதிலும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி, என் கண்டுபிடிப்பைத் தத்து எடுத்துக்கிட்டதுபோல, எல்லா உதவிகளையும் செஞ்சார். கிட்டத்தட்ட 1.5 கோடி ரூபாய் செலவில் மாற்று எரிபொருள் தயாரிப்பதற்கான இயந்திரம் தயாராகிடுச்சு. ஹரித்துவாரில் இருக்கு. சென்னையிலும் இடம் பார்த்தாச்சு. கடைசிக் கட்ட வேலைகள் கொஞ்சம் பாக்கி. அதுவும் முடிஞ்சதுன்னா, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உற்பத்தி ஆரம்பிச்சுடும்.

பரபரப்பா வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். ஆனா இப்போகூட, ரவிசங்கர்ஜியை சந்திக்கப் போற ஒவ்வொரு தடவையும் அதைத் தடுக்கிறதுக்கு பல பேர் சதி செய்றாங்க. ஒருத்தனை வளரவிடாமக் காலைப் பிடிச்சு இழுத்துவிடுறதுல இத்தனைப் பேர் ஏன் ஆர்வமா இருக்காங்கன்னு புரியலை...'' என்ற ராமர் பிள்ளை, அவரது மாற்று எரிபொருள் ஒரு லிட்டர் அஞ்சு ரூபாய்க்குக் கிடைக்கும் என்று ஆச்சர்யப் படுத்துகிறார்.

''ஆமா சார், 15 வருஷத்துக்கு முன்னால ஒரு லிட்டர் 13 ரூபாய்னு வித்தேன். இப்போ தொழில்நுட்பம் வளர்ந்துடுச்சு. நானும் சில விஷயங்களைக் கத்துக்கிட்டேன். அதனால ஒரு லிட்டர் அஞ்சு ரூபாய்க்குத் தயாரிக்கலாம். வரி விதிச்சா அதிக பட்சம் ஏழு ரூபாய் வரும். இப்போ ஒரு லிட்டர் 70 ரூபாய். இந்தக் காசுக்கு 14 லிட்டர் மாற்று எரிபொருள் போடலாம். நம்புறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, நடைமுறைக்கு வரும்போது எல்லாம் சரியாகிடும். நிச்சயம் என்னை நிரூபிப்பேன். ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குத் திருப்புமுனையான செய்தியாக இது இருக்கும்!'' என்று படபடக்கிறார் ...பார்க்கலாம்!

நன்றி : ஜூனியர் விகடன்.




For further details on Collective Farming and  Solar Energy consulting, contact:
SUGA Consulting Services
Flat No.C-3-4, C-Block, 3rd Floor, Panna Oasis Apts,
35-36, M.K. Amman Koil Street, Mylapore, Chennai – 600004.
Mobile:
Airtel: 91-99400-58497,
BSNL: 91-94454-37117, 
Vodafone: 91768-71191
Landline: 91-44-2498-4148
http://www.suga-consulting-services.com/


FREE Consulting Services to Agriculturists in Tamil Nadu
---------------------------------------------------------
SUGA Consulting Services dedicated and offerig FREE Consulting Services to Agriculturists in Tamil Nadu to offer a potential growth in their levels.  All Agriculrists in Tamil Nadu can contact us for consulting services.


SUGA Consulting Services – Blog
Please visit our blog for our SUGA Consulting Services activities
http://suga-consulting-services.blogspot.com/


SUGA Employment Services – Blog
Please visit our blog of SUGA Employment Services, for Employment Opportunities and Employment Services.
http://suga-employment-services.blogspot.com/


SUGA Educational Services – Blog


Please visit our blog of SUGA Educational Services, to know the Educational Services provided by us.
http://suga-educational-services.blogspot.in/


SUGA Business Services – Blog
Please visit our blog of SUGA Business Services, to know the Business Services provided by us
http://suga-business-services.blogspot.in/


Email :
N.Sugavanam, CEO – nsugavanam@gmail.com,
For enquires in Consulting Services, with SUGA Consulting Services, send email to:
sugaconsultingservices@gmail.com 
For enquires in Employment Services, with SUGA Employment Services, send email to:
sugaemployment@gmail.com
For enquires in Business Services, with SUGA Business Services, send email to:
suga.business.services@gmail.com


Mobile:
Airtel: 99400-58497,
BSNL: 94454-37117, 
Vodafone: 91768-71191
Landline: 91-44-2498-4148

Sunday, June 10, 2012

Save the Indian Rupee with simple solutions....




Save the Indian Rupee with simple solutions
 

 

YOU CAN MAKE A HUGE DIFFERENCE TO THE INDIAN ECONOMY BY FOLLOWING FEW SIMPLE STEPS:- 
Please spare a couple of minutes here for the sake of India.
 

