Total Pageviews

Sunday, October 9, 2016

மண்ணில் விழுவது தப்பில்லை, ஆனால் விதையாக விழுந்து, மரமாக எழு.

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை,
முட்கள் இல்லாத கடிகாரம் போன்றது.
அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை.
-----------------------------------------------------------------------------------
மண்ணில் விழுவது தப்பில்லை,
ஆனால் விதையாக விழுந்து,
மரமாக எழு.

http://sugavanam-tamil-readings.blogspot.in/2016/10/blog-post.html
-----------------------------------------------------------------------------------
வெற்றி வந்தால் நம்பிக்கை வரும்.
ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
அதனால் நம்பிக்கையை வளர்த்துக்கொள்.
-----------------------------------------------------------------------------------
உன் வெற்றிகளை எண்ணி பார்க்காதே!
உன் தோல்விகளை மட்டும் எண்ணிப்பார்.
வெற்றியை விட உயர்ந்தது தோல்விகள் தான்...
-----------------------------------------------------------------------------------
மாலையில் மரணமென்று தெரிந்தும்
காலையில் அழுவதில்லை மலர்கள்.
நீ மட்டும் சோகங்களை நினைத்து
வாடுவதா அழகு?
-----------------------------------------------------------------------------------
நான் அமைதியை விரும்புகிறேன்.
இதில்
நான் - அகந்தை
விரும்புதல் - ஆசை
இரண்டையும் விட்டொழி.
-----------------------------------------------------------------------------------
மீதமிருப்பது “அமைதி” - அது உனக்கே.
எப்போதும் அடக்கமாயிரு,
எல்லாமிருந்தும் அமைதியாக
இருக்கும் நூலகம் போல.
-----------------------------------------------------------------------------------
வெற்றி என்பது உன் நிழல் போல.
நீ அதை தேடிப்போகவேண்டியதில்லை.
நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது உன்னுடன் வரும்.
-----------------------------------------------------------------------------------
லட்சியமும் அதற்கான வழிமுறைவகுப்பதும், சாலை வரைபடம் போல.
சாலை வரைபடம் உங்கள் பயணம் சுலபமான, இனிமையானதாக இருக்க உதவாது.
ஆனால் அது உங்களது பயணத்தின் சரியான பாதையாக இருக்கும்.
போராடினால் இறுதியில் வெற்றியே கிடைக்கும்.
-----------------------------------------------------------------------------------
நண்பனையும் நேசி,
எதிரியையும் நேசி.
உன் வெற்றிக்கு துணை நிற்பவன் - நண்பன்.
உன் வெற்றிக்கு காரணமானவன் - உன் எதிரி..
-----------------------------------------------------------------------------------
உங்கள் ஈடுபாடில்லாத எந்த காரியத்திலும் ஜெயிக்க முடியாது.
ஈடுபாடுடன் செய்யும் எந்த காரியமும் தோற்காது.
-----------------------------------------------------------------------------------
சாதாரண மனிதன் விழித்திருக்கும் போதும் தூங்குகிறான்.
சாதிக்கப்பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான். - இதில் நீ யார்?
-----------------------------------------------------------------------------------
பயணத்தின்போது செல்போனை பயன்படுத்தாதே.
எதிர்முனையில் அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்!
-----------------------------------------------------------------------------------
தவறுகள் அனுபவங்களை கொடுக்கும்.
அனுபவங்கள் தவறுகளை குறைக்கும்.
-----------------------------------------------------------------------------------
நீ மேலே உயரும்போது
நீ யாரென்று நண்பர்கள் அறிவார்கள்.
-----------------------------------------------------------------------------------
ஆனால் நீ கீழே போகும்போது
உண்மையான நண்பர்களை நீ அறிவாய்...
-----------------------------------------------------------------------------------
ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது
ஊமையாய் இரு.
-----------------------------------------------------------------------------------
புகழ்ந்து பேசும் போது
செவிடனாய் இரு.
எளிதில் வெற்றி பெறலாம்.
-----------------------------------------------------------------------------------
இயற்கை உனக்கு ஏராளமான சோதனைகளை தந்திருக்கும்.
இயற்கைக்கு தெரியும் அந்த சோதனைகளை உன்னால் மட்டுமே முறியடிக்க முடியுமென.
உனக்கும் தெரியுமா? முயன்று பார், முடியாது எதுவுமில்லை.
-----------------------------------------------------------------------------------
துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
அது கற்று தந்த பாடத்தை மறந்துவிடாதே!
-----------------------------------------------------------------------------------
உணரும் வரையில் உண்மையும் ஒரு பொய்தான்.
புரிகிற வரையில் வாழ்க்கையும் ஒரு புதிர்தான்...
-----------------------------------------------------------------------------------
காசுதான் சத்தம் போடும்,
பணம்(நோட்டு) அமைதியாகவே இருக்கும்.
நீயும் உன் மதிப்பை உயர்த்திக்கொள்.
---------------------

