Total Pageviews

Monday, December 26, 2011

ஒருவரைப் பற்றி கடுஞ் சொற்கள் பேசுவதற்கு முன் பேசவே முடியாத ஒரு மனிதரை நினைத்து பாருங்கள்


ஒருவரைப் பற்றி கடுஞ் சொற்கள் பேசுவதற்கு முன் பேசவே முடியாத ஒரு மனிதரை நினைத்து பாருங்கள்.

உணவின் தரம் பற்றி புகார் தெரிவிப்பதற்கு முன் உணவே கிடைகாதவர்களை பற்றி நினைத்துப் பாருங்கள்.

நமது வாழ்க்கைத் துணை பற்றி புகார் அல்லது கோபம் கொள்ளும் முன் துணையே இல்லாத மனிதர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.

நம் வாழ்க்கை இப்படி ஆனதே என்று புலம்பும் முன் வாழ்க்கையே மறுக்கப்பட்டவர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.

எப்பொழுதும் குழந்தைகள் பற்றிக் கடிந்து பேசும் போது குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.

சுத்தமாக வீடு இல்லையே என்று அலுத்துக் கொள்ளும் முன் சாலையோரத்தில் வாழும் மனிதர்களை நினைத்துப் பாருங்கள்.

சீராக வாகனத்தை ஓட்ட முடியவில்லையே எனப் புலம்பும் முன் பெரும்பாலும் நாள் தோறும நடந்தே செல்பவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

நமது பணி பற்றி பிறர குறையோ குற்றமோ சொல்லிப் புலம்புவதற்க்கு முன் பணி கிடைக்காமல் அவதிப்படுபவர்களை நினைத்துப் பாருங்கள்.

இப்படி ஒவ்வொருவரும் தன்னைத் தானே ஒரு தராசில் நிறுத்திப் பார்த்து எது நல்லது என பகுத்துப் பார்த்தால் நாம் வாழ்வில் உயரலாம்.

இதையே வள்ளுவர் சொல்கிறார்,

"ஏதிலார் குற்றம்போல் தன் குற்றம் கான்கிற்பின்
தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு".

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள். -அன்னை தெரசா


இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள். 
-அன்னை தெரசா

Thursday, October 27, 2011

நான் படித்த புத்தகங்கள்

நான் படித்த புத்தகங்கள்:
  1. என் சரித்திரம் - உ வே. சுவாமிநாத அய்யர் 
  2. ஓலைப் பட்டாசு - சுஜாதா 
  3. ஜன்னல் மலர்  - சுஜாதா
  4. மறுபடியும் கணேஷ்  - சுஜாதா
  5. ஆஸ்டின் இல்லம்  - சுஜாதா
  6. காயத்ரி  - சுஜாதா
  7. 21 ஆம் விளிம்பு  - சுஜாதா
  8. ஒரு பிரயாணம் ஒரு கொலை  - சுஜாதா
  9. அனுமதி  - சுஜாதா
  10. நகரம்  - சுஜாதா
  11. தீண்டும் இன்பம்  - சுஜாதா
  12. 60 அமெரிக்க நாட்கள்  - சுஜாதா
  13. எதையும் ஒரு முறை  - சுஜாதா
  14. ஆதலினால் காதல் செய்வீர்  - சுஜாதா
  15. நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்  - சுஜாதா
  16. கண்ணீரில்லாமல்  - சுஜாதா
  17. ஹைகூ  - சுஜாதா
  18. பார்வை 360 - திரையுலக அனுபவங்கள்  - சுஜாதா
  19. தங்க முடிச்சு  - சுஜாதா
  20. குரு பிரசாத்தின் கடைசி தினம்  - சுஜாதா
  21. 24 ரூபாய் தீவு  - சுஜாதா
  22. தோரணத்து மாவிலைகள்  - சுஜாதா
  23. ஓடாதே  - சுஜாதா
  24. இரண்டாவது காதல் கதை  - சுஜாதா
  25. நிறமற்ற வானவில்  - சுஜாதா
  26. விடிவதற்குள் வா  - சுஜாதா
  27. அப்சரா  - சுஜாதா
  28. பதினாலு நாட்கள்  - சுஜாதா
  29. கரை எல்லாம் செண்பக பூ  - சுஜாதா
  30. பிரிவோம் சந்திப்போம் - பாகம் 1  - சுஜாதா
  31. பிரிவோம் சந்திப்போம் - பாகம் 2  - சுஜாதா
  32. ஜீனோம்  - சுஜாதா
  33. என் இனிய இயந்திரா  - சுஜாதா
  34. மீண்டும் ஜீனோ  - சுஜாதா
  35. கொலை அரங்கம்  - சுஜாதா
  36. வசந்த கால குற்றங்கள்  - சுஜாதா
  37. இருள் வரும் நேரம்  - சுஜாதா
  38. பிரியா  - சுஜாதா
  39. மத்யமர்  - சுஜாதா
  40. கற்றதும் பெற்றதும் - பாகம் 1  - சுஜாதா
  41. கற்றதும் பெற்றதும் - பாகம் 2   - சுஜாதா
  42. சுஜாதாவின் நாடகங்கள் - முழு தொகுப்பு  - சுஜாதா
  43. வைரங்கள்  - சுஜாதா
  44. வாய்மையே சில சமயம் வெல்லும்  - சுஜாதா