I got this article from one of my friend
s, but it's true. I can see this in day to day life.

Here's a small example:- 


Before 12 months 1 US $ = INR Rs 42
After 
12 months, now 1 $ = INR Rs 55.5

Do you think US Economy is booming? No, but Indian Economy is Going Down.


Our economy is in your hands....

INDIAN economy is in a crisis. Our country like many other ASIAN countries, is undergoing a severe economic crunch. Many INDIAN industries are closing down. The INDIAN economy is in a crisis and if we do not take proper steps to control those, we will be in a critical situation.

More than 30,000,00,000,00 rupees of foreign exchange are being siphoned out of our country on products such as cosmetics, snacks, tea, beverages, etc... which are grown, produced and consumed here.


A cold drink that costs only 70 / 80 paisa to produce, is sold for Rs.9 and a major chunk of profits from these are sent abroad. This is a serious drain on INDIAN economy.


We have nothing against Multinational companies, but to protect our own interests we request everybody to use INDIAN products only at least for the next two years. With the rise in petrol prices, if we do not do this, the Rupee will devalue further and we will end up paying much more for the same products in the near future. 


What you can do about it?


1. Buy only products manufactured by WHOLLY INDIAN COMPANIES.
2. ENROLL as many people as possible for this cause.....


Each individual should become a leader for this awareness. This is the only way to save our country from severe economic crisis. You don't need to give-up your lifestyle. You just need to choose an alternate product.


All categories of products are available from WHOLLY INDIAN COMPANIES.


LIST OF PRODUCTS

COLD DRINKS:-


DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE, and MASALA MILK...


INSTEAD OF
 COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-
 
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA 


INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE


TOOTH PASTE:-
 
USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK


INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT
.

TOOTH BRUSH: -
 
USE PRUDENT, AJANTA , PROMISE


INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B


SHAVING CREAM:-
 
USE GODREJ, EMAMI


INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE


BLADE:- 

USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA


INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE
 

TALCUM POWDER:-
 
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS


INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER


MILK POWDER:-
 
USE INDIANA, AMUL, AMULYA


INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.


SHAMPOO:-
 
USE LAKME, NIRMA, VELVETTE
 
INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE
 
MOBILE CONNECTIONS
:- 
USE BSNL, AIRTEL
 
INSTEAD OF HUTCH


Food Items
:- 
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma
 
INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W


Every
 INDIAN product you buy makes a big difference. It saves INDIA . Let us take a firm decision today. 

BUY INDIAN TO BE INDIAN - We are not against of foreign products.

WE ARE NOT ANTI-MULTINATIONAL. WE ARE TRYING TO SAVE OUR NATION. EVERY DAY IS A STRUGGLE FOR A REAL FREEDOM. WE ACHIEVED OUR INDEPENDENCE AFTER LOSING MANY LIVES.

THEY DIED PAINFULLY TO ENSURE THAT WE LIVE PEACEFULLY. THE CURRENT TREND IS VERY THREATENING.

MULTINATIONALS CALL IT GLOBALIZATION OF INDIAN ECONOMY. FOR INDIANS LIKE YOU AND ME, IT IS RE-COLONIZATION OF INDIA . THE COLONIST'S LEFT INDIA THEN. BUT THIS TIME, THEY WILL MAKE SURE THEY DON'T MAKE ANY MISTAKES.


WHO WOULD LIKE TO LET A "GOOSE THAT LAYS GOLDEN EGGS" SLIP AWAY?


PLEASE REMEMBER: POLITICAL FREEDOM IS USELESS WITHOUT ECONOMIC INDEPENDENCE


RUSSIA , S.KOREA , MEXICO - THE LIST IS VERY LONG!! LET US LEARN FROM THEIR EXPERIENCE AND FROM OUR HISTORY. LET US DO THE DUTY OF EVERY TRUE INDIAN.


FINALLY, IT'S OBVIOUS THAT YOU CAN'T GIVE UP ALL OF THE ITEMS MENTIONED ABOVE. SO GIVE UP AT LEAST ONE ITEM FOR THE SAKE OF OUR COUNTRY!
 
We would be sending useless forwards to our friends daily. Instead, please forward this mail to all your friends to create awareness. 


"LITTLE DROPS MAKE A GREAT OCEAN ."
PLEASE TRY TO BE AN INDIAN.....
 

Saturday, June 9, 2012

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன வெல் லாம் பயப்படாமல் சாப்பிடலாம்




'சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால், பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்?!'

