Total Pageviews

Wednesday, July 11, 2012

மசாலா தோசை....



மசாலா தோசை....



நம்மில் பலருக்கு பிடித்த உணவு மசாலா தோசை. அதை ஒருவர் தன் வாழ்நாளில் ருசித்தே ஆக வேண்டும் என்கிறது அமெரிக்கா. உலகின் 10 சிறந்த உணவுகளை அமெரிக்க பத்திரிகையான “ஹபிங்டன் போஸ்ட்” பட்டியலிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் இந்திய உணவுக்கு இடம் கிடைத்திருப்பது உணவு பிரியர்களுக்கு சந்தோஷ செய்தியாக அமைந்துள்ளது.


பத்து உணவுகளை கொண்டுள்ள இந்த பட்டியலில் நமது தென்னிந்திய உணவான மசாலா தோசையும் இடம் பெற்றுள்ளது.இந்த பட்டியலில் சீனாவின் பேகிங்டக், அமெரிக்காவின் பிபிஓ ரிப்ஸ், ஜப்பானின் டெப்பான்யாகி உள்ளிட்ட உணவுகளின் பட்டியலில் மசாலா தேசையும் தனக்கென ஒரு இடத்தை கைப்பற்றி உள்ளது. அந்த பத்திரிக்கையில் மசாலா தோசையை ருசித்து இப்படி வர்ணித்து எழுதி இருக்கிறார்கள்.

“ஒரு சாப்பாடு தட்டை நிரப்புகிற அளவில் மசாலா தோசை இருக்கும். அரிசி மாவும், உளுந்தமாவும் கலந்து தயாரிக்கும் தோசைக்கு உள்ளே நாக்குக்கு ருசியான மசாலா, தொட்டுக்கொள்ள பூண்டு சட்னி… அட… அருமை என்றால் அப்படியொரு அருமை” என மசாலா தோசை வர்ணிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பிரான்சு, கிரேக்கம், இத்தாலி, ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு நாடுகளின் உணவுகளும் இடம் பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 உணவுகளையும் ஒருவர் தன் வாழ்நாளில் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment