Total Pageviews

Wednesday, November 21, 2012

நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் , தொழிலகங்களிலும் ஒரு மரம் நடுங்கள் - துபாய்...Plant a Tree in Dubai...





ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரு சிறிய பாலைவன நாடு ஏழு சிறு ராஜ்யங்களை உள்ளடக்கியது. இந்த நாடு உருவானதன் 41 ஆம் ஆண்டுகள் ஆகிறது.இந்த நாட்டின் தேசிய தினம் டிசம்பர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிற து. இந்த ஆண்டு தேசிய தின கொண்டாட்டங்களின ் கருவாக இந்த நாட்டின் துணை ஜனாதிபதியும், பிரதமரும் துபாய் ராஜ்யத்தின் ஆட்ச்சியாளருமான மாண்புமிகு ஷைக்.முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் நாட்டுக்கு விட்டுள்ள வேண்டுகோள் : "ஐக
்கிய மரம் (Union Tree)" நடுங்கள் என்பதாகும்! அதாவது நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் , தொழிலகங்களிலும் ஒரு மரம் நடுங்கள் என்பதாகும். இப்படி நடப்படும் ஒவ்வொரு மரக்கன்றையும் புகைப்படம் எடுத்து அவரது ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் பகிருமாறுவேண்டுகோள் விடுத்துள்ளார். நகராட்ச்சிகள், அரசுத்துறை அலுவலகங்கள், தன்னார்வ அமைப்புகள்,மற்ற ும் பல தனியார் நிறுவனங்கள் மரக்கன்றுகளை மொத்தமாக உருவாக்கி மக்களுக்கு வழங்க ஏற்பாடுகளை துவக்கியுள்ளனர் . வரும் டிசம்பர் இரண்டாம் தேதிக்குள் இங்கு பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கு ம், இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள் அவை கணிசமாக வளர்ந்து கண்ணுக்கும், மனதுக்கும் குழுமையை தருவதுடன் சுற்றுச்சூழலுக் கும் பெரும் மாற்றம் தரும்.
என்ன ஒரு உன்னதமான வழிமுறை? பாராட்டப்படவேண் டிய முயற்சி. நோக்கம் வெற்றியடைய வாழ்த்துவோம்!.
-நன்றி:கரீம் கனி

No comments:

Post a Comment