Sunday, May 29, 2016

Jawaharlal Nehru - இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக திகழ்ந்திருக்கிறார்

Jawaharlal Nehru - இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக திகழ்ந்திருக்கிறார்

http://sugavanam-tamil-readings.blogspot.in/2016/05/jawaharlal-nehru.html

https://en.wikipedia.org/wiki/Jawaharlal_Nehru

இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக திகழ்ந்திருக்கிறார். கிட்டத் தட்ட இருபது வருடங்கள் சுதந்திரம் கிடைத்தவுடன் உருவான டஜன் கணக்கான பிரச்சனைகளை திறமையாகவும் நேர்மையாகவும் கையாண்டு இருக்கிறார். பிடிவாதமாக இந்தியாவை ஜனநாயக நாடாக அறிவித்து தன்னையும் காந்தியையும் தீவிரமாக எதிர்த்த அம்பேத்காரையே சட்ட அமைச்சராக நியமித்து அரசியல் சாசனம் எழுதப் பணித்திருக்கிறார். இன்றளவும் உலகமே போற்றும் ஜனநாயகத் தூண்களை பெரும் அக்கறை, பொறுமையோடு நிறுவி இருக்கிறார். பெண்கள் மற்றும் ஒடுக்கப் பட்ட இனத்தவருக்கு சட்ட ரீதியாக பெரும் மாற்றங்கள் கொண்டு வர உழைத்திருக்கிறார். இந்தியாவை ஒருங்கிணைக்க பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார். ஏழ்மை மிகுந்திருந்த, படிப்பறிவற்ற ஒரு தேசத்தை நவீன உலகுக்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்களிப்பு அவருடையது.

காஷ்மீர், சீனா மாதிரி பல்வேறு பிரச்சனைகள் அவரால் தீர்க்க முடியவில்லை. அதை வைத்துதான் அவரை வலதுசாரிகள் தூற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அறுபது ஆண்டுகள் ஆகியும் அந்தப் பிரச்சனைகள் தீரவில்லை என்பதே அவை எவ்வளவு சிக்கல் நிறைந்தவை என்பது தெரியும். தவிர காஷ்மீர் மற்றும் சீனா இரண்டு பிரச்சனைகளையும் தீர்க்க அவருக்குப் பின் எந்தப் பிரதமரும் அவர் அளவுக்கு முயற்சி செய்யவில்லை.

இதை எல்லாம் தாண்டி திறமையான எழுத்தாளர், வரலாற்று அறிஞர், பேச்சாளர். பெரும் படிப்பார்வம் கொண்டவர். இலக்கியம், இசை, மது, மாது, தம்மு விஷயங்களில் ரசனைக்கார ஆசாமி.

நேருவுக்குப் பின் அவரின் திறமை/நேர்மையில் பாதி அளவு கூட கொண்ட ஒரு பிரதமரை இந்தியா இன்னமும் பார்க்கவில்லை.

நேருவைப் பற்றி அதிகம் படித்ததில்லை.

 நிறைய படிக்கணும். 

Friday, December 26, 2014

அப்பா 5 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும் நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேருதான் ஜெனரேஷன் கேப் !!!!!!

அப்பா 5 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும் 
நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் 
பேருதான் ஜெனரேஷன் கேப் !!!!!!

Sunday, December 14, 2014

சில்லறையாய் சிகரெட் விற்று சேர்த்த பணத்தை மொத்தமாய் செலவு செய்தார் பெட்டிக்கடை காரர் - புற்றுநோய்க்கு !

சில்லறையாய் சிகரெட் விற்று
சேர்த்த பணத்தை மொத்தமாய் செலவு செய்தார்
பெட்டிக்கடை காரர் - புற்றுநோய்க்கு !

Wednesday, October 8, 2014

கடவுளை காணவில்லை என்றாலும் நாங்கள்தான் பொறுப்பா.....

கடவுளை காணவில்லை என்றாலும் நாங்கள்தான் பொறுப்பா.....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர்.ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில்விசாரிப்பார்கள்.
பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை.
ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார்.
...
பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர்.
அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார்.
ஒரு பையன் அனுப்பப்பட்டான்.துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார்.
பின்னர் கேட்டார்,
''தம்பி,உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும்.கடவுள் எங்கே?சொல்,கடவுள் எங்கே இருக்கிறார்.?''
அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான்.
அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான்.
அவன் சொன்னான்,
''நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம்.இப்ப கடவுளைக் காணோமாம்.அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான்.ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள்.இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது.''

http://sugavanam-tamil-readings.blogspot.in/2014/10/blog-post.html

Tuesday, May 20, 2014

தாயே தெய்வம்!

அம்மா என்ற வார்த்தையை கேட்கும்போதெல்லாம் எனக்கு ஞாபகம் வருவது இரெண்டே பேர்தான். ஒன்று என்னை பெற்ற தாய்.  இரண்டாவது அம்மா - அன்னை தெரேசா...

http://sugavanam-tamil-readings.blogspot.in/2014/05/blog-post.html

"ஐயிரண்டு திங்களாய்
அங்கமெல்லாம் நொந்து பெற்று,
பையலென்றபோதே பரிந்தெடுத்து,
செய்ய இரு கைப்புறத்தில் ஏந்தி,
கனக முலை தந்தாளை,
எப்பிறப்பில் காண்பேன் இனி ?"

தாயே தெய்வம்!

அன்னையர் தின வணக்கங்கள்!

nsugavanam@gmail.com   9176244989  

Saturday, November 23, 2013

ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும் முத்தமிட ஒரு குழந்தைகூட இல்லை முதியோர் இல்லத்தில்..

* ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும்
முத்தமிட ஒரு குழந்தைகூட இல்லை
முதியோர் இல்லத்தில்..

* ஆணி குத்திய கால்களுடன்
செருப்பு தைக்கும் சிறுவன்..

* அழைத்த குரலுக்கு ஓடி வர
ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில்,
உயிருக்கு போராடி இருந்து கிடந்தார்
ஆம்புலன்ஸ் டிரைவர்.

* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.

* குங்குமம் வர இதழை
விரும்பி படிக்கும் வாசகி
விதவையானாள்.

*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள்
இன்று உண்ணாவிரதம்.

* அதிக வலிஎடுக்கிற போது
அம்மா என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை..!

