செல்போன் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?************ SHARE WITH UR FRIENDS***************செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.ஏனெனில், நீங்க செல்போன் பயன் படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும்.இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்
எம்.ஜி.ஆர் முதல்வராக பதவியேற்ற பின்னர் பிரதமர் மொராஜியின் ஒப்புதலோடு, 1978 – ஆம் ஆண்டு கவிஞர் வாலியின் கதை, திரைக்கதை, வசனத்தில் “உன்னைவிட மாட்டேன்” படத்தில் நடிப்பது என முடிவான போது யாரை இசையமைப்பாளராக போடுவது என்று கேள்வி வந்தது. “புதுசா இளையராஜான்னு ஒரு பையன் வந்திருக்கானே… அந்தப் பையனைப் போட்டுக்கலாம். அவனோட பாட்டெல்லாம் கேட்டேன் ரொம்ப நல்லாப் பண்ணுறான்” என்று இளையராஜாவை உன்னைவிட மாட்டேன் படத்திற்கு எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுத்துள்ளார்.இளையராஜா இசையில் டி.எம்.எஸ் பாட, பாடல் பதிவோடு பிரசாத் ஸ்டூடியோவில் “உன்னைவிட மாட்டேன்” படத்தின் பூஜை கோலாகலமாக நடந்துள்ளது. அப்போது எடுத்த புகைப்படம் உங்களுக்காக…
இளையராஜா இசையமைப்பாளராக ஆவதற்கு முன்பே எஸ்.பி.பியுடன் இணைந்து பல ஊர்களில் பல மேடைக் கச்சேரிகள் செய்துள்ளாராம். இளையராஜா டிரினிட்டி மியூஸிக் காலேஜ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது; அவரை கோவையில் நடைபெற்ற ஒரு கச்சேரிக்கு வற்புறுத்தி அழைத்துச் சென்றுள்ளார்.அனைவரும் திரும்பி வரும்வழியில் கார் விபத்துக்குள்ளாகி ரோட்டில் இருந்து உருண்டு தலைகீழாக கவிழ்ந்துவிட்ட நிலையில், எஸ்.பி.பி சற்று சுதாரித்துஎழுந்து பார்த்தபோது கார் கண்ணாடியில் சிகப்பு நிறத்தில் திரவம் வழிந்தது கண்டு, மிகவும் பயந்து விட்டாராம், "வரமாட்டேன் என்று சொன்னவனை கூட்டி வந்து இப்படி ஆகிப்போச்சே" என்று. ஆனால் அவர் பயந்தபடி எதுவும் ஆகவில்லை. யாருக்கும் எந்த காயமும் இன்றி அதிஷ்ட்டவசமாக தப்பித்துவிட்டார்களாம். கார் கண்ணாடியில் வழிந்தது "இன் ஜின் ஆயில்".
இளையராஜாவும் எஸ்.பி.பியும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் எஸ்.பி.பிக்கு சொந்தமான "கோதண்ட பாணி" ரெக்கார்டிங் தியேட்டரில் இளையராஜா பதிவு செய்த ஒரே பாடல் "அபூர்வசக்தி369" என்ற படத்தில் இடம்பெற்ற "ராசலீலை" என்ற பாடலாகும்.
வந்தனம் எங்கள் வசீகரனே!நேசிக்கத் தெரிஞ்சவனுக்கு..காதலி. வாசிக்கத் தெரிஞ்சவனுக்கு..சுஜாதா! தன் எழுத்தையே விற்கமுடியாத படைப்பாளர்கள் நடுவில..தமிழின் தவிர்க்கமுடியாத தனி சகாப்தம்..எழுத்தாளர் சுஜாதா!சுஜாதாவை பத்தி ‘கேப்ஸ்யூல்’ வார்த்தைல சொல்றதுன்னா..ராட்சஸன்! ஆகாயம் முதல் பாதாளம்வரை அத்தனை சப்ஜெக்ட்டுகள்லயும் விசுவரூபம் எடுத்து நின்னு விசும்பவெச்ச குசும்பன்! இதுக்குமேல பாராட்டுனா ‘போதும் ஜல்லியடிச்சது’னு சொல்லி சுஜாதாவே சிரிப்பாரு.இந்த எழுத்துலகப் பிதாமகனை நான் சந்திச்ச சம்பவம் ஒவ்வொண்ணையும் சதா நினைச்சுப்பாத்து எனர்ஜி ஏத்திக்கறேன் ஜி! ‘ஆனந்த விகடன்’ல நான் இருந்தப்போ அடிக்கடி பேசியிருக்கேன். அந்த அறிமுகத்துல சுஜாதாவை நேர்ல சந்திக்கணும்னு ஆசைப்பட்டேன். ஃபோன் பண்ணேன். பேர் சொன்னேன்.சுஜாதா ரொம்ப ரசனையான ஆசாமி!(அவர் ஸ்டைல்!) அற்பமானது..நுட்பமானதுனு பேதமில்லாம கவனிச்சு ரசிப்பார். ‘‘எம்.பி உதயசூரியனா! பேர் நல்லாருக்கே! காலைல பீச்சுக்கு வர்றீங்களா..ஈவ்னிங் வீட்டுக்கு வர்றீங்களா?’’னு மெல்லிசான குரல்ல கேட்டார். ‘‘பீச்சுக்கு வர்றேன் சார்’’னேன். அன்னிக்கு ராத்திரி என் தூக்கத்தை கெடுத்தது வேறெந்த கவர்ச்சிக்கன்னியும் கெடயாது..சத்தியமா சுஜாதாதான்!பொழுது விடிஞ்சது. ‘காந்தி’ காத்து வாங்கற கடற்கரை. காத்திருந்தேன். ‘தேவன் வந்தார்’. இங்கிட்டும் அங்கிட்டும் நடக்கறவங்க விஷ் பண்ணிகிட்டே கடக்க..மையமா சிரிச்சுகிட்டே சுஜாதா ‘பைய்ய’ நடந்தாரு. பக்கத்துல போய் ‘‘வணக்கம் சார்’’னேன். ஒருநொடி என்னை உன்னிப்பா ‘ஸ்கேன்’ பண்ணிட்டு ‘‘வாங்க உதயசூரியன்’’னு அசால்ட்டா சொல்ல..என் நடுமுதுகு ‘திடுக்‘னுச்சு.அதுக்கு முன்ன சுஜாதா என்னை முன்ன பின்ன (‘சிவாஜி’ பட காமெடியை யோசிச்சுராதீங்க!) பாத்ததில்ல! ‘‘அப்புறம் எப்டி சார் கண்டுபிடிச்சீங்க?’’ன்னு ஆச்சரியப்பட்டேன். அலட்டிக்காம சுஜாதா சொன்னாரு..‘‘பீச்ல என்னை பெரும்பாலும் பாக்கறவங்க ‘நீங்க சுஜாதாதானே‘ன்னு கேப்பாங்க. சிறும்பாலும் பாக்கறவங்க ‘யாரோ ஒரு மியூசியம் ஆசாமி’ன்னு திகிலா விலகிப்போவாங்க. இதுல ‘வணக்கம் சார்‘னு வந்தா அது நீங்களாத்தான் இருக்கணும்னு ஒரு குன்ஸா அடிச்சேன்’’னார் பாருங்க..அதான் சுஜாதா!எழுத்துல ‘புலிப்பாய்ச்சல்’ பாயற சுஜாதா..பேசறப்போ அடிக்கற எக்கச்சக்க நக்கல்ல சிரிச்சே ‘குளிர்காய்ச்சல்’ வந்துரும். அன்னிக்கு செமஜாலி மூடுல இருந்தார். டேபிள்ல ‘மகாமகா தடிமனா’ ஒரு புத்தகம் இருந்துச்சு. ‘‘என்ன சார் இந்த புக் கல்லாப்பெட்டி சைஸ்ல இருக்கே’’னு கேட்டேன்.அடுத்த நொடி..‘பம்பர் ப்ரைஸ் விழுந்த மாதிரி சர்ப்ரைஸ்’ ஆனேன். ஆமாங்க. அந்த கமெண்ட்டுக்கு ஒரு குழந்தையைப்போல வஞ்சனையில்லாம சிரிச்சார் சுஜாதா. எனக்கோ பெருமை தாங்கல! அதேஜோர்ல ‘‘சார்..இதை முழுசா படிச்சிட்டீங்களா?’’ன்னேன்.‘‘இப்பத்தான் பத்து பக்கம் முடிச்சிருக்கேன்’’னார். உடனே நான் ‘‘அப்போ நிச்சயம் இது ‘கல்லா‘ பெட்டிதான் சார்’’னு (‘கல்லாத‘!) சிலேடையில விளையாட..‘அட!’னு ஒரே வார்த்தையில நூறுகிலோவுக்கு பாராட்டினவர் ‘‘தமிழ் உங்களுக்கு சோறு போட்ரும்!’’னார்!‘‘இந்த கட்டுரைத்தொடரை ‘ஏன்..எதற்கு..எப்படி’மாதிரி கேள்வி பதிலா கொண்டுபோலாமா சார்?’’னேன். ‘‘வேணாம் வேணாம்! ‘ என்னை ஒரு ‘சர்வரோக நிவாரணியா‘ நினைச்சு ‘சொப்பன ஸ்கலிதம்.. விரை வீக்கம்..ஆண்மைக்குறைவு தீர என்ன வழி‘னு கேட்டே திணறடிச்சிருவாங்க! அப்புறம் அத்தனையும் எனக்கு வந்துரும்..கேள்விகளா!’’னு ‘நச்‘னு சொல்ல..சேர்ந்து சிரிச்சோம்.‘சொர்க்கவாசல்’ திறக்கற ஸ்ரீரங்கம் ரங்கநாதனை சேவிச்சாலும்..‘சொர்க்கம் நரகம்ங்கிறதெல்லாம் உட்டாலக்கடி’னு சொல்றவரு இந்த ரங்கராஜன். ‘‘இறந்த பிறகு சொர்க்கத்துக்கு போகணுமா..நரகத்துக்கு போகணுமானு கேட்டா..நரகத்துக்கு டிக்கெட் வாங்கத்தான் எனக்கு விருப்பம்! ஏன்னா..சொர்க்கம் போரடிக்கும். படுசுவாரஸ்யமான மனிதர்கள்லாம் நரகத்துலதான் இருப்பாங்க!’’னு ஜாலியா சொன்னவரு சுஜாதா!எதுக்கும்..வரப்போற ‘தீபாவளி ஸ்பெஷல்’ பத்திரிகைகளை வாங்கிஆற அமரப் படிங்க! ‘சொர்க்கம் நரகம்’னுகூட வினோதமான கட்டுரை எழுதியிருப்பார் அமரர் சுஜாதா!(நன்றி: ‘சாக்லெட் சந்திப்புகள்’- நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு)
காற்றில் இயங்கும் டாடா கார்!காற்றில் இயங்கும் நவீன தொழில்நுட்பம்கொண்ட காரை வெற்றிகரமாகச் சோதனை செய்திருக்கிறது டாடா. பெட்ரோல், டீசல் இல்லாமல் மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை வடிவமைக்க, கார் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் டாடா நிறுவனம் லக்ஸம்பர்க் நாட்டில் உள்ள 'மோட்டார் டெவலப்மென்ட் இன்டர்நேஷனல்’ நிறுவனத்துடன் இணைந்து, காற்றில் இயங்கும் கார் தயாரிப்பை 2007-ம் ஆண்டு துவங்கியது. காற்றைச் சக்தியாகக்கொண்டு இயங்கும் இந்த கார், அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்லுமாம். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு இருக்கிறது டாடா.