Friday, September 2, 2011

திருக்குறள் - 57



திருக்குறள் - 57 
சிறைகாக்கும் காப்பவென் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
பொருள்: தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும். 

Thursday, July 21, 2011

பசித்துப் புசிப்பவன் நீண்ட நாள் உயிர் வாழ்வான்...

நாம் எந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டாலும் பசியாறும். நன்கு வயிறு பசித்த பின்பே உணவருந்த வேண்டும். பசித்துப் புசிப்பவன் நீண்ட நாள் உயிர் வாழ்வான்...

திருக்குறள் - 56


திருக்குறள் - 56
தற்காத்துக் தற்கொண்டார் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
பொருள்: கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.

Tuesday, July 12, 2011

திருக்குறள் - 55


திருக்குறள் - 55
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
பொருள்: கணவன் வாக்கினை கடவுள் வாக்கை விட மேலாக கருதும் பத்தினி தெய்வங்கள் பெய்யென்றால் பெய்யும் மழை.

Thursday, July 7, 2011

திருக்குறள் - 54

திருக்குறள் - 54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
பொருள்: கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதை விடப் பெருமைக்குரியது வேறு யாது?

Wednesday, July 6, 2011

திருக்குறள் - 53


திருக்குறள் - 53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.
பொருள்: நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.

Tuesday, July 5, 2011

திருக்குறள் - 52


திருக்குறள் - 52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
பொருள்: நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்கு தனி சிறப்பு கிடையாது.

Monday, July 4, 2011

திருக்குறள் - 51


திருக்குறள் - 51
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
பொருள்: இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்க்கைக்குப் பெருந்துணையாவாள்.

Tuesday, June 28, 2011

திருக்குறள் - 50


திருக்குறள் - 50
வையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
பொருள்: உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் உள்ள தெய்வத்திற்கு இணையாக வைக்கப்படுவான்.

Thursday, June 23, 2011

திருக்குறள் - 49


திருக்குறள் - 49
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
பொருள்: இல்வாழ்க்கை அறன் எனப் படும். பழிப்புக்கு இடம் இல்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.

Tuesday, June 21, 2011

திருக்குறள் - 48


திருக்குறள் - 48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
பொருள்: தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பை விடப் பெருமை உடையதாகும். 

Friday, June 17, 2011

திருக்குறள் - 47


திருக்குறள்  - 47
 இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
பொருள்: நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராக திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.

Wednesday, June 15, 2011

திருக்குறள் - 46




திருக்குறள் - 46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போய்ப் பெறுவ தெவன்.
பொருள்: அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் பெற்றிட இயலுமா?  இயலாது.

Friday, June 10, 2011

திருக்குறள் - 45


திருக்குறள் - 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
பொருள்: இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

Wednesday, June 8, 2011

திருக்குறள் - 44


திருக்குறள் - 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் என்னான்றும் இல்.
பொருள்: பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

திருக்குறள் - 44

திருக்குறள் - 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் என்னான்றும் இல்.
பொருள்: பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

Monday, June 6, 2011

திருக்குறள் - 43


திருக்குறள் - 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
பொருள்: வாழ்ந்து மறைந்தோரை நினைவு கூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல், ஆகிய கடமைகளை நிறைவேற்ற தன்னை நிலைபடுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுகுரியனவாகும்.

