Total Pageviews

Monday, June 4, 2012

இளையராஜா இசையமைப்பாளராக ஆவதற்கு முன்பே எஸ்.பி.பியுடன் இணைந்து பல ஊர்களில் பல மேடைக் கச்சேரிகள் செய்துள்ளாராம்




இளையராஜா இசையமைப்பாளராக ஆவதற்கு முன்பே எஸ்.பி.பியுடன் இணைந்து பல ஊர்களில் பல மேடைக் கச்சேரிகள் செய்துள்ளாராம். இளையராஜா டிரினிட்டி மியூஸிக் காலேஜ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது; அவரை கோவையில் நடைபெற்ற ஒரு கச்சேரிக்கு வற்புறுத்தி அழைத்துச் சென்றுள்ளார்.

அனைவரும் திரும்பி வரும்வழியில் கார் விபத்துக்குள்ளாகி ரோட்டில் இருந்து உருண்டு தலைகீழாக கவிழ்ந்துவிட்ட நிலையில், எஸ்.பி.பி சற்று சுதாரித்துஎழுந்து பார்த்தபோது கார் கண்ணாடியில் சிகப்பு நிறத்தில் திரவம் வழிந்தது கண்டு, மிகவும் பயந்து விட்டாராம், "வரமாட்டேன் என்று சொன்னவனை கூட்டி வந்து இப்படி ஆகிப்போச்சே" என்று. ஆனால் அவர் பயந்தபடி எதுவும் ஆகவில்லை. யாருக்கும் எந்த காயமும் இன்றி அதிஷ்ட்டவசமாக தப்பித்துவிட்டார்களாம். கார் கண்ணாடியில் வழிந்தது "இன் ஜின் ஆயில்".

இளையராஜாவும் எஸ்.பி.பியும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் எஸ்.பி.பிக்கு சொந்தமான "கோதண்ட பாணி" ரெக்கார்டிங் தியேட்டரில் இளையராஜா பதிவு செய்த ஒரே பாடல் "அபூர்வசக்தி369" என்ற படத்தில் இடம்பெற்ற "ராசலீலை" என்ற பாடலாகும்.

No comments:

Post a Comment