Thanks for your friendship... Let us help each other...
Have a Nice Day... Plant a Tree and/or Water a Tree daily / on your Birthday / Wedding Day or on sundays and holidays... To get employment all over the world... SUGA Employment Services is growing every day... 
Please share this with your friends so that your friends who require job can get good employment...
BE/BTECH/MCA/MBA /ANY DEGREE/ SSLC/+2/DIPLOMA/ITI Experienced/ Freshers...
For any job / All jobs, send CV / Resume to:  nsugavanam@gmail.com Mobile: 9176244989

http://www.facebook.com/photo.php?fbid=382291185124406&set=a.245449212141938.59369.100000305828363&type=1&theater

www.sugaconsulting.in

-----------

Send resume to: nsugavanam@gmail.com or

sugaemployment@gmail.com         career@sugaconsulting.in

Contact N.Sugavanam. SUGA Employment Services,

( a Division of SUGA Consulting Services),

Office No,26, TNHB Complex, Luz Golden Enclave, Ground Floor,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Behind Luz Pillaiyar Temple, Behind 'MAX' Show Room

Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191,

 91766-11627, 91762-44979

http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

பணக்காரன் ஆகிவிட்டான் பாகன் இன்னும் பிச்சையெடுக்கிறது யானை..

 பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்னும் பிச்சையெடுக்கிறது
யானை..

Thanks for your friendship... Let us help each other...
Have a Nice Day... Plant a Tree and/or Water a Tree daily / on your Birthday / Wedding Day or on sundays and holidays... To get employment all over the world... SUGA Employment Services is growing every day... 
Please share this with your friends so that your friends who require job can get good employment...
BE/BTECH/MCA/MBA /ANY DEGREE/ SSLC/+2/DIPLOMA/ITI Experienced/ Freshers...
For any job / All jobs, send CV / Resume to:  nsugavanam@gmail.com Mobile: 9176244989

http://www.facebook.com/photo.php?fbid=382291185124406&set=a.245449212141938.59369.100000305828363&type=1&theater

www.sugaconsulting.in

-----------

Send resume to: nsugavanam@gmail.com or

sugaemployment@gmail.com         career@sugaconsulting.in

Contact N.Sugavanam. SUGA Employment Services,

( a Division of SUGA Consulting Services),

Office No,26, TNHB Complex, Luz Golden Enclave, Ground Floor,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Behind Luz Pillaiyar Temple, Behind 'MAX' Show Room

Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191,

 91766-11627, 91762-44979

http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

Monday, March 4, 2013

வீட்டை சுற்றி மரம் வளர்த்து கோடீஸ்வரன் ஆகலாம் !!

வீட்டை சுற்றி மரம் வளர்த்து கோடீஸ்வரன் ஆகலாம் !!

உங்கள் வீட்டை சுற்றி மரங்கள் நட இடம் இருந்தால் உங்கள் வீட்டை சுற்றி தேக்கு மரம் நூறு மரங்கள் நட்டு கோடீஸ்வரர் ஆகுங்கள்தற்போது ஒரு மரம் விலை ரூபாய் 25,000/- முதல் ரூபாய் 30,000/- வரை விற்கிறதுஇன்னும் இருபது வருடத்தில் ஒரு மரம் ஒரு லட்ச ரூபாய் வரை விலை போகும். ஆகவே உங்கள் வீட்டை சுற்றி ஒரு நூறு மரங்கள் நட்டு விட்டால் இருபது வருடம் கழித்து நீங்கள் கோடீஸ்வரர் ஆகி விடுவீர்கள்தேக்கு மரங்களை ஆடுமாடு போன்றவை மேய்வதில்லை. இதனால் அவை நன்கு வளர்ந்து உங்களுக்கு பலன் அளிக்கும்.

என் குழந்தையையும் வாழ விடு... மானிடா ....

என் குழந்தையையும் வாழ விடு... மானிடா ....

எங்களுக்கென்று இறைவன் கொடுத்த ஒரே வீடான மரங்களை வெட்டாதீர்கள்...

மரம்தான் எங்களுக்கான ஒரே உறைவிடம்.... 

அதையாவது எங்களுக்கு விட்டு வையுங்களேன் ......