For further details on Collective Farming and Solar Energy consulting, contact:
SUGA Consulting Services
Flat No.C-3-4, C-Block, 3rd Floor, Panna Oasis Apts,
35-36, M.K. Amman Koil Street, Mylapore, Chennai – 600004.
Mobile:
Airtel: 91-99400-58497,
BSNL: 91-94454-37117,
Vodafone: 91768-71191
Landline: 91-44-2498-4148
http://www.suga-consulting-services.com/
FREE Consulting Services to Agriculturists in Tamil Nadu
---------------------------------------------------------
SUGA Consulting Services dedicated and offerig FREE Consulting Services to Agriculturists in Tamil Nadu to offer a potential growth in their levels. All Agriculrists in Tamil Nadu can contact us for consulting services.
SUGA Consulting Services – Blog
Please visit our blog for our SUGA Consulting Services activities
http://suga-consulting-services.blogspot.com/
SUGA Employment Services – Blog
Please visit our blog of SUGA Employment Services, for Employment Opportunities and Employment Services.
http://suga-employment-services.blogspot.com/
SUGA Educational Services – Blog
Please visit our blog of SUGA Educational Services, to know the Educational Services provided by us.
http://suga-educational-services.blogspot.in/
SUGA Business Services – Blog
Please visit our blog of SUGA Business Services, to know the Business Services provided by us
http://suga-business-services.blogspot.in/
Email :
N.Sugavanam, CEO – nsugavanam@gmail.com,
For enquires in Consulting Services, with SUGA Consulting Services, send email to:
sugaconsultingservices@gmail.com
For enquires in Employment Services, with SUGA Employment Services, send email to:
sugaemployment@gmail.com
For enquires in Business Services, with SUGA Business Services, send email to:
suga.business.services@gmail.com
Mobile:
Airtel: 99400-58497,
BSNL: 94454-37117,
Vodafone: 91768-71191
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால்உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?******************************************மாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலைப் பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைக.ள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது..
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மைல் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது.
இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ?? துரதஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும்..
ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும்
மூச்சை இழுத்து விட வேண்டும் ..
இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்..
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ
அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால்
நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது
இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..
உயிரைக் காக்கும் இது போன்ற விசயங்களை பகிருங்கள் !!!!