Total Pageviews

Thursday, May 31, 2012

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
 

Tuesday, May 29, 2012

இளையராஜா என்ற புதிய இசையமைப்பாளர் பாடல்களுக்குப் போட்டுள்ள மெட்டுகள் அருமையாக உள்ளன...இளையராஜா என்ற புதிய இசையமைப்பாளர் பாடல்களுக்குப் போட்டுள்ள மெட்டுகள் அருமையாக உள்ளன....


இன்று (14.5.1976) – அன்னக்கிளி வெளியான நாள்..

’அன்னக்கிளி’யின் இசையமைப்பாளராக இசைஞானி தேர்வு செய்யப்பட்டபின், அவரைப் படத்தில் இருந்து நீக்க பல முயற்சிகள் நடந்தன. எதிர்பாராத சோதனைகளும் வந்தன. அவற்றை எல்லாம் முறியடித்தார் இசைஞானி.

இது பற்றி இசைஞானி கூறியது:-

“பஞ்சு சாரின் கதை-வசனத்தில் ஹிட் ஆகியிருந்த ‘உறவு சொல்ல ஒருவன்”, “மயங்குகிறாள் ஒரு மாது” என்ற 2 படங்களுக்கு விஜயபாஸ்கர் இசையமைத்திருந்தார். அவரிடம் வேலை செய்த குருபாதம் என்ற இன்சார்ஜ், அவருக்கு வரவேண்டிய படத்தை நான் தட்டிப் பறித்து விட்டேன் என்ற தவறான எண்ணத்தோடு தயாரிப்பாளர் சுப்புவிடம் போனார்.

‘பஞ்சு சார், விஜயபாஸ்கர் கூட்டணி ஹிட் ஆகும் கூட்டணி சார். அவர் ஸ்டாரும், இவர் ஸ்டாரும் நன்றாக ஒத்துப்போயிருக்கு. அதை ஏன் மாத்துறீங்க?” என்றார். இதில் சுப்பு குழம்பிவிட்டார். கூடவே பஞ்சு சாரின் இன்னொரு தம்பி லட்சுமணன் வேறு. அவருக்கும் கேள்விக்குறிகள்.

“சார்! இந்த ராஜா, ஜி.கே.வி.கிட்டே கிட்டார் வாசிக்க்கிறாவர் சார். ஏற்கெனவே Unlucky Music Director என்று பெயர் எடுத்திருக்கிறார். அவர் மியூஸிக் பண்ணி பூஜை போட்ட படம் எல்லாம் நின்றுவிடும்” என்று பலவிதமாக சொல்லி பயத்தை ஏற்படுத்திவிட்டார். சுப்புவும் பயந்துவிட்டார்.

பஞ்சு சாரிடம் நேராக சென்ற சுப்புவும், லட்சுமணனும், ‘எதுக்கு நமக்கு ரிஸ்க்? விஸ்வநாதன் சார் பிரமாதமாக மியூஸிக் போடுகிறார். நம்ம படத்திற்கு ஒரு மெரிட் இருக்கும். டிஸ்ட்ரிப்யூட்டரும் படத்தை வாங்குறதுக்கு ஒரு பேரும் இருக்க வேண்டாமா?’ என்று சொன்னார்கள்.

‘அதைப் பற்றி ஒன்றும் பேசவேண்டாம், முடிந்து போன விஷயம். ராஜாதான் மியூஸிக்!” என்று பஞ்சு சார் ஒரேயடியாக அடித்துச் சொல்லிவிட்டார். இதைக்கேட்டு அவர்களது தம்பிகளும் பேசாமல் இருந்தார்கள். பூஜை தேதியும் குறிக்கப்பட்டது. கவிஞர் கண்ணதாசனிடம் பாட்டெழுத கேட்ட நேரத்தில் அவர் சிங்கப்பூர் போவதாகச் சொல்லிவிட்டார். ‘எப்போது திரும்பி வருவார்?’ என்று கேட்டதற்கு, ‘படத்தின் பூஜை முடிந்த பிறகுதான் திரும்பிவருவார்’ என்று பதில் வந்தது. எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதே நேரம் ‘பூஜையை நிறுத்த வேண்டாம். நானே பாட்டு எழுதிவிடுகிறேன்’ என்று பஞ்சு சார் கூறிவிட்டார். அதன்படி பாடலை எழுதித்தந்தார்.

ரிகர்சல் நாள் வந்தது. கவிஞர் வீட்டின் அருகில் இருக்கும் பாலாஜி கல்யாண மண்டபத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை எல்லா ஆர்கெஸ்ட்ராவும் வந்தது. காலையில் ‘அன்னக்கிளி உன்னைத்தேடுதே’ பாடலுக்கு ரிகர்சல் செய்தோம். அவர்களுக்கெல்லாம் புதிய அனுபவமாக இருந்தது. எனக்கும் உற்சாகமாக இருந்தது. இரண்டாவதாக, ‘மச்சானைப் பார்த்தீங்களா’ பாடலை ரிகர்சல் செய்தோம். மதிய உணவுக்குப் பின் மாலை 4 மணிக்கு பாடகி எஸ். ஜானகி வந்தார். பெரும்பாலும், பாடகர்கள் பெரிய இசையமைப்பாளருக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஆனால் ஜானகி, ஜி.கே.வி. ரெக்கார்டிங்கில் என்னிடம் பழகி இருக்கிறார். தவறாகப் பாடினால் ஜி.கே.வி. என்னைவிட்டு சரியாக சொல்லிக்கொடுக்கச் சொல்லும்போது, நான் பாடி சரிசெய்வதை தெரிந்தவர். ரிகர்சலுக்கு வந்து ஒத்துழைத்தார். பாடல் சொல்லிக்கொடுக்கும்போதே, அதனுடைய ஜீவனைப் புரிந்து கொண்டார். இது மிகவும் புதிது என்று தெரிந்து மிகவும் கவனத்தோடு கற்றுக்கொண்டார்.