Sunday, March 3, 2013

"மனைகள் விற்பனைக்கு" - Plots for Sale

உலகார் வியக்க 
ஊரார் உழைத்த 
ஓயாத விளைநிலத்தில் 
கேட்பாரில்லாமல் 
புதிதாய் விளைந்திருந்தது 
ஒரு பதாகை 

"மனைகள் விற்பனைக்கு"

Courtesy:  http://www.facebook.com/messages/elambarithi.k 

ஒரு மரத்தை வெட்டுவது நம்மை நாமே வெட்டிக்கொள்வதற்கு ஒப்பாகும்.

ஒரு மரத்தை வெட்டுவது நம்மை நாமே வெட்டிக்கொள்வதற்கு ஒப்பாகும்.

Wednesday, February 27, 2013

கவலையின் பிடியில் பனை மரம் ...

கவலையின் பிடியில் பனை மரம் ...

நான் சமீபத்தில் திருநெல்வேலி சென்று இருந்தபோது ரயிலில் என்னோடு வந்த (டில்லி) பெண்மணி, (திருச்செந்தூர் பக்கத்தில்) பனை மரத்தைப் பார்த்து அது என்ன மரம் என்று கேட்டார். நான் பதில் சொன்னேன், அதன் விரிவான பயன்களான - நுங்கு, கருப்பட்டி, பதநீர், ஓலை, பனங்கழி, கள், பனங்கிழங்கு, பனை நார்ப் பெட்டிகள் / கூடைகள், பனை ஓலை விசிறி, பனம்பழம், ஆண் பனை, பெண் பனை - என்று அடுக்கிக் கொண்டே போனேன். பெண்மணி ஆச்சரியப்பட்டு விட்டார், இந்த மரத்திலிருந்தா இத்தனை பொருட்கள் உற்பத்தியாகின்றன என்று. ஆனால், இன்று, லட்சக்கணக்கான பனை மரங்கள் நிறைந்த அந்தத் திருநெல்வேலியில், பனை மரம் ஏறுவார் இல்லாமல், இந்த சீசனில் பதநீர் கூடக் கிடைக்(குடிக்)காமல், திரும்பி வந்தேன். பனங்கிழங்கு மட்டும் தான் கிடைத்தது. நல்ல உடன்குடி கருப்பட்டி கூடக் கிடைக்கவில்லை. பனைத் தொழிலாரர்கள், ந(லி)சிந்து போய் வேறு தொழிலுக்கு மாறியதன் விளைவு இது. பனை பொருட்களை காண்பதே அரிதாகி விட்டது. ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்த பனை மரம், இப்போது கேட்பாரற்றுக் கிடக்கிறது. அந்தோ பரிதாபம் !!!!

Friday, February 22, 2013

Banatheertham falls - பாண தீர்த்தம் நீர்வீழ்ச்சி...

பாண தீர்த்தம்:

To view the English translation see below the Tamil version

முண்டந்துறையில் உள்ள காரையார் அணைக்கட்டிற்கு அருகே அமைந்துள்ளது இந்நீர்வீழ்ச்சி. பாணதீர்த்தம் ஒரு புனித நீர்வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. இது பாபநாசத்திலிருந்து 12கி.மீ தொலைவில் உள்ளது.தாமிரபரணி நதி சந்திக்கும் காரையார் அணையில் இவ்வற்றாத நீர்வீழ்ச்சி தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சம் சுற்றுலா பயணிகள் இதனால் ஈர்க்கப்படுகின்றனர். காரையாரிலிருந்து 15 நிமிட படகுப் பயணத்தின் மூலம் இவ்விடத்தைச் சென்றடையலாம். பயணத்தின் போது அழகிய வனத்தையும் பல்வேறு இயற்கைக் காட்சிகளையும் கண்டுகளிக்கலாம். இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிட நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பார்வை நேரம் காலை 6மணி முதல் மாலை 6 மணி வரை ஆகும்.

Banatheertham falls near Karaiyar Dam in Mundanthurai Range considered a sacred water falls. It is situated 12 KM away from the Papanasam check post. It is Perennial Water falls where the Thamirabarani River meets the Karaiyar Dam. This falls is attracted by lakhs of tourists every year. Fifteen minutes travel through boat in Karaiyar Reservoir is needed to reach this fall. During boat travel, good forest landscape can be seen. Entrance fee is collected to visit this falls. Visiting time is morning 6 am to evening 6 pm

SUGA = Success Unlimited Guaranteed Always...

