Total Pageviews

64619

Thursday, May 26, 2011

திருக்குறள் - 42

திருக்குறள் - 42
 துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
பொருள்: பற்றட்ட துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும் பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.

Wednesday, May 25, 2011

திருக்குறள் - 41




திருக்குறள் - 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
பொருள்: பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

Thursday, May 19, 2011




திருக்குறள் - 40
செயற்பால தோறும் அறனே ஒருவற்கு
உயற்பால தோறும் பழி.
பொருள்: பழிக்கத் தக்கவைகளை செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்கு புகழ் சேர்க்கும்.

Tuesday, May 17, 2011

திருக்குறள் - 39


திருக்குறள் - 39
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
பொருள்: தூமையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும்.  அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது. இன்பமும் ஆகாது.

Wednesday, May 11, 2011

திருக்குறள் - 38



திருக்குறள் - 38
வீழ்நாள் படாமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைகுன் கல்.
பொருள்: பயனற்றதாக ஒரு நாள் கூட கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையை சீராக்கி அமைத்து தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

Friday, May 6, 2011

திருக்குறள் - 37


திருக்குறள் - 37

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
பொருள்: அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியதாக கருதி மகிழ்வுடன் வாழ்வார்கள். அற வழியில் செல்லாதவர்கள், பல்லக்கை தூக்கி சுமப்பவர்கள் போல் இன்ப துன்பம் இரண்டிலும் மன பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாக கருதுவார்கள்.

Thursday, May 5, 2011

திருக்குறள் - 36


திருக்குறள் - 36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
பொருள்: பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.