சுப்புவுக்கும், லட்சுமணனனுக்கும், என் மீது இருந்த சந்தேகம் தீர்ந்துபோனது. ‘நீ நன்றாகப் பாடுவாய் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் அது இவ்வளவு புதுசாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று இரட்டிப்பு சந்தோஷத்தோடு பஞ்சுசார் சொன்னார். 

அடுத்த நாள் பூஜை. நானும், பாஸ்கர், அமர் ஆகியோரும் 6 மணிக்கு திருவேற்காடு போய்விட்டு, ஸ்டுடியோவுக்கு 7 மணிக்கு முன் வந்துவிட்டோம். பூஜை முடிந்தது, ரிகர்சல் தொடங்கியது. அர்க்கெஸ்ட்ராவெல்லாம் அமர்ந்து, ‘Ready .. One .. Two .. Three” என்று நான் சொன்ன அந்த நொடியில் ‘மின்சாரம் கட்’ ஆகி விளக்குகள் அணைந்துவிட்டன. எனக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது. டோலக் வாசிக்கும் பாபுராஜ், ‘ம்ம்.. நல்ல சகுனம்’ என்றார், கேலியாக.

மனம் உடைந்த நான், ஸ்டுடியோவில் பாடுபவர்களுக்கு இருக்கும் ரூமின் பின் கதவைத் திறந்து தனியாக உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரம் அப்படியே கழிந்தது. தம்பி அமரும், பாஸ்கரும் என்னைத் தேடிவந்து, ‘டைரக்டர் மாதவன் சார் வந்திருக்கார். உன்னைப் பார்க்க வேண்டுமாம்’ என்றனர்.

நான் உடனே எழுந்து போனேன். அவர் ‘கருமாரியம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன். இந்தா பிரசாதம்’ என்று என் கையில் கொடுத்தார். பின்னர், ’நான்தான் உனக்கு சான்ஸ் கொடுக்கணும்னு நினைத்தேன். ஆனா பஞ்சு முந்திவிட்டார்’ என்றார். அது உடைந்த மனதுக்கு ஆறுதலாக இருந்தது. போன மின்சாரமும் வந்தது. தேங்காயில் கற்பூரம் ஏற்றி சாமிக்குக் காட்டிவிட்டு வெளியே சிதறுகாய் எறிந்து உடைக்கப்பட்டது.

“Silence..! Take..! Running..!” என்ற குரல் ஒலிக்க கோவர்தன் மாஸ்டர், ‘One.. Two..” கொடுக்க, ஜானகி ‘ஆ…ஆ…’ என்று ஹம்மிங் தொடங்க, பாடல் நன்றாக வந்தது. எஞ்சினியர் சம்பத், ஒன்ஸ்மொர் என்று கேட்கப் போனார்.

“முதல் டேக் டேப்பைப் போட்டுக்காட்டினால், ஆர்கெஸ்ட்ராவின் தவறுகளை அவர்களே கேட்டுத் திருத்திக்கொள்வார்களே’ என்று நான் கூறினேன். எல்லாரையும் உள்ளே அழைத்தேன். சம்பத்தோ, ‘என்ன இது? இந்தப் பையன் இப்படிச் செய்கிறானே?’ என்று நினைத்தார். ‘ராஜா! இன்னும் ஒரு டேக் எடுத்திடலாமே’ என்றார். ‘எடுக்கலாம் சார்! ஆனா இதைப் போட்டுக்கேட்டா, அவங்க தவறி வாசிச்சதை அவங்களே திருத்தி வாசிப்பாங்க’ என்றேன்.

‘சரி’ என்று டேப்பை Rewind செய்தார். அதன் பின்னர் டேப்பை ஆன் செய்தார். டேப் ஓடியது. இப்போது வரும், இப்போது வரப்போகிறது என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்க, எதிர்பார்க்க, டேப் ஓடியதே தவிர, அதிலிருந்து ஒரு சப்தமும் வரவில்லை. காரணம் பாடல் பதிவாகவில்லை! ரெக்கார்ட் மூடில் மெஷினே ஓட்டவில்லை என்பது சம்பத்துக்குத் தெரிந்து போய்விட்டது. உடனே, ‘சார், சார்..! பாட்டு பதிவாகலை சார், One More take Sir..!” என்றார். சுப்பு சாரின் முகம் மாறியது. ஒரு மாதிரியாகி வெளியே எழுந்து போய்விட்டார். 

‘டேக் நம்பர் ஒன்று இரண்டு’ என்று நம்பர்களை ஏற்றிக்கொண்டே போனார்கள். 12 டேக் ஆனது. பஞ்சு சார் மட்டும் இத்தனை கலாட்டாக்களுக்கு நடுவிலும் அமைதியாக இருந்தார். 2வது பாடல் ‘மச்சானைப் பார்த்தீங்களா” பதிவாகியது. ‘சொந்தமில்லை பந்தமில்லை’ பாடலை சுசீலா பாட ரெக்கார்டு செய்தோம்.

‘அன்னக்கிளி உன்னைத்தேடுதே’ பாடல், சோகப்பாடலாக மறுபடியும் ஒருமுறை வந்தால் நன்றாக இருக்கும் என்று பஞ்சுசாரும், டைரக்டர் தேவராஜ் மோகனும் விரும்பினார்கள். அந்தப் பாடலை டி.எம்.சவுந்திரராஜன் நன்றாகப் பாடிக்கொடுத்தார். பாடல்கள் எல்லாம் பதிவாகி முடிந்தன. அதன்பின் படத்தின் சூட்டிங் நடந்தது”

சிவகுமாரும், சுஜாதாவும் நடித்த ‘அன்னக்கிளி’ 14-05-1976 அன்று வெளிவந்தது. எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கொடிகட்டிப் பறந்த காலம் அது. எனவே அன்னக்கிளிக்குப் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆரம்பத்தில் பெரிய கூட்டம் இல்லை. சில ஊர்களில் ஒரே வாரத்தில் படத்தை எடுத்து விட்டார்கள். படத்தைப் பார்த்தவர்கள் வெளியே வந்து, ‘படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, இளையராஜா என்ற புதிய இசையமைப்பாளர் பாடல்களுக்குப் போட்டுள்ள மெட்டுகள் அருமையாக உள்ளன’ என்று கூறியது, ரசிகர்களிடையே பரவியது. பத்திரிகைகளும் படத்தையும், இசையையும் பாராட்டி விமர்சனங்கள் எழுதின. இதனால் தியேட்டர்களில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகியது. ஒரே வாரத்தில் படத்தை எடுத்த தியேட்டர்களில், மீண்டும் ‘அன்னக்கிளி’ திரையிடப்பட்டது. 15 நாட்களில் ‘அன்னக்கிளி’ திரையிடப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு காட்சியும் ஹவுஸ்ஃபுல் ஆனது. அன்னக்கிளி இசைத்தட்டு வெளிவந்து சக்கைபோடு போட்டது. ‘அன்னக்கிளி ஒன்னைத்தேடுது’, ‘மச்சானைப் பார்த்தீங்களா’, ‘ நம்ம வீட்டுக் கல்யாணம்’ முதலான பாடல்கள் ரேடியோவில் மாறி மாறி ஒலித்தன. அன்னக்கிளி 200 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது.

The Sour Sop or the fruit from the graviola tree is a miraculous natural cancer cell killer 10,000 times stronger than Chemo...
"10000 times stronger killer of CANCER than Chemo".. do share it.. can save many lives, fill up hopes and build confidence in the patients...

The Sour Sop or the fruit from the graviola tree is a miraculous natural cancer cell killer 10,000 times stronger than Chemo.

Why are we not aware of this? Its because some big corporation want to make back their money spent on years of research by trying to make a synthetic version of it for sale.

So, since you know it now you can help a friend in need by letting him know or just drink some sour sop juice yourself as prevention from time to time. The taste is not bad after all. It’s completely natural and definitely has no side effects. If you have the space, plant one in your garden.

This tree is low and is called graviola ! in Brazi l, guanabana in Spanish and has the uninspiring name “soursop” in English.

ரம்புட்டான் பழம் பற்றிய தகவல் !!!!
ரம்புட்டான் பழம் பற்றிய தகவல் !!!!

ரம்புட்டானின் தாய்நாடு மலேசியா எனக் கருதப்படுகிறது.ஆரம்ப காலங்களில் தெற்காசியாவின் கிழக்கு வலய நாடுகளில் பிரதானமாக பயிர்ச்செய்யப்பட்ட இது தற்போது மத்திய அமெரிக்காவிலும், கப்ரியன் தீவுகளிலும் பயிர்ச்செய்யப்படுகிறது.எலகில் பிரதானமாக ரம்புட்டான உற்பத்தி மேற்கொள்ளப்படும் நாடு தாய்லாந்து ஆகும்.
ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. ரம்புட்டான் பழம் கிழக்காசியா (சீனா ) மற்றும்தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டது. ரம்புத்தான் ஆஸ்திரேலியா, நியூ கினி, ஆப்பிரிக்கா, இலங்கை,அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைகின்றது.

இலங்கையில் பயிர்ச்செய்யப்படும் பழங்களிடையே ரம்புட்டான் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. பழத்தின் விதையைச் சூழ உட்கொள்ளக் கூடிய சாறு நிறைந்த சதைப்பகுதி காணப்படுவதால் அது மக்களிடையே விரும்பப்படும் பயிராக மாறியுள்ளது.

ஒரு ரம்புத்தான் மரம் நடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் பழம் காய்க்க தொடங்கி விடும். ஒரு ரம்புத்தான் பழம் முழுமையாக பழுப்பதற்கு 90 முதல் 120 வரை எடுத்துக் கொள்கின்றது. ரம்புத்தான் பழம் பிஞ்சாக இருக்கும் பொழுது பச்சை நிறத்தில் இருக்கும். அதுவே பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரகங்களுக்கு ஏற்றார்ப் போல ஒரு ரம்புத்தான் மரம் ஒரு பருவத்திற்கு 80 கிலோ முதல் 200 வரையிலான கைகளைத் தரும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள் . எல்லோருக்கும் பிடித்த பழம் . ஆடி மாதத்தில் இந்த பழ சீசன் . அந்த நேரத்தில் மட்டும் குவியலாக குவிந்து கிடக்கும் எல்லா இடமும் இந்த பழம் . ரம்புட்டான் பழம் மஞ்சள் , சிகப்பு என இரண்டு வகைகளில் உண்டு . . உள்ளே தோலை உரித்தால் அதற்குள் சதை பற்றுடன் விதையுடன் இருக்கும் அந்த சதையை சாப்பிட வேண்டும் . மிகவும் நன்றாக இருக்கும்

மூலிகைகளும், தீரும் நோய்களும்...!
மூலிகைகளும், தீரும் நோய்களும்...!

நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!

அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்

ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு

தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்

அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்

நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு

அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு

ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்

முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்

கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம்

கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்

Sunday, May 27, 2012

சன் ஸ்ட்ரோக் சாதாரண விஷயமல்ல! எச்சரிக்கை மிகவும் தேவை!!
சன் ஸ்ட்ரோக் சாதாரண விஷயமல்ல! எச்சரிக்கை மிகவும் தேவை!!

உடலுக்கு வெப்பம் தேவை தான். ஆனால் அதுவே, அளவுக்கு மீறும் போது, வியர்வையாகவோ, தோல் வழியாகவோ வெளியேறி விடும். ஆனால், அதையும் மீறி வெப்பம் தாக்கும் போது, உடல் திணறிப்போய் விடும். 

