கவலையின் பிடியில் பனை மரம் ...
நான் சமீபத்தில் திருநெல்வேலி சென்று இருந்தபோது ரயிலில் என்னோடு வந்த (டில்லி) பெண்மணி, (திருச்செந்தூர் பக்கத்தில்) பனை மரத்தைப் பார்த்து அது என்ன மரம் என்று கேட்டார். நான் பதில் சொன்னேன், அதன் விரிவான பயன்களான - நுங்கு, கருப்பட்டி, பதநீர், ஓலை, பனங்கழி, கள், பனங்கிழங்கு, பனை நார்ப் பெட்டிகள் / கூடைகள், பனை ஓலை விசிறி, பனம்பழம், ஆண் பனை, பெண் பனை - என்று அடுக்கிக் கொண்டே போனேன். பெண்மணி ஆச்சரியப்பட்டு விட்டார், இந்த மரத்திலிருந்தா இத்தனை பொருட்கள் உற்பத்தியாகின்றன என்று. ஆனால், இன்று, லட்சக்கணக்கான பனை மரங்கள் நிறைந்த அந்தத் திருநெல்வேலியில், பனை மரம் ஏறுவார் இல்லாமல், இந்த சீசனில் பதநீர் கூடக் கிடைக்(குடிக்)காமல், திரும்பி வந்தேன். பனங்கிழங்கு மட்டும் தான் கிடைத்தது. நல்ல உடன்குடி கருப்பட்டி கூடக் கிடைக்கவில்லை. பனைத் தொழிலாரர்கள், ந(லி)சிந்து போய் வேறு தொழிலுக்கு மாறியதன் விளைவு இது. பனை பொருட்களை காண்பதே அரிதாகி விட்டது. ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்த பனை மரம், இப்போது கேட்பாரற்றுக் கிடக்கிறது. அந்தோ பரிதாபம் !!!!
No comments:
Post a Comment