Total Pageviews

Wednesday, February 23, 2011

திருக்குறள் - 14திருக்குறள் - 14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

பொருள்:  மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

Monday, February 21, 2011

திருக்குறள் - 13
திருக்குறள் - 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
பொருள்: கடல் நீர் சூழ்ந்த உலகமாயினும், மழை நீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.

Wednesday, February 16, 2011

ஆத்தி சூடி


ஆத்தி சூடி - ஔவையார்

அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்.
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல் 
எண் எழுத்து இகழேல் 
ஏற்பது இகழ்ச்சி  

திருக்குறள் - 12திருக்குறள் - 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை. 
பொருள்:  யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத் தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அருந்தும் உணவாகவும் ஆகி அறிய தியாகத்தை செய்கிறது.

Thursday, February 10, 2011

திருக்குறள் - 10


திருக்குறள் - 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பொருள்:  இறைவன் அடி சேராதவர்கள், வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முடியாது.

திருக்குறள் - 11திருக்குறள் - 11
-- வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரப் பாற்று.
-- பொருள்:  உலகத்தை வாழ் வைப்பது மழையாக அமைந்திருப்பதால் மழை அமிழ்தம் என போற்றப்படுகிறது. 

Tuesday, February 8, 2011

திருக்குறள் - 9திருக்குறள் - 9
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
பொருள்: உடல், கண், காது, மூக்கு, வாய், எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்கா விட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

திருக்குறள் - 7திருக்குறள் - 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
பொருள்:  தனக்கு உவமை இல்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழி ஏதும் இல்லை. 

திருக்குறள் - 6திருக்குறள் - 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
பொருள்: மெய், வாய், கண், மூக்கு, செவி, எனும் ஐம்பொறிகளையும் கட்டுபடுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியை பின்பற்றி நிற்பவர்களின் வாழ்வு, நிலையானதாக அமையும்.

திருக்குறள் - 5திருக்குறள் - 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பொருள்: இறைவன் என்பதற்கரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

Ilayaraja releases Thirukkural songs | யாரும் புரிந்து கொள்ளும் க�

Ilayaraja releases Thirukkural songs யாரும் புரிந்து கொள்ளும் க�


யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் பாடல் திருவள்ளுவர்! - இளையராஜா

இளையராஜா பேசுகையில், "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருக்குறளை, அனைத்து மக்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இசை வடிவில் கொண்டு வத்தமைக்காக கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.

Monday, February 7, 2011

திருக்குறள் - 4


திருக்குறள் - 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
பொருள்: விருப்பு வெறுப்பற்று தன்னலமின்றி திகழ்கின்றவரை பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை. 

Friday, February 4, 2011

ஜோக் 12

ஜோக் 12

"படிக்கும்போது தூக்கம் வந்தா என்ன செய்யணும்...?"

"படிப்புதான் வரல, தூக்கமாவது வருதேன்னு தூங்கிடணும்!

ஜோக் 11

ஜோக் 11
ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.
முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி. அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டது...ம் சொன்னார்..

"கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!"

ஜோக் 10

ஜோக் 10

 ‎"என்னங்க இது... கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க..."

"நான்தான் அப்பவே சொன்னேனே... பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!"

Joke 9


முன்னவர் : ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
பின்னவர் : எப்படி?
முன்னவர் : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!!!

Joke 8


‎"போருக்கு போற மன்னர் பொற்காசுகளை மூட்டையா கொண்டு போறாரே.....எதுக்கு?"

"போர்க்களத்துல அதை வீசி, எதிரி படைவீரர்களை திசை திருப்பத்தான்"

Joke 7

‎"டாக்டர் ஏன் பேஷன்ட்டை சுத்தி சுத்தி வர்றாரு..?"

"நாய்க்கடிக்கு தொப்புளை சுத்தி ஊசி போடணும்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாரு...!"

Joke 6


‎''என்ன! உங்க பையனைப் போய் பிரிட்ஜ் உள்ளே உட்கார வெச்சிருக்கீங்க?''

''அப்பதானே அவன் கெட்டுப் போகாம இருப்பான்.''

Thursday, February 3, 2011

திருக்குறள் - 3


திருக்குறள் - 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
பொருள்: மலர் போன்ற மனதில் நிறைந்தவனை பின் பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

பிளாஸ்டிக் சர்ஜரி

 ‎"டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?"

"ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!"

"ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டுவந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?"

வயித்துல ஆபரேஷன்

 ‎"சிஸ்டர் எனக்கு வயித்துல ஆபரேஷன் பண்ணியாச்சில்ல?"

"ஆமா"

"தையல் எல்லாம் ஒழுங்காப் போட்டாச்சா?"
...
"போட்டாச்சு."

"ஒரு தம்ளர் தண்ணி கொடுங்க.... என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பார்க்கணும்."

"என் மனைவி ரொம்ப நல்லவ."

 ‎"என் மனைவி ரொம்ப நல்லவ."

"அப்புறம் ஏன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டே?"

"அவ நல்லவனு ரெண்டாவது கல்யாணம் பண்ண பிறகுதான் தெரியுது."

வெங்காய பஜ்ஜி

 பொண்ணு பார்க்க வந்தபோது மாப்பிள்ளை கேட்ட சமாச்சாரம் எங்களுக்கு அதிர்ச்சியாப் போச்சு!"
"வரதட்சணை நிறைய கேட்டாரா?"
"இல்லைங்க... வெங்காய பஜ்ஜி இருக்கான்னு கேட்டுட்டாரு!"

ப‌ச்சை மு‌ட்டை

நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா... எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்.
டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது?
நோயா‌ளி: ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன் போடு‌ம்..!

Wednesday, February 2, 2011

அன்புள்ள அப்பா...

சின்னச்சிறு குழந்தையாய் கைகளில் தவழ்ந்தாய்
என்னை நீ தாங்கிடும் வயதும் வந்தது.

உன்னிடம் கேட்பதெல்லாம் அன்பும் அரவணைப்பும்
என்னிடம் இருப்பதெல்லாம் பரிவும் புன்சிரிப்பும்.

உரையாடல் நம்மிடையே ஊடகம்தானே
விரையாமல் உடன் அமர்ந்து மகிழ்விப்பாயா?

கைப்பிடித்து நடைபழக்கி உவகை கொண்டேனே
கைதாங்கி கனிவுடனே அமர வைப்பாயா?

மறக்காமல் மீண்டும் மீண்டும் கதை சொல்வேனே
வெறுக்கிறாய் இன்று சொன்னதையே சொல்வதாய்.

அன்று சுத்தமும் ஒழுக்கமும் உனக்கு நான் கற்பித்தேன்
இன்று கைநடுங்கி சிதறும் உணவால் சினம் கொள்ளாதே.

விரிந்து வரும் விஞ்ஞானம் மனதில் பதிவதில்லை
புரிந்துகொள்ள சற்றே அவகாசம் தருவாயா?

போதும் இந்த வாழ்க்கையென இறைவனை அழைத்திட்டால்
ஆதரவாய் நீபேசி என்மனம் தேற்றுவாயா?

முதுமையில் தனிமை ஒரு தீராத கொடுமை
அது என்னை வதைத்திடாமல் அணைத்திருப்பாயா?

என்றும் அன்புடன்
உன் அன்புள்ள அப்பா...

திருக்குறள் - 2


திருக்குறள் - 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.
பொருள்:  தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையானின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

திருக்குறள் - 1

திருக்குறள் - 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள்: அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதி பகவன்,உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.