இப்படிப்போகும் போது, உடலில் உள்ள வெப்பம் 41 செல்சியஸ் டிகிரி யை தாண்டி விடும் போது தான் ஆபத்து காத்திருக்கிறது. அது தான் ‘சன் ஸ்ட்ரோக்’ ஆரம்பம். அந்த நிலையில், உடலில் நீர் வற்றிப்போகின்றது. வெப்பம் அதிகரிக்கிறது. அதனால், உறுப்புகள் பாதிக்கின்றன; விளைவு, உச்சகட்டமாக மரணம் தான்.

வெயிலுக்கு மரணம் என்று படிக்கிறோமே தவிர, எதனால் மரணம் என்பதை பெரும்பாலோர் உணருவதில்லை. விழிப்புணர்வு இருந்தால் இந்த சன்ஸ்ட்ரோக் மூலம் ஏற்படும் பலிகளை தவிர்க்கலாம்.

தலைசுற்றல், வாந்தியா?
இதற்கு அறிகுறிகள் பல உண்டு. தொடர்ந்து, வெயிலில் அலைந்து கொண்டிருப்பவர்கள், அதிலும் வயதானவர்களுக்கு உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது, காய்ச்சல் போல உணர்வர். அளவிற்கதிகமான தண்ணீர் குடிப்பர். ஆனால், வெப்பம் தாங்க முடியாது.

இது மட்டுமின்றி, வாந்தி, மயக்கம் ஏற்படும். சோர்வு வரும்; படுக்கலாம் என்றால் தலை சுற்றும். கிறுகிறுப்பு தொடர்ந்து இருக்கும். சில சமயம், மாரடைப்பு போல, பெரும் வலி இருக்கும். தசைப்பிடிப்பு வெடிப்புகளும் ஏற்படும்.

திணறும் மூச்சு
உடலில் வெப்பம் ஏறிய நிலையில், வியர்வை வராது. மூச்சு திணறும். உடலில் ஆங்காங்கு சிவந்து போகும். தடிப்பும், வெடிப்பும் ஏற்படும். எதிலும் கவனம் போகாது. இது தான் உச்சகட்ட அறிகுறிகள். உடனே டாக்டரிடம் போய்விடுவது தான் நல்லது.

உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது, அதை வெளியேற்ற போதுமான நீர்ச்சத்து தேவை. அப்படி இருந்தால் தான் தோல் வழியாக வியர்வை யாக வெளியேறும். இல்லாவிட்டால், வெப்பம் தங்கி விடும்.இந்த நிலை யை தான் தண்ணீர் வற்றிப்போய் விட்டதாக கருதுகிறோம். தண்ணீர் வற்றி விட்டால் சன் ஸ்ட்ரோக் வருவது நிச்சயம்.

யார் யாருக்கு வரும்?

பெரும்பாலும் வயதானவர்கள், பலவீனமானவர்களுக்கு வரும். வெயிலி லேயே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் வரும். அதனால், அவர் களை வெயிலில் அலைய விடாமல் செய்தால் தவிர்க்கலாம்.
இதய, சர்க்கரை, சிறுநீரக நோய்க்காக மருந்து சாப்பிடுவோர் , வெயிலில் போகவே கூடாது; அப்படி போனால், தற்காத்துக்கொள்வது நல்லது; அவர்களுக்கு ‘சன் ஸ்ட்ரோக்’ வரும் வாய்ப்பு அதிகம்.

முதல் உதவி எப்படி செய்ய வேண்டும்?
வெயிலில் மயக்கம் அடைந்தோ, கிறுகிறுத்தோ போவோரை கண்டால், அவர்களை, நிழலில் மல்லாந்து படுக்க வைத்து, உடலை குளிர்ப்படுத்த வேண்டும்; தண்ணீர் தெளிக்க வேண்டும். பின், உடலில் இருந்து வியர்வை வெளியேற, அவர் அருகே மின்விசிறியை வைத்து காற்று வர வைக்க வேண்டும்.
தொடை இடுக்கு, கைகள் இடுப்பு, கழுத்து பக்கவாட்டு பகுதிகளில் ஐஸ் ‘பேக்கிங்’ வைக்கலாம்; அப்படி செய்தால், உடல் வெப்பம் 100 பாரன்ஹீட் டிகிரிக்கு குறையும்.அவருக்கு உப்பு – தண்ணீர் கரைசலை தரலாம்; இப்போது ‘எலக்ட்ரால்’ கரைசல் கடைகளில் விற்கப்படுகிறது. அதை தந்தால் அவர் உடல் வெப்பம் குறைந்து விடும்.

உடல் வெப்பம் 98.3 ஐ தாண்டக்கூடாது!
நம் உடல் வெப்பம் 98.3 செல்சியஸ் டிகிரியாக இருக்க வேண்டும். இதை தாண்டினால், முதலில் காய்ச்சல்; அடுத்து ‘சன் ஸ்ட்ரோக்’ தான்.
உடல் வெப்பத்தில் மாற்றம் ஏற்பட்டால், மலச்சிக்கல், தலைசுற்றல், கிறுகிறுப்பு, வாந்தி வரும். பெண்களுக்கு முகப்பரு வரவும் இது தான் காரணம்.

வெயில் காலத்தில், அதிக தண்ணீர் குடிப்பதுடன், காபி, டீயை குறைத்து, தர்பூசணி சாப்பிடலாம்; அது போல, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களின் ஜூஸ் குடிக்கலாம்.
பசலைக்கீரை உட்பட பச்சைக்கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதுபோல கேரட்டும் நல்லது.
கோடை காலத்தில் அடிக்கடி உணவில் வெள்ளரி சேர்க்க வேண்டும்; தனியாகவும் சாப்பிடலாம்.
வயிற்றுப் பிரச்னைகளுக்கு தயிர் நல்லது: முகத்தில் சொர சொரப்பு போகவும் அதை தடவலாம்.
கொழுப்பு சத்துள்ள மற்றும் ஜங்க் ஃபுட் உணவுகளை சாப்பிடுவதை குறைத்தால், தோல், முகம் வெயிலில் பாதிக்காமல் இருக்க செய்யலாம்.