For any job, all jobs:

SUGA Employment Services

(A division of SUGA Consulting Services),

Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

For further details contact:

N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  

CEO, SUGA Consulting Services
Email:  ceo@sugaconsulting.in 

nsugavanam@gmail.com www.sugaconsulting.in
www.suga-consulting-services.com 

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

Send resume to: nsugavanam@gmail.com or sugaemployment@gmail.com

Contact N.Sugavanam. SUGA Employment Services, ( a Division of SUGA Consulting Services), Office No,26, TNHB Complex, 180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191, 99623-11627, 91766-11627

http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

http://suga-employment-services.blogspot.com/

அற்புதமான கீரைகள் பட்டியல்...!!!

அற்புதமான கீரைகள் பட்டியல்...!!! 

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையில் இருக்கும் முக்கிய சத்துபொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைதிறனுக்கு உதவும் சத்துப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது .

* கீரைகளை சமைப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரை வீணாக கீழே கொட்டிவிடக் கூடாது. மேலும் கீரைகளை சமைக்கும்-பாத்திரங்களை சமைக்கும்போது திறந்து வைக்காமல் மூடி வைக்க வேண்டும்.

* கீரைகளை வெயிலில் உலர்த்தக்கூடாது. அப்படி உலர்த்தினால் அவற்றில் இருக்கும் கரோட்டீன்கள் வீணாகி விடும்.

* கீரைகளை பொரிப்பதை தவிர்க்க வேண்டும்.

முருங்கைக்கீரை, முருங்கையிலை
பொன்னாங்காணி
குப்பை மேனி
வல்லாரை
தூதுவளை
பசளிக் கீரை, பசளி
இலைக்கோசு - lettuce
பூக்கோசு - cauliflower
முட்டைக்கோசு
அகத்திக் கீரை
குறிஞ்சா
முளைக்கீரை
அரைக்கீரை
ஆரைக்கீரை
சிறுகீரை
மணத்தக்காளிக் கீரை
மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை
கோவைக்கீரை
குறிஞ்சாக்கீரை
புளிச்சங்கீரை
பிரண்டை
முல்லை
முசுட்டை
பேசில்

ப்ரோக்கோலி
பசலைக்கீரை -
லீக்ஸ்
வெந்தயக்கீரை
கரிசலாங்கண்ணி
சண்டியிலை
முசுமுசுக்கை
நொச்சி
குல்லை
கொத்தமல்லிக்கீரை,மல்லிக்கீரை
காணாந்தி
காரை
குமுட்டி -
கொய்லாக்கீரை - l
சண்டிக்கீரை -
தேங்காய்ப்பூக்கீரை -
பயிரி
புதினாக்கீரை
காசினிக்கீரை
தண்டுக்கீரை
முடக்கற்றன் கீரை
மயில் கீரை
முள்ளங்கிக்கீரை
பருப்புக்கீரை..!!! 

SUGA = Success Unlimited Guaranteed Always...

For any job, all jobs:

SUGA Employment Services

(A division of SUGA Consulting Services),

Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

For further details contact:

N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  

CEO, SUGA Consulting Services
Email:  ceo@sugaconsulting.in 

nsugavanam@gmail.com www.sugaconsulting.in
www.suga-consulting-services.com 

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

Send resume to: nsugavanam@gmail.com or sugaemployment@gmail.com

Contact N.Sugavanam. SUGA Employment Services, ( a Division of SUGA Consulting Services), Office No,26, TNHB Complex, 180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191, 99623-11627, 91766-11627

http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

http://suga-employment-services.blogspot.com/

ரூ. 6,000 செலவில் காற்றாலை ...

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6,000 செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீட்டு மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். தமிழகத்தில் மின்தட்டுப்பாடாக உள்ளதால் கடும் மின்வெட்டு ஏற்பட்டுகிறது. இதனால் பொது மக்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழில் நிறுவனத்தினர், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவற்றை வாங்கி வேண்டா வெறுப்பாக பயன்படுத்தி வருகின்றனர். ஏழை, எளிய மக்களோ மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வாலிபர்கள் சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6,000 செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீட்டு மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். சுரேஷ் தொழிற்கல்வி பாடப்பிரிவில் எலக்ட்ரீஷியனுக்கு படித்தவர். ராமு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருபவர். இவர்கள் இருவரும் சேர்ந்து காற்றாலை மூலம் புதிய மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டனர். ஆனால் அதற்கு உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் அதையும் அவர்களே உற்பத்தி செய்யும் முடிவுக்கு வந்தனர். இதற்காக சுரேஷ் வீட்டின் மேல் மாடியில் 15 அடி உயர கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இறக்கையை பொறுத்தினர். அதில் மேல் பக்கம் கிரைண்டருக்கு பயன்படுத்தும் சக்கரத்தையும், கீழே டைனமோ வைத்து அதன் ஒரு பகுதியில் சிறிய அளவிலான சக்கரத்தையும் வைத்துள்ளனர். மேலே உள்ள சக்கரத்திற்கும், கீழே உள்ள சக்கரத்திற்கும் ஒரு பெல்ட் மூலம் இணைப்பு கொடுத்துள்ளனர். இதனால் இறக்கை காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு சுற்றும் போது அதன் மூலம் டைனமோ மின்சாரத்தை தயாரிக்கிறது. அதிலிருந்து வரும் ஒரு மின் கம்பி பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்கிறது. இதை கொண்டு சுரேஷ் தனது வீட்டிற்கு தேவையான அளவு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால் மின்சாரம் இருக்கும் போது கூட சுரேஷின் தன் வீட்டில் தயாரிக்கும் மின்சாரத்தையே அதிக அளவு பயன்படுத்தி வருகிறார். இதனால் மாதம் ரூ.600 மின் கட்டணம் செலுத்தி வந்த அவர் தற்போது தனது வீட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்தி வருவதால் மாதம் ரூ. 200 வரை மட்டுமே கட்டுவதாக கூறப்படுகின்றது. மேலும், கடலோர பகுதிகளில் அதிக அளவு காற்று அடிப்பதால் அந்தப் பகுதியில் உள்ளவர்களின் வீடுகளில் அனைத்து தேவைகளுக்கும் காற்றை கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தை பயன்படுத்தலாம் என்கின்றனர் இந்த சாதனை மனிதர்கள். சுரேஷ் வீட்டின் மேல் அமைக்கப்பட்டுள்ள மின்சாரம் தயாரிக்கும் காற்றாடியை உளுந்தூர்பேட்டையை மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து ஆச்சயர்த்துடன் பார்த்து செல்கின்றனர். இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் என பல்வேறு சாதனங்களை அதிக அளவு விலை கொடுத்து வாங்குதை விட ரூ. 6,000 மட்டுமே செலவழித்து குறுகிய இடத்தில் காற்றை பயன்படுத்தி அனைவரின் வீடுகளிலும் மின்சாரம் தயாரித்து பயன்படுத்தலாமே.

SUGA = Success Unlimited Guaranteed Always...

For any job, all jobs:

SUGA Employment Services

(A division of SUGA Consulting Services),

Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

For further details contact:

N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  

CEO, SUGA Consulting Services
Email:  ceo@sugaconsulting.in 

nsugavanam@gmail.com www.sugaconsulting.in
www.suga-consulting-services.com 

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

Send resume to: nsugavanam@gmail.com or sugaemployment@gmail.com

Contact N.Sugavanam. SUGA Employment Services, ( a Division of SUGA Consulting Services), Office No,26, TNHB Complex, 180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191, 9176244979

http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

http://suga-employment-services.blogspot.com/