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் கட்டுப்பாட்டோடு இருப்பார்கள். எதையும் சாப்பிட பயப்படுவார்கள். 'எனக்கு ஷுகராச்சே...' என்ற வசனத்தை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் அவர்களுக்கு மற்றவர்களைப் போல் எல்லாமே சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருக்கும். இப்படி அவர்கள் ஆசைபடுவது தவறில்லை, நிச்சயமாக அவர்களும் எல்லாமே சாப்பிடலாம்தான். ஆனால் அப்படி சாப்பிட நினைப்பவர்கள் அளவோடு சாப்பிடுவது நல்லது. இப்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன வெல் லாம் பயப்படாமல் சாப்பிடலாம்

1. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி சாதம் சாப்பிட பயப்படுவார்கள். அவர்கள் குத்தரிசி, சம்பா, பச்சையரிசி என எந்த அரிசியை உண்டாலும் அவை ஒரே மாதிரியே இரத்தத்தில் சர்க்கரையின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே அவர்கள் எந்த வகை சாதத்தை உண்டாலும், அளவோடு சாப்பிட வேண்டும். சப்பாத்தி மட்டுமே சாப்பிட்டாலும்கூட சர்க்கரை அளவு கட்டுப்படப் போவ தில்லை. அதிலும் கார்போஹைட்ரோட்தான் அதிக அளவு உள்ளது.

2. நீரிழிவுள்ளவர்கள் எந்த மாவில் தயாரித்த தின்பண்டங்களையும் உண்ணலாம். ஆனால் அதிலும் ஒரு அளவு வேண்டும்.

3. அதிலும் சோற்றுடன் நார்ப்பொருள் அதிகம் நிறைந்துள்ள காய்கறி களை சேர்த்து உண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்காது. அதிலும் எளிதில் கரையக்கூடிய நார்ப்பொருளாக இருந்தால் நல்லது. மேலும் அவர்கள் கடலை, பயறு, பருப்பு, சோயா போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

4. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவைத் தவிர மற்ற நேரங்களில் ஸ்நாக்ஸாக இனிப்பில்லாத பிஸ்கட்டை வாங்கி சாப்பிடுவர். ஏனென் றால் அதைச் சாப்பிட்டால் எதுவும் ஏற்படாது என்ற நம்பிக்கை,

ஆனால் உண்மையில் அதையெல்லம் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதில் இருக்கும் மாவுப்பொருள் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கச் செய்யும். இதைவிட பழங்களில் வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, அன்னாசி, மாம்பழம் மற்றும் காய்கறிகளில் வெள்ளரி, கேரட் போன்றவற்றை சப்பி சாப்பிட்டால், பசியும் அடங்கும், சர்க்கரையின் அளவும் அதிகரிக்காது. எதை உண்டாலும் எவ்வளவு உண்கிறோம் என்பதே முக்கியம்.

5. கிழங்குகளில் வத்தளைக் கிழங்கு இனிப்புக் கூடியது. ஆனால் அதன் கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்ற கிழங்குகளை விட குறைவானது. மேலும் இதில் காரட்டீன் சத்து இருப்பதால் மற்றக் கிழங்குகளை விட மிகவும் சிறந்தது. மரவள்ளிக் கிழங்கு கூட சாப்பிடலாம், ஆனால் அதில் மாப்பொருளை விட வேறு எதுவும் இல்லை. எனவே அவற்றை சற்று அளவோடே சாப்பிடலாம்.

'இங்க தமிழ்நாட்ல இருக்கிறவங்களுக்கு சர்க்கரை வியாதி வந்தால் சப்பாத்தி சாப்பிடுகிறார்கள்... பஞ்சாப்காரர்களுக்கு சர்க்கரை வியாதி வந்தால் என்ன சாப்பிடுவார்கள்?!... அவரவர் பிறந்த மண்ணில் என்னை விளைகிறதோ அவற்றைச் சாப்பிடுவதுதான் சிறந்தது. ஆனால் அதை சரியான முறையில் சாப்பிட வேண்டும்.. அவ்வளவுதான்.

நீரிழிவு நோயாளிகள் எந்த உணவு உண்டாலும் அளவோடும், மாவுப்பொருள் இருக்கும் உணவை, எதனோடு உட்கொள்கிறீர்கள் என்பதையும் முக்கியமாக நினைவில் கொண்டும் உண்ண வேண்டும்!

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும், இளமைப் பொலிவுடன் வாழ உதவும் கறிவேப்பிலை...





சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்
-------------------------------------------
இளமைப் பொலிவுடன்
வாழ உதவும் கறிவேப்பிலை

கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும். இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது. தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கும்.

மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது. கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும். பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.

கறிவேப்பிலைச் சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது. கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.