சூரியஒளி மின்சாரத்திற்கு வழிகாட்டும் ஜெர்மனி! மணிக்கு 22 ஜிகாவாட்ஸ் உற்பத்தி செய்து சாதனை!
சூரியஒளி மின்சாரத்திற்கு வழிகாட்டும் ஜெர்மனி! மணிக்கு 22 ஜிகாவாட்ஸ் உற்பத்தி செய்து சாதனை!

பெர்லின் : சூரிய ஒளி மூலம் மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்து, சூரிய ஒளி மின் திட்டத்திற்கு வழிவகுக்கிறது ஜெர்மனி நாடு. அணு உலைகளுக்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க ஜெர்மனி அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக காற்றாலை, சூரிய ஒளி போன்றவற்றின் மூலம் மின்சாரம் தயாரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சூரிய ஒளி மூலம் அதிகளவு மின்சாரம் தயாரிக்க அந்நாட்டு அரசு அதிதீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏற்கனவே 14 ஜிகா வாட்ஸ் மின்உற்பத்தி திறன் கொண்டு இருந்த சூரிய ஒளி ஆலையில், இந்தாண்டு துவக்கத்தில் கூடுதலாக 7.5 ஜிகா வாட்ஸ் மின்உற்பத்தி செய்யும் சூரிய ஒளியை அமைத்தது ஜெர்மனி. இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதுநாள் வரை 20 ஜிகா வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மணிக்கு 22 ஜிகாவாட்ஸ் அதாவது 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்து இருக்கிறது. இது 20 அணு உலைகள் இருந்தால், அதில் எவ்வளவு மின்சாரம் கிடைக்கு‌மோ அந்தளவு மின்சாரம் இந்த சூரிய ஒளி மூலம் கிடைத்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் மூலம் நாட்டின் 50 சதவீத மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் கணக்கிடப்பட்டு இருக்கிறது.
For further details on Collective Farming and  Solar Energy consulting, contact:
SUGA Consulting Services
Flat No.C-3-4, C-Block, 3rd Floor, Panna Oasis Apts,
35-36, M.K. Amman Koil Street, Mylapore, Chennai – 600004.
Mobile:
Airtel: 91-99400-58497,
BSNL: 91-94454-37117, 
Vodafone: 91768-71191
Landline: 91-44-2498-4148
http://www.suga-consulting-services.com/


FREE Consulting Services to Agriculturists in Tamil Nadu
---------------------------------------------------------
SUGA Consulting Services dedicated and offerig FREE Consulting Services to Agriculturists in Tamil Nadu to offer a potential growth in their levels.  All Agriculrists in Tamil Nadu can contact us for consulting services.


SUGA Consulting Services – Blog
Please visit our blog for our SUGA Consulting Services activities
http://suga-consulting-services.blogspot.com/


SUGA Employment Services – Blog
Please visit our blog of SUGA Employment Services, for Employment Opportunities and Employment Services.
http://suga-employment-services.blogspot.com/


SUGA Educational Services – Blog


Please visit our blog of SUGA Educational Services, to know the Educational Services provided by us.
http://suga-educational-services.blogspot.in/


SUGA Business Services – Blog
Please visit our blog of SUGA Business Services, to know the Business Services provided by us
http://suga-business-services.blogspot.in/


Email :
N.Sugavanam, CEO – nsugavanam@gmail.com,
For enquires in Consulting Services, with SUGA Consulting Services, send email to:
sugaconsultingservices@gmail.com 
For enquires in Employment Services, with SUGA Employment Services, send email to:
sugaemployment@gmail.com
For enquires in Business Services, with SUGA Business Services, send email to:
suga.business.services@gmail.com


Mobile:
Airtel: 99400-58497,
BSNL: 94454-37117, 
Vodafone: 91768-71191
Landline: 91-44-2498-4148

வேர்க்கடலை அவசியம் பற்றிய தகவல் !!வேர்க்கடலை அவசியம் பற்றிய தகவல் !!

உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும்.வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது. எனவே, குழந்தைகள் வளர்ச்சி தடையின்றி இருக்க நிலக்கடலை நல்லது.

சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில்தான் இருக்கிறது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது.
மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.இதனால்தானோ என்னவோ எளிமையாக வாழ்ந்த காந்திஜி தேவையான அளவு உடலுக்கும், மனதிற்கும் சக்திபெற வேர்கடலையும் ஆட்டுப்பாலும் சாப்பிட்டு வந்தார்.
எல்லாவிதமான இரத்தப்போக்குகளையும் இது தடுக்கும். பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வேர்கடலையாகும்.

பெருந்தீனிக்காரர்களும், உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சீனி சோக்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.

வயிற்றுப்போக்கு உடனே கட்டுப்படவும், பற்கள் பலம் பெறவும் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது உடல் அழகும், இதயப் பாதுகாப்பும்.வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும், இவை வராமல் முன்கூட்டியே தடுப்பதுடன், பளபளப்பான தோலையும் ஏற்படுத்தித் தருகிறது.படிக்கும் மாணவ, மாணவியர் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஞாபக மறதி ஏற்படாது என்கிறார்கள், உணவு ஆய்வாளர்கள்.வேர்க்கடலையில் உள்ள உயிர்வேதிப்பொருட்கள் நரம்பு செல்களை நன்கு செயல்படத் தூண்டும். இதனால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புள்ள பார்க்கிஸன், அல்ஸமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும்.

மேலும், நரம்பு சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலும் வேர்க்கடலைக்கு உண்டு. வேர்க்கடலையில் 30 விதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன.

இதில் புரதம் அதிகம். வேர்க்கடலையில் மேல் இருக்கும் தோலில் அதிக சத்துக்கள் உள்ளதால் அதனை நீக்காமல் சாப்பிடுவது அவசியம்.நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்து ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவை `கிளை செமிக் இன்டெக்ஸ்’ என்பார்கள். இது வேர்க்கடலையில் மிகவும் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.

மேலும், வேர்க்கடலையின் மேல் உள்ள பிங்க் கலர் தோலுக்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.அதுமட்டுமின்றி, வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலின் சுரக்கும் ஹார்மோன்களை துரிதப்படுத்தும் சக்தி உள்ளது.

கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது. வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன. ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.

இதனால் வேர்க்கடை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும். தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா ?

ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.வேர்க்கடலையைச்சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.

நிறைய காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டால் எடை குறைவதோடு, புற்றுநோய், சிறுநீரகக்கல், இதய நோய், நீரிழிவு போன்ற நோய்கள் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்

உடல் எடை குறைய இயற்கை பானம் அருந்துங்க........

உடல் எடை குறைய உடலை வருத்தி நிறைய உடற்பயிற்சி செய்வார்கள் சிலர். ஆனால் அப்படி சிரமப்படாமல் ஈஸியா குறைந்த கலோரி மற்றும் நிறைய புரதச்சத்து இருக்கிற காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தாலே எடை குறைவதோடு உடல் ஆரோக்கிய மாகவும் இருக்கும். காரணம் டயட்டில் இருக்கும் போது நிறைய காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டால் எடை குறைவதோடு, புற்றுநோய், சிறுநீரகக்கல், இதய நோய், நீரிழிவு போன்ற நோய்கள் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

என்னென்ன காய்கறிகள், பழங்கள் சாப்பிட்டால் எடை குறையும்

சுரைக்காய் ஜூஸ் : இதில் இரும்பு மற்றம் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்தால் எடை குறைவதோடு, உடலுக்கு பளபளப்பைத் தரும்.

தர்பூசணி ஜூஸ் : இதில் அதிக வைட்டமின்கள் உள்ளன. இது குடிப்பதால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல், இதய நோய்க்கும் மிகச் சிறந்தது.

ஆரஞ்சு ஜூஸ் : இதில் அதிக புரதச்சத்தும், குறைந்த கலோரியும் இருப்பதால் உடல் எடை குறைவதற்கு மிகச் சிறந்த பானம். இதிலுள்ள வைட்டமின் சி உடலுக்கு நிறமும் தருகிறது. மேலும் இதைக் குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் பிட் ஆகும்.

கேரட் ஜூஸ் : இந்த ஜூஸ் குடிப்பதால் கண்களுக்கு நல்லது. மேலும் இதை தினமும் குடித்தால் உடலுக்கு நிறத்தை தருவதோடு, உடல் எடையும் குறையும்.

திராட்சை : இது ஒரு சுவையான பழச்சாறு. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புக்கள் எளிதாக குறைந்து உடல் எடை குறைந்துவிடும். மேலும் இது சிறுநீரகக் கோளாறு, இதய நோய், ஆஸ்துமா, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை போக்கு கிறது.

ஆகவே உடலை வருத்திக் கொண்டு எடையை குறைக்காமல், இப்படி எளிமையான முறையில் இந்த இயற்கை பானங்களை அருந்தி எடையை குறைக்க முயற்சிக்கலாமே!!
 

உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்
உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்

உணவே மருந்து என்று நம்முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம்தான். இன்றைக்கு பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமாகிவிட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாறவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், கொழுப்பு சத்து குறையும், உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

சிறுதானியங்கள்

கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள். கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடுபவர்கள் இருக்கின்றனர். அதனால்தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல்பருமன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை.

கம்பு, சோளம்

கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.

சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

வரகு, ராகி

வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ள து. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.

ஆண்மைக்கு சாமை

சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. இது மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.

சம்பா அரிசி

நாம் அன்றாடம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி என பலவகை உள்ளது.

புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.

சம்பா வகையில் சீரகச்சம்பா அரிசி ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.

கோதுமை, பார்லி

அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.

வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.

குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.

உருளை கிழங்கின் மருத்துவ குணம் பற்றிய தகவல் !!!
உருளை கிழங்கின் மருத்துவ குணம் பற்றிய தகவல் !!!

உருளைக் கிழங்கைத் தோலுடன் சமைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்னைகள் தீரும். சருமம் பளபளப்பாகும்.

உருளைக்கிழங்கு, காரத்தன்மை நிறைந்த கிழங்கு. புளித்த ஏப்பம் பிரச்னையால் அவதிப்படுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கைச் சமைத்துச் சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும்.

உருளை அற்புதமான சிறுநீர்ப்பெருக்கி

காலையில் வெறும் வயிற்றில், உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து, சாறு எடுத்து சாப்பிட்டு வர, வயிற்றுப்புண் குணமாகும்.

வாரத்துக்கு 2,3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர, பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்.

நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தரும் இந்தக் கிழங்கு.

குடலில் உள்ள நல்ல கிருமிகளை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்புச் சக்தியும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும். தடமும் விரைவில் மறைந்துவிடும்.

குறிப்பு :

வாய்வு தொல்லை உள்ளவர்கள் இதய நோய் உள்ளவர்கள் உருளை கிழங்கை தவிர்ப்பது நல்லது சொல்லுகிறார்கள்

கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம்.


கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். 

கீரை சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்தது தான். கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை- அரைக்கீரை, பாலக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்.

கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி' போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும். கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம். இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் `ஏ' ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

கீரைகளிலுள்ள கரோட்டின் சத்துப்பொருள் அப்படியே நம் உடலுக்கு கிடைக்க கீரைகளை நீண்ட நேரம் வேக வைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கேரட்டின் சிதைந்து விடுகிறது. கீரைகள் `பி காம்ப்ளக்ஸ்' வைட்டமின்களையும் கொண்டுள்ளது.

ஒவ்வொருவரும் தினமும் சாப்பிட வேண்டிய கீரையின் பரிந்துரைக்கப்பட்ட அளவு இது.........

பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம். பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு 50 கிராம். கீரை வகைகள் சிறு பிள்ளைகளுக்கு வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதனால் பெரும்பாலான தாய்மார்கள் கீரை உணவை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்கின்றனர். பாக்டிரியா கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலமோ கீரைகள் மாசுபடுகிறது.

எனவே கீரைகளை நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் உணவில் சேர்க்கும் போது வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தலாம். நன்கு கழுவி சுத்தம் செய்து சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை வராது. கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும்.

கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும். கீரைகளை வெயிலில் உலர்த்தக்கூடாது. அப்படி செய்தால் அவற்றில் உள்ள கரோட்டீன் சத்து வீணாகி விடும். கீரைகளை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
 

Saturday, May 26, 2012

Top 10 Anti-Aging Foods
Top 10 Anti-Aging Foods

The general guidelines for the anti-aging diet are: keep your calorie consumption and saturated fat intake down; eat plenty of wholegrain, fresh fruits and vegetables; and cut down on salt and sugar. In addition to these general guidelines, there are specific foods that have a roll in anti-aging and that you should regularly include in your diet.

1. Avocado:
This fruit, which is usually eaten as a vegetable, is a good source of healthy monounsaturated fat that may help to reduce level of a bad type of cholesterol in body. Avocado is a good source of vitamin E and can help to maintain healthy skin and prevent skin aging (vitamin E may also help alleviate menopausal hot flushes). It is rich in potassium which helps prevent fluid retention and high blood pressure.

2. Ginger:
This spicy root can boost the digestive and circulatory systems, which can be useful for older people. Ginger may also help to alleviate rheumatic aches and pains.

3. Cruciferous vegetables:
The family of Cruciferous vegetables includes cabbage, cauliflower, broccoli, kale, turnip, brussels sprouts, radish and watercress. Cruciferous vegetables assist the body in its fight against toxins and cancer. You should try to consume at least 115g/40z(of any one or a combination) of these vegetables on a daily basis. If possible, eat them row or very lightly cooked so that the important enzymes remain intact.

4. Whole meal pasta and rice:
Complex carbohydrates provide a consistent supply of energy throughout the day and should make up the bulk of your diet. Wholemeal pasta is an excellent complex carbohydrate. It is high in fibre and contains twice the amount of iron as normal pasta. Brown rice is another recommended complex carbohydrate, which is high in fibre and B vitamins.

5. Soya:
Menopausal women might find that soya helps to maintain oestrogen levels. Soya may alleviate menopausal hot flush and protect against Alzheimer's disease, osteoporosis and heart disease. Look out for fermented soya products, which are more easily digested, therefore more nutritional, and do not generally cause food intolerances. You may want to check that soya products have not been genetically modified. Soya should not be confused with soya sauce, which is full of salt and should be used sparingly, if at all.

6. Garlic:
Eating a clove of garlic a day (row or cooked) helps to protect the body against cancer and heart disease. The cardioprotective effects of garlic are well recorded. One 1994 study in Iowa, USA, of 41,837 women between the age of 55 and 69 suggested that women who ate a clove of garlic at least once a week were 50 percent less likely to develop colon cancer. Another study at Tasgore Medical college in India suggested that garlic reduced cholesterol levels and assisted blood thinning more effectively than aspirin, thus helping to reduce the risk of heart disease.

7. Nuts:
Most varieties of nuts are good sources of minerals, particularly walnuts and brazi nuts. Walnuts, although high in calories, are rich in potassium, magnesium, iron, zinc, copper and selenium. Adding nuts to your diet (sprinkle them on salads and desserts) can enhance the functioning of your digestive and immune systems, improve your skin help control prevent cancer. Nuts may also help control cholesterol levels. Never eat rancid nuts, however, as they have been linked to a high incidence of free radicals.

8. Berries:
All black and blue berries such as blackberries, blueberries, blackcurrants and black grapes contain phytochemicals known as flavonoids-powerful antioxidants which help to protect the body against damage caused by free radicals and aging.

9. Water:
Drink at least 8 glasses of water every day in order to remain healthy. Water helps us to get rid of the toxins and unwanted waste materials from your body.
Don't rely on thirst; this sensation diminishes with age. Drink often and choose from nutritious liquids, including 100% fruit and vegetable juices, skim or low fat milk, broths, sparkling water, and teas. You can also get fluids from foods, especially those that are liquid at room temperature. Try gelatin, frozen yogurt, soups, watermelon, pickles, oranges, lettuce, tomatoes, etc.

10. Watermelon:
Both the flesh and seeds of the watermelon are nutritious so try blending them together in a food processor and drinking as a juice. The flesh contain vitamin A, B and C ; the seeds contain selenium, essential fats, zinc and vitamin E, all of which help against free radical damage and aging.
www.TrueHealthandHealing.org
 

