Total Pageviews

Tuesday, March 22, 2011

திருக்குறள் - 23

திருக்குறள் - 23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
பொருள்: நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்கு உரியவர்கள் ஆவார்கள்.

Monday, March 21, 2011

திருக்குறள் - 22


திருக்குறள் - 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிகொண் டற்று. 
பொருள்: உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? 
அது போலத்தான்  உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.

Thursday, March 17, 2011

திருக்குறள் - 21


திருக்குறள் - 21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
பொருள்: ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பத்துடனும், உயர்வாகவும் இடம் பெறும்.

Friday, March 11, 2011

திருக்குறள் - 20


திருக்குறள் - 20
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
பொருள்: உலகில் மழையே இல்லை என்றால் ஒழுக்கம் கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல் பட வேண்டும்.

Thursday, March 10, 2011

திருக்குறள் - 19


திருக்குறள் - 19
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
பொருள்: இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது பிறர் பொருட்டு செய்யும் தானத்திற்கும் தன் பொருட்டு மேற்கொள்ளும் நோன்பிற்கும் தடங்கலாகும்.

Wednesday, March 9, 2011

திருக்குறள் - 18


திருக்குறள் - 18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
பொருள்: வானமே பொய்த்து விடும் போது, அதன் பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லபடுகிறவர்களுக்கு விழாக்கள் எது? வழிபாடுதான் எது?

Tuesday, March 8, 2011

திருக்குறள் - 17


திருக்குறள் - 17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
பொருள்: ஆவியான கடல் நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாய் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.

Monday, March 7, 2011

திருக்குறள் - 16



திருக்குறள் - 16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
பொருள்: விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.

Tuesday, March 1, 2011

திருக்குறள் - 15



திருக்குறள் - 15
கெடுப்பதுஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதுஉம்  எல்லாம் மழை.
பொருள்: பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்ககூடியதும் பெய்வதன் காரணமாக  உயிர்களின் நலிந்த வாழ்விற்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.