Thursday, May 26, 2011

திருக்குறள் - 42

திருக்குறள் - 42
 துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
பொருள்: பற்றட்ட துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும் பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.

Wednesday, May 25, 2011

திருக்குறள் - 41




திருக்குறள் - 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
பொருள்: பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

Thursday, May 19, 2011




திருக்குறள் - 40
செயற்பால தோறும் அறனே ஒருவற்கு
உயற்பால தோறும் பழி.
பொருள்: பழிக்கத் தக்கவைகளை செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்கு புகழ் சேர்க்கும்.

Tuesday, May 17, 2011

திருக்குறள் - 39


திருக்குறள் - 39
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
பொருள்: தூமையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும்.  அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது. இன்பமும் ஆகாது.

Wednesday, May 11, 2011

திருக்குறள் - 38



திருக்குறள் - 38
வீழ்நாள் படாமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைகுன் கல்.
பொருள்: பயனற்றதாக ஒரு நாள் கூட கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையை சீராக்கி அமைத்து தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

Friday, May 6, 2011

திருக்குறள் - 37


திருக்குறள் - 37

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
பொருள்: அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியதாக கருதி மகிழ்வுடன் வாழ்வார்கள். அற வழியில் செல்லாதவர்கள், பல்லக்கை தூக்கி சுமப்பவர்கள் போல் இன்ப துன்பம் இரண்டிலும் மன பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாக கருதுவார்கள்.

Thursday, May 5, 2011

திருக்குறள் - 36


திருக்குறள் - 36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
பொருள்: பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.

Friday, April 29, 2011

திருக்குறள் - 35



திருக்குறள் - 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொருள்: பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்கு பொருந்தாதவையாகும்.

Thursday, April 28, 2011

திருக்குறள் - 34


திருக்குறள் - 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
பொருள்: மனம் தூய்மையாக இருப்பதே அறம்.  மற்றவை ஆரவாரத்தை தவிர வேறொன்றுமில்லை.

Tuesday, April 26, 2011

திருக்குறள் - 33


திருக்குறள் - 33
ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
பொருள்: செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

Monday, April 25, 2011

திருக்குறள் - 32


திருக்குறள் - 32
அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
பொருள்: நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை. அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

Thursday, April 21, 2011

திருக்குறள் - 31

திருக்குறள் - 31
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
பொருள்: சிறப்பையும் செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத் தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

Wednesday, April 20, 2011

திருக்குறள் - 30


திருக்குறள் - 30
அந்தணர் என்போர் அறவோர்மற்  றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
பொருள்: அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்டு அருள் புரியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவர்.

Monday, April 18, 2011

திருக்குறள் - 29


திருக்குறள் - 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காதல் அரிது.
பொருள்: குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால், அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

Monday, April 11, 2011

திருக்குறள் - 28


திருக்குறள் - 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
பொருள்: சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காடும்.

Sunday, April 10, 2011

பெண்ணென்னும் பேரழகு


பெண்ணென்னும் பேரழகு
----------
சலசலக்கும் சிற்றோடை.
அது உனது சிரிப்பை சொல்கிறது.
அடர்ந்த மரங்கள்.
அதன் குளுமையான நிழல்.
அது உன் இனிமைக்கு ஈடாகாது.
தென்றல் காற்றில் சலசலக்கும் மர இலைகள் சத்தம்.
அது உன் பேச்சுக்கு ஈடாகாது.
வானத்தில் அலை அலையாய் கரு மேகங்கள்.
அவை காற்றிலாடும் உன் கூந்தலுக்கு ஈடாகாது
தூரத்தே தெரியும் மலை முகடுகள்.
பரந்து விரிந்த புல்வெளிகள்.
அவை உன் அழகிற்கு ஈடாகாது

http://www.facebook.com/pages/Sugavanam-Tamil-Writings/106713212737036

Thursday, April 7, 2011

திருக்குறள் - 27


திருக்குறள் - 27
சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரி லான் கட்டே உலகு.
பொருள்: ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்

திருக்குறள்............


பால்களோ மூன்று,
அடிகளோ இரண்டு,
வள்ளுவன் ஒருவன்,
வழங்கிய வரிகள்,
வையத்து இயல்பையும்,
...வைத்தடைக்கியது 1330ல்,
திருக்குறள்............

Wednesday, April 6, 2011

திருக்குறள் - 26


திருக்குறள் - 26
செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்
செயற்கரிய செய்கலா தார்.
பொருள்: பெருமை தரும் செயல்களைப் புரிவோரை பெரியோர் என்றும், சிறுமையான செயல்களை அன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களை சிறியோர் என்றும் வரையறுக்கலாம்.

காவல் தெய்வம்

காவல் தெய்வம்

கருப்ப சாமி காவல் தெய்வமாம்
பிறகு எதற்கு கதவில் தொங்கும்
கனத்த பூட்டு !!!

Tuesday, April 5, 2011

திருக்குறள் - 24


திருக்குறள் - 24
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
பொருள்: உறுதி என்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவர், துறவு என்னும் நிலத்திற்கு ஏற்ற வித்தாவார்.

திருக்குறள் - 25




திருக்குறள் - 25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
பொருள்: புலன்களை அடக்க முடியாமல் வழி தவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுபடுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

Tuesday, March 22, 2011

திருக்குறள் - 23

திருக்குறள் - 23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
பொருள்: நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்கு உரியவர்கள் ஆவார்கள்.

Monday, March 21, 2011

திருக்குறள் - 22


திருக்குறள் - 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிகொண் டற்று. 
பொருள்: உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? 
அது போலத்தான்  உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.

Thursday, March 17, 2011

திருக்குறள் - 21


திருக்குறள் - 21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
பொருள்: ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பத்துடனும், உயர்வாகவும் இடம் பெறும்.

Friday, March 11, 2011

திருக்குறள் - 20


திருக்குறள் - 20
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
பொருள்: உலகில் மழையே இல்லை என்றால் ஒழுக்கம் கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல் பட வேண்டும்.

Thursday, March 10, 2011

திருக்குறள் - 19


திருக்குறள் - 19
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
பொருள்: இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது பிறர் பொருட்டு செய்யும் தானத்திற்கும் தன் பொருட்டு மேற்கொள்ளும் நோன்பிற்கும் தடங்கலாகும்.

Wednesday, March 9, 2011

திருக்குறள் - 18


திருக்குறள் - 18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
பொருள்: வானமே பொய்த்து விடும் போது, அதன் பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லபடுகிறவர்களுக்கு விழாக்கள் எது? வழிபாடுதான் எது?

Tuesday, March 8, 2011

திருக்குறள் - 17


திருக்குறள் - 17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
பொருள்: ஆவியான கடல் நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாய் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.

Monday, March 7, 2011

திருக்குறள் - 16



திருக்குறள் - 16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
பொருள்: விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.

Tuesday, March 1, 2011

திருக்குறள் - 15



திருக்குறள் - 15
கெடுப்பதுஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதுஉம்  எல்லாம் மழை.
பொருள்: பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்ககூடியதும் பெய்வதன் காரணமாக  உயிர்களின் நலிந்த வாழ்விற்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.

Wednesday, February 23, 2011

திருக்குறள் - 14



திருக்குறள் - 14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

பொருள்:  மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

Monday, February 21, 2011

திருக்குறள் - 13




திருக்குறள் - 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
பொருள்: கடல் நீர் சூழ்ந்த உலகமாயினும், மழை நீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.

Wednesday, February 16, 2011

ஆத்தி சூடி


ஆத்தி சூடி - ஔவையார்

அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்.
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல் 
எண் எழுத்து இகழேல் 
ஏற்பது இகழ்ச்சி  

திருக்குறள் - 12



திருக்குறள் - 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை. 
பொருள்:  யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத் தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அருந்தும் உணவாகவும் ஆகி அறிய தியாகத்தை செய்கிறது.

Thursday, February 10, 2011

திருக்குறள் - 10


திருக்குறள் - 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பொருள்:  இறைவன் அடி சேராதவர்கள், வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முடியாது.

திருக்குறள் - 11



திருக்குறள் - 11
-- வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரப் பாற்று.
-- பொருள்:  உலகத்தை வாழ் வைப்பது மழையாக அமைந்திருப்பதால் மழை அமிழ்தம் என போற்றப்படுகிறது.