Monday, May 21, 2012

நேரம் இருந்தால் முழவதையும் படிக்கலாம்


நேரம் இருந்தால் முழவதையும் படிக்கலாம்:
இவரது பெயர் ராமசாமியோ- குப்பு சாமியோ- கோவிந்த சாமியோ இருக்க கூடும்.. பெயரில் என்ன இருக்கிறது..?? விஷயத்திற்கு வருவோம்... 
இவருக்கு வயது சுமார் எழுபத்தைந்து.. படிக்க வசதி இல்லாத காரணத்தால் தன்னுடைய தந்தை செய்த அந்த மானங்கெட்ட விவசாய பொழப்பை தேர்ந்தெடுத்தார் தன்னுடைய பதினான்கு வயதில்... இதோ உருண்டு ஓடி விட்டது அறுபதாண்டுகள்... இந்த அறுபதாண்டுகளில் இவர் இந்த நாட்டுக்கு என்ன கிழித்திருக்கிறார் தெரியுமா..????
தன்னுடைய ஒரு ஏக்கர் விவசாய நிலத்தின் மூலம் ஒரு போக விவசாயத்தின் மூலம் சுமார் 350 டன் நெல் உற்பத்தி செய்திருக்கிறார்... ( ஒரு போகத்திற்கு தண்ணீர் கிடைத்ததும், உரம் வாங்க கடன் வாங்குவதுமே பெரும் பாடாகி விட்டதால் இவரால் ஒரு போகத்திற்கு மேல் விளைவிக்க முடியவில்லை..) மேலும் அவ்வப்போது உளுந்து, எள் போன்ற தானியங்களை ஒரு குத்து மதிப்பாக சொன்னால் கூட 100 டன்கள் விளைவித்திருப்பார்..
சுமார் 400 தங்கள் தாவர, மிருக கழிவுகளை ரீசைக்கிள் செய்து உபயோகித்திருக்கிறார்... வீட்டு வரி, தண்ணி வரி, வாய்தாவரி என்ற வகையில் இந்த நாட்டுக்கு இவர் கட்டிய வரிகளில் இவர் ஒரு மாடி வீட்டை கட்டி இருக்க முடியும்.. ஆனாலும் அவைகளை இவர் ஒழுங்காக கட்டிய பாவத்தால் ஒவ்வொரு மழை காலத்திலும் ஒழுகும் கூரையை கூட நேரத்திற்கு மாற்ற முடிந்ததில்லை...
இவரது தலையில் கட்டி இருக்கும் உருமா முழுதாய் இருக்கும் வரை இடுப்பில் வேட்டி என்ற பெயரில் இருக்கும்... அதுவே கந்தலாகி போனால் நீள நீளமாய் கிழிக்கப்பட்டு கோவணமாய் அவதாரமெடுக்கும்... ஆனால் நிச்சயம் அந்த கோவணத்தில் "இந்தியா" என்றோ.."சஹாரா.." :கிங் பிஷர்" என்றோ எழுதி இருக்காது...திருமணத்தின் போது கடனை வாங்கி தன்னுடைய மனைவி கழுத்தில் கட்டிய கால்பவுன் தங்கமும் அடகுக்கு போய் மூழ்கிவிட்டதால் மஞ்சள் கூட இழந்த கயிறு வெள்ளையாய் இளிக்கிறது... இவரது பாதுகாப்புக்கு ஒரு ரப்பர் செருப்பு கூட கிடைத்ததில்லை... இந்த பாவியை பற்றி பேசி நம் நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும்..??
நமக்கு வேறு வேலை இருக்கிறது.. டெண்டுல்கருக்கு பாரத ரத்னா வாங்கி கொடுத்து அவரை மந்திரியாக்கி அழகு பார்க்க வேண்டும்.. அவரல்லவா இந்த நாட்டிற்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்திருக்கிறார்..???

நன்றி : செந்தில் .K.நடேசன்உலகம் இனி உழவர்கள் கையில்.... தமிழின் முதல் வேளாண் நிகழ்நிலை இணையம்...


http://www.agriinfomedia.com/group/naturefarming

Sunday, May 20, 2012

திருக்குறள் - தமிழன் பெருமை
தமிழன் பெருமை - திருக்குறள் தமிழின் தலையார்ந்த நூல் திருக்குறள் அதை உலகப் பொதுமறை என்று அழைப்பதில் நாம் உவகை கொள்கிறோம். குறள் காலத்தால் அழியாதது என்றும் விதந்து பாராட்டுகிறோம். அதை வாழ்க்கை நெறி என்றும் கூறி மகிழ்கின்றோம்.


தமிழினத்தின் பழம்பெரும் பண்பாட்டையும் பாரம் பரியத்தையும் பற்றி உலகம் வியக்கிறது என்றால் அதற்கு தமிழிலக்கியம் முக்கிய காரணங்களில் ஒன்றாகும் தமிழகத்தின் மைலாப்பூர் வாழ் நெசவாளர் குலத்தோன்றலான திருவள்ளுவர் மானுடத்தின் தலைசிறந்த புலமைப் பெரியோர்களில் ஒருவராகக் கணிப்பிடப'படுகிறார். ஒட்டுமொத்தம மனிதச் சிந்தனையின் சிறந்த பிழிவு என்று திருக்குறள் போற்றப்படுகிறது இருப்பினும் திருக்குறளின் அழியாப்புகழ் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் மாத்திரம் சொந்தம் என்றால் மிகையல்ல.


இற்றைக்கு பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஆக்கம் பெற்ற திருக்குறள் தமிழினம் அப்போது அடைந்திருந்த அதியுச்ச நாகரீக வளர்ச்சிக்கு உதாரணமாகத் திகழ்கிறது அப்படியானதொரு சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவரால்தான் திருக்குறள் போன்ற இலக்கியத்தை படைக்க முடியும் பொது மானுடத்திற்கும்பொருத்தமான முறையில் தமிழர் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய விதத்தில் குறட் பாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


தனது காலத்திற்குறிய இலக்கிய மரபுகளை திருவள்ளுவர் மீறியுள்ளதை எம்மால் வியப்புடன் பார்க்க முடிகிறது எந்தவொரு இடத்திலாவது ஒரு இனத்தையோ சாதியையோ, மதத்தையோ மதப்பிரிவையோ அரசையோ ஆளம் வர்க்கத்தையோ அவர் குறிப்பிடாமல் அல்லது உயர்த்தியோ தாழ்த்தியோ பேசாமல் விட்டுள்ளதை குறளின் மிகப்பெரிய சிறப்பம்சமாக கருதமுடியும் தமிழ் என்ற சொல்லைக்கூட குறள் நூலில் எங்காயினும் காணமுடியவில்லை தலைமகன் இல்லாதா நீதி நூல் என்றும் குறளை வகைப்படுத்தமுடியும்.
தமிழ்ப் பாரம்பரியத்தின் படி ஒரு வாழ்க்கைத் தத்துவ நூல் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு பிரிவுகளை உள்ளடக்கி இருத்தல் வேண்டும் வள்ளுவர் வீடு பற்றிக்கூறாமல் விடுத்துள