Total Pageviews

Monday, April 30, 2012

ஆடாதொடை - அருமருந்து
ஆடாதொடை தமிழக்ம் முழுவதும் காணப்படும் ஒரு குறுஞ்செடியினம்.நீண்ட ஈட்டி வடிவ இலைகளையும்,வெள்ளை நிறப்பூக்களையும் உடைய செடி.சளி,இருமல்,வயிற்றுபூச்சிகளை போக்குவதில் அருமருந்து இது.
1.இலைச்சாற்றை சில துளிகள் தேனுடன் கலந்து சாப்பிட்டு வர இரத்தவாந்தி,மூச்சுத்திணறல்,இரத்தம் கலந்த சளி குணமாகும்.
2.இலைச்சாற்றை எருமைப்பாலுடன் காலை மாலை சாப்பிட்டு வர சீதபேதி,இரத்தபேதி குணமாகும்.
3.இதன் 10 இலைகள் எடுத்து நீரில் போட்டு காய்ச்சி தேனுடன் கலந்து 40 நாட்கள் காலை,மாலை சாப்பிட்டு வர என்புருக்கி,சளிசுரம்,விலாவலி ஆகியன குணமாகும்.
4.ஆடாதொடை வேருடன்,கண்டங்கத்திரி வேர் கலந்து இடித்து அதில் 1கிராம் வீதம் தினமும் தேனில் கலந்து சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு,சுவாசகாசம்,சன்னி,ஈளை,இருமல்.எலும்புருக்கி,ஆகியன தீரும்.
5,இதன் உலர்ந்த இலைகளை ஊமத்தை இலையில் சுருட்டி புகைபிடிக்க மூச்சுத்திணறல் தீரும்.
6,இதனுடன் அக்காரகாரம்,சித்தரத்தை,இலவங்கம்,ஏலம்,சர்க்கரை,தேன் கலந்து செய்யப்படும் ஆடாதொடை மணப்பாகு என்புருக்கி,மார்ச்சளி,இருமல்,ஃபுளுரசி,ஆஸ்துமா,நிமோனியா ஆகியவை குணமாகும்.குரல் இனிமை கிடைக்கும்.
7.ஆடாதொடையுடன்கோரைக்கிழங்கு,பற்படாகம்,விஷ்ணுகிரந்தி,துளசி,சீந்தில்,கஞ்சாங்கோரை,பேய்ப்புடலை ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் கஷாயம் அனைத்து சுரங்களுக்கும் குணமளிக்கக் கூடியது.
8.கருவுற்ற பெண்கள் இதன் வேரில் கஷாயம் வைத்து கடைசி மாதத்தில் அருந்தி வர சுகப்பிரசவம் உண்டாகும்
 

Sunday, April 29, 2012

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !மாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாகமற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளதுநீங்கள் மிகவும் படபடப்பாகவும்தொய்வாகவும் உள்ளீர்கள் திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்,
அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம் , ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??
  துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும் ,ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் ,இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்
 
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும் ,இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
 
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..தேவை இல்லாத விசயங்களையும் ,ஜோக்குகளையும் பகிர்வோர் உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள் !!!!

Tuesday, April 24, 2012

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்....

Saturday, April 21, 2012

கேன்ஸர் செல்களை அழிக்கும் திரிபலா


கேன்ஸர் செல்களை அழிக்கும் திரிபலாஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் திரிபலா என்ற மூலிகை கணையப் புற்று நோய் வராமல் தடுப்பதாக பிட்ஸ்பெர்க் பல்கலைக் கழகத்தில் உள்ள புற்று நோய் மையத்தின் புதிய ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

கணையப் புற்று நோயால் பாதித்த சுண்டெலிகளை வைத்து இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது. மூன்று வெவ்வேறு மூலிகைகள் சேர்ந்த உலர்ந்த பொடித்த திரிபலாவை சுண்டலிகளுக்கு கொடுத்ததில் புற்று நோயால் பாதித்த கணைய செல்கள், சாதாரண செல்கள் தினமும் அழிவதைப் போல அழிந்தது தெரியவந்துள்ளது.

பொதுவாக நம் உடலில் இருக்கும் கேன்சர் பாதித்த செல்கள் சீரற்ற முறையில் வளர்ந்துகொண்டுதான் இருக்கும். அழிந்த, தேவையில்லாத சாதாரண செல்கள் தினமும் அழிவதைப்போல அழியாது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் நடந்த அமெரிக்க புற்று நோய் ஆராய்ச்சி மையத்தின் ஆண்டுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

"இரைப்பை, குடல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மூலிகை திரிபலா. திரிபலாவை நீரில் கலந்து சாப்பிடும்போது பசியைத் தூண்டும் என்பதுடன் ஜீரணம் தொடர்பான பிரச்சினைகள் குணமாகும். தவிர, ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.

