Total Pageviews

Friday, October 26, 2012

தினம் ஒரு மரம் - நாள் 44 - வாழை மரம் நமது தெய்வம்,,,



தினம் ஒரு மரம் - நாள் 44 - 

வாழை மரம் நமது தெய்வம்,,,


திரு சுரேந்திரன் (ஜித்தா, சௌதி அரேபியா) வாழை மரக்கன்றை நட்டார்.

முதல் முறையாக கடல்தாண்டி பசுமைவிடியலின் தினம் ஒரு மரம் திட்டம் சென்று சேர்ந்திருக்கிறது !

சௌதி அரேபியாவில் வசிக்கும் நண்பர் அலெக்ஸ் https://www.facebook.com/alex.dominic.37 அவர்கள் அதிக ஆர்வத்துடன் இதில் நாங்களும் கலந்துகொள்கிறோம் , என தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் உடனே செயலிலும் இறங்கி விட்டார். அந்த பாலைவன பிரதேசத்தில் மரம் நடுவது எத்தகைய சிரமம் என்பது அங்கே வசிப்பவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கலாம். திரு.அலெக்ஸ் அவர்களின் நண்பர் திரு.சுரேந்திரன் பலவேறு இடங்களில் இருந்து சிறிது சிறிதாக மண் சேகரித்து தங்களது வீட்டின் அருகில் சிறு தோட்டம் போட்டிருக்கிறார். கருவேப்பிலை, முருங்கை, சில மூலிகை செடிகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார்.

இத்திட்டத்திற்காக மரக்கன்று வாங்க தேடி அலைந்தும் கிடைத்தபாடில்லை...இறுதியாகவாழைக்கன்று ஒன்றை நட்டு ஆசையாக போட்டோ எடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.

மேலும் அங்கேயுள்ள நண்பர்கள் சிலரும் நாங்களும் மரம் நட்டு அனுப்புகிறோம் என்று சொன்னதை அறிந்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறோம்.

பொதுவாக வாழை ஒருமுறை தார் போட்டதும் கீழே சில சின்ன வாழைகன்றுகள் அதன் கிழங்கில் இருந்து முளைத்து வரும். அதே போல இந்த ஒரு கன்று இன்னும் பல கன்றுகளுக்கு ஆரம்பமாக இருக்கும் என்று பசுமை விடியல் நம்புகிறது.

திரு.அலெக்ஸ், திரு.சுரேந்திரன் மற்றும் நண்பர்களை பசுமைவிடியல் வாழ்த்தி தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment