ஏன் பெங்களூரை விட்டு வந்தேன் என்கிற கேள்விக்கு இப்போதும் என்னிடம் சரியான பதில் இல்லை... - சுஜாதா எழுதியது!!
பெங்களூரை விட்டு விலகி ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை திரும்பும்போது (ஏக்கப் பெருமூச்சு நம்பர் 1) எங்கு நோக்கினாலும் பலகைப் பாலம் அமைத்து ரோடுகளில் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக என்று யாரும் சொல்வதில்லை. பத்திரிகைகளும் யாராவது குழந்தை தடுக்கி விழுந்து உயிரைவிட்டால் ஒழிய, கண்டுகொள்வதில்லை. இந்த நோண்டல், எந்த நோண்டல்? மழைநீர் சேகரிப்பா, பாதாள சாக்கடையா... இல்லை, சும்மா 'டச்' விட்டுப் போய்விடும் என்று பிராக்டீஸ#க்காக தோண்டுகிறார்களா... தெரிய வில்லை. ஒரு ரோட்டில் ஒருவர் தார் போட்டு முடிந்தவுடன் கேபிள்காரர்கள் தோண்டுவார்கள். அவர்கள் முடித்து மூடக் காத்திருந்து மின்வாரியங்கள் வே`றாரு சைடில் தோண்டு வார்கள். அவர் முடித்த கையோடு டெலிபோனர்கள் வருவார்கள்.
சென்னை நகரத்தில் தோண்டப்படாமல் ஒகே ஒக ரூட் உள்ளது. அது என்ன என்று நான் சொல்ல வேண்டியதில்லை. சென்னைவாசிகள் எல்லாருக்கும் தெரியும். மற்ற எந்த ரஸ்தாவும் கடப்பாரையிலிருந்து தப்பவே முடியாது. மாறாக, பெங்களூரில் ரிங் ரோட்டை முடித்துவிட்டார்கள். சர்வதேச விமானநிலையம் பெரிசாக வருகிறது. பாஜ்பாயின் கோல்டன் ட

்ரபிசியம் என்பதில் ஒரு பகுதியான பெங்களூர், பம்பாய் சாலையை மிகப் பெரிதாக விஸ்தரிக்கிறார்கள்.
1993-ல் புறப்பட்டபோது எல்லாரும் 'உனக்கென்ன பைத்தியமா..? பெங்களூரை விட்டு எப்படிச் செல்கிறாய்? அதும் சென்னைக்கு..' என்று கேட்டார்கள். அப்போது கோகுலாவிலும் வித்யாரண்யபுராவிலும் தாவாங்கட்டையைப் பிடித்து கெஞ்சி சைட் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். மகாலட்சுமி கரம் நீட்டி அழைத்த மருதோன்றிக்கைகள்கூட ஞாபகம் இருக்கிறது. ஐயாயிரத்துக்கும் பத்தாயிரத்துக்கும் வந்ததை நான் சென்னையின் சிலாக்கியங்களை சொல்லிக்கொண்டு புறக்கணித்தேன். இப்போது அந்த இடங்களெல்லாம்... ஹ#ம்! (ஏக்கப் பெருமூச்சு 2). சென்னையைப் பற்றி மனசை தேத்திக்கொள்ள சமாசாரங்கள் குறைந்துவிட்டன. அடை நன்றாக இருக்கிறது, டிசம்பர் சீஸன் கர்னாடக சங்கீதம் கேட்கலாம், மெரீனா உலகிலேயே ரெண்டாவது பீச் போன்ற காரணங்கள் போதவில்லை.
ஏன் பெங்களூரை விட்டு வந்தேன் என்கிற கேள்விக்கு இப்போதும் என்னிடம் சரியான பதில் இல்லை.

No comments:
Post a Comment