சுண்டெலிகளுக்கு திரிபலா பொடியைக் கொடுத்ததில் கேன்சர் செல்களை அழிப்பதில் எந்தக் பக்க விளைவும் இல்லாமல் முழு வேகத்துடன் செயல்பட்டது உறுதியானது" என்கிறார் டாக்டர் சஞ்சய் கே.ஸ்ரீவத்சவா.இந்த ஆராய்ச்சியில் பிரதானப் பங்கு வகித்த இவர், பிட்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.

இந்த ஆராய்ச்சி பற்றி விளக்கிய சஞ்சய் ஸ்ரீவத்சவா, "மனிதர்களைப் பாதித்த கணையப் புற்று நோய் செல்களை சுண்டெலிகளுக்குச் செலுத்தி, தினமும் 2 மி.கிராம் திரிபலா பொடியை வாரம் ஐந்து நாட்கள் கொடுத்தோம். திரிபலா கொடுக்காத சுண்டெலிகளைவிட வேகமாக இவற்றின் புற்று நோய் செல்கள் அழிக்கப்பட்டன. செல்களில் உள்ள புரதத்தின் அளவும் அதிகரித்தது. அதிகம் பேரைப் பாதிக்கும் புற்று நோய்களில் கணையப் புற்று நோய் 5வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து இதில் ஆராய்ச்சி செய்துவருகிறோம்" என்கிறார்.

இந்த ஆராய்ச்சி பற்றி சாய்ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் டாக்டர் வனிதா முரளிகுமார் சொல்வது, "இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளின்மேல் ஒரு புதிய வெளிச்சத்தை இந்த ஆராய்ச்சி முடிவுகள் கொடுத்துள்ளன. கடுக்காய், நெல்லிக்காய், தன்ரிக்காய் இந்த மூன்றையும் காய வைத்து பொடியாக்கி செய்யப்படுவதுதான் திரிபலா.

ஆயுர்வேத மருத்துவத்தில் 1000 ஆண்டுகளாக திரிபலா, வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்குப் பயன்படுகிறது. தவிர, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் தோலின் பளபளப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. தினமும் திரிபலா சாப்பிட்டால் உடலின் உள்உறுப்புகளை அம்மா, குழந்தையைப் பாதுகாப்பதுபோல பாதுகாக்கும் என்ற நம்பிக்கை உண்டு" என்கிறார்.

மணிகண்டன் என்பவர் தன்னுடைய பிளாக்கில் இதனை பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை இந்த வார புதிய தலைமுறையில் தன்னுடைய செய்தியாக வெளியிட்டுள்ளது..

http://manikandanji.blogspot.in/2012/04/blog-post_16.html

வெயில் கால உஷ்ணக் கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு!வெயில் கால உஷ்ணக் கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு!
பாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோ - சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது.

பாசிப்பயறில் உள்ள சத்துக்கள்

இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

காய்ச்சல் குணமாகும்

சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

நினைவுத் திறன் கூடும்

மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அழகு சாதனப்பொருள்

குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

நன்றி : கூடல்

Tamil Nadu Arasiyal Unmaigal - Truth: சாராயம் குடிக்கும் ஆண்களின் குடும்பம் நாசமாய் போய்...

Tamil Nadu Arasiyal Unmaigal - Truth: சாராயம் குடிக்கும் ஆண்களின் குடும்பம் நாசமாய் போய்...: சாராயம் குடிக்கும் ஆண்களின் குடும்பம்  நாசமாய் போய் விடும்...

Tamil Nadu Arasiyal Unmaigal - Truth: லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களின் குடும்பம் நாசமாய்...

Tamil Nadu Arasiyal Unmaigal - Truth: லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களின் குடும்பம் நாசமாய்...: லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களின் குடும்பம் நாசமாய் போய் விடும்...

Friday, April 20, 2012

அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல்.. தடுப்பதற்கான எளிய முறைகள்..அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல்.. 
தடுப்பதற்கான எளிய முறைகள்..இந்தியாமுழுவதும் இன்றைக்கு அச்சுறுத்தும் நோயாக மாறியுள்ளது பன்றிக் காய்ச்சல். இந்த எச்1என்1 கிருமி சாதாரணமாக நுரையீரல் தொற்று அல்லது நுரையீரல் நோயுள்ளவர்க்கு அதிகம் பாதிப்பை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டின் உலகெங்கும் உள்ள பாதிப்பில் 30% பேர் ஆஸ்துமா நோயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்றிக்காய்ச்சல் வந்தபின் அவதிப்படுவதை விட வருமுன் காப்பதற்கு வீட்டிலேயே நம்மிடம் பல்வேறு மருந்துகள் உள்ளன என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

அன்னாசிப் பூ

பன்றிக்காய்ச்சல் மருந்தின் மூலப் பொருள் அன்னாசிப் பூவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. வீட்டில் மட்டன், சிக்கன் சமைக்கும் போதும், பிரியாணி செய்யும் போதும் பயன்படுத்தப்படும் இந்த அன்னாசிப் பூ பன்றிக்காய்ச்சலை தடுக்கும் அருமருந்தாக உள்ளது. இதில் உள்ள ஷிகிமிக் அமிலத்தில் (skimikic acid) இருந்து தான் அந்த ஆஸ்டமிலாவிர் தயாரிக்கப்படுகிறது.

நில வேம்பு
இந்த ஷிகிமிக் அமிலம் நம் நாட்டு மூலிகைகள் கிட்டதட்ட 291 தாவரங் களில் இருப்பதாக சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்வம், வேம்பு முதலான 9 முக்கிய மூலிகைகள் இந்த ஷிகிமிக் அமிலம் காணப்படுகிறது. அருகாமையில் வசிப்பவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய்த் தொற்று இருப்பது உறுதியாகும் பட்சத்தில் குடும்பம் முழுவதும் வில்வம், வேம்பு, அன்னாசிப்பூ மூலிகைகள் அடங்கிய சித்த ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தலாம். இந்த தாவரங்களை சிறிது காரத்தன்மையுள்ள மூலிகைகளுடன் சேர்த்து கசாயமாக்கிச் சாப்பிட கண்டிப்பாக அந்த கசாயத்தில் இருக்கும் ஷிகிமிக் அமிலமும், அதனோடு கூடுதலாய் ஏராளமாய்க் கிடைக்கும் பிற மூலிகை நுண்சத்துக்களும் உடலினை பன்றிக்காய்ச்சலில் இருந்து பாதுகாக்க உதவிடும்.

இது தவிர உடல் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்த மிளகு, மஞ்சள், துளசி, வேப்பம் பூ, சீந்தில், நிலவேம்பு சேர்ந்த சித்த மருந்துகளை எடுப்பதன் மூலம் எச்1என்1-க்கு இடம் கொடுக்காமல் உடலை பாதுகாக்க முடியும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

துளசி கசாயம்
துளசி இருமலைப் போக்கும் அருமருந்து. தினசரி காலையில் துளசி சாப்பிட்டால் தொண்டை, நுரையீரலை எந்த நோயும் தாக்காது. எந்த கிருமிகள் இருந்தாலும் மடிந்து விடுவதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

கோவில்களில் தீர்த்தம் கொடுப்பதைப் போல துளசியை பறித்து தண்ணீரில் 20 நிமிடம் கொதிக்க வைத்து அத்துடன் மிளகு, சிறிதளவு கருப்பு உப்பு சேர்த்து கசாயம் போல சாப்பிடலாம்.

வெள்ளைப்பூண்டு
பன்றிக்காய்ச்சலை தடுப்பதில் வெள்ளைப்பூண்டு சிறந்த மருந்தாகும். காலையில் பச்சை வெள்ளைப்பூண்டை தட்டி சாப்பிடலாம். அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் வேகவைத்து அதனை சாப்பிடலாம். இதனால் நோய் எதிப்பு சக்தி அதிகரிக்கும்.

மஞ்சள், பால்
பால் குடிப்பதனால் அலர்ஜி எதுவும் ஏற்படாது என்று நினைப்பவர்கள் தினசரி இரவு படுக்கும் முன்பு வெதுவெதுப்பான பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு குடிக்கலாம்.

கற்றாழை

கற்றாழை அனைத்து இடங்களிலும் கிடைக்கும் பொருள். கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடித்தால் உடல்வலி, மூட்டுவலி போன்றவை ஏற்படாது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மூச்சுப்பயிற்சி
தினசரி மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் தொண்டை, மூக்கு, நுரையீரல் போன்றவற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் வெளியேறிவிடும். ஹெச்1என்1 வைரஸ் மட்டுமல்லாது தீமை தரும் எந்த வைரசும் நம்மை அண்டாது.

நெல்லிக்காய்
வைட்டமின் சி அடங்கிய நெல்லிக்காய் அதிகம் சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமாகும். சிட்ரஸ் அமிலம் அடங்கிய பழங்களை உட்கொள்ளலாம்.

சுகாதாரம் அவசியம்
தினசரி மிதமான தண்ணீரில் நன்றாக கையை கழுவுங்கள். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த பழக்கத்தை ஏற்படுத்துங்கள் அப்புறம் பன்றிக்காய்ச்சல் எப்படி எட்டிப்பார்க்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Saturday, April 14, 2012

இயற்கையை சிதைத்து வாழும் வாழ்க்கை நம் தாய்க்கு நாம் செய்யும் துரோகம் போன்ற

இயற்கையை சிதைத்து வாழும் வாழ்க்கை நம் தாய்க்கு நாம் செய்யும் துரோகம் போன்றது.அனைத்தையும் கொடுத்த தன்னையே சேதப்படுத்துவதால் தான் நிலநடுக்கமாகவும்,சுனாமியாகவும்,சூறாவளியாகவும்,வறட்சியுமாகவும் தன் கோர முகத்தை திருப்பிக் காட்டுகிறாள் இயற்கை!!!!மனிதா எங்களை வாழ விட்டால்,உன் வாழ்க்கை நிலைத்திருக்கும் என்று ஒவ்வொரு முறையும் எச்சரிக்கை செய்கிறாள்...மனிதன் தான் புரிந்துக் கொள்வதில்லை!!!!

Sunday, April 8, 2012

டீசலோடு போட்டி போடும் புன்னை!


டீசலோடு போட்டி போடும் புன்னை!


நாகப்பட்டினம் மாவட்டம், கண்டியன்காடு கிராமத்தைச் சேர்ந்த தீவர விவசாயி ராஜசேகரோ.. மின்சாரத்தையும், டீசலையும் நம்பாமல், “புன்னை, கைவிடாது என்னைஞ் !” என்று தெம்பாகச் சொன்னபடி, தன் தோட்டத்துக்கு தேவைப்பட்ட போதெல்லாம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்.. புன்னை எண்ணெய் புண்ணியத்துல.!

“டீசல் மோட்டார் பம்ப்செட்டுகளில், டீசலுக்குப் பதிலாக புன்னை எண்ணெயைப் பயன்படுத்தினால் பல மடங்கு செலவு குறையும். கூடுதல் இணைப்பாக சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் இந்த மரத்தை, இயற்கை நமக்குத் தந்த வரம்ன்னு தான் சொல்லணும். இதுக்கு இலையுதிர் காலம்ன்னு ஒண்ணு கிடையாது. வருஷம் முழுக்க நிழல் கொடுக்கும். மழ வரப்போகுதுன்னா, ஒரு வாரத்துக்கு முன்னாடியே நமக்குச் சொல்லிடும். அதாவது, மரத்துல பூ பூத்துக் குலுங்கினா, கண்டிப்பா மறுவாரம் மழை பெய்யும். புயல் அடிச்சாக்கூட சாயாம நிக்கக்கூடிய மரம். இது கடற்கரையோர பூமி, சுனாமி வந்தப்பக்கூட இந்த மரங்களுக்கு ஒண்ணும் ஆகலனா பார்த்துக்கோங்க.. இந்த அளவுக்கு வலுவான மரம். இதுக்கு எத்தனை வருஷம் ஆயுள்ன்னு தெரியல.70 வருஷத்துக்கும் மேல் வயசுள்ள மரங்கள் கூட விதைகளைக் கொட்டுது என்ற புன்னையை வாழ்த்தித் தள்ளியவர்.
“5 ஹெச்.பி டீசல் மோட்டார் வெறும் 600 மில்லி புன்னை எண்ணெய்தான் ஊத்துறேன். வேற ஆயில் எதையும் கலக்கறதில்லை. இந்த 600 மில்லி ஊத்தறதுக்கே ஒரு மணி நேரம் ஓடுது. இதுவே டீசலா இருந்தா, ஒரு மணி நேரம் ஓடறதுக்கு 900 மிலி தேவைப்படும்.

ஒரு லிட்டர் டீசலோட விலை 35 ரூபாய் ஆனா, ஒரு லிட்டர் புன்னை எண்ணெய் தயாரிக்க கிட்டத்தட்ட 10 ரூபாய் தான் செலவாகுது.

மழை இல்லாத காலத்துல தான் மோட்டார் தேவை. அப்படிப் பார்த்தா வருஷத்துக்கு 5 மாசத்துக்குத் தான் மோட்டார் ஓடணும். அதுக்கு 75 லிட்டர் எண்ணெய் தேவைப்படும் இதைத் தயாரிக்கறதுக்கு 800 ரூபாய் தான் செலவு. இதே அளவு டீசலுக்கு.. 2,666 ரூபாய் செலவாகும் என்று கணக்கு வழக்கோடு சொல்கிறார் ராஜசேகர்.

தொடர்புக்கு:அலைபேசி எண்: 09751002370http://www.facebook.com/photo.php?fbid=338419159548032&set=a.297805090276106.74159.296623633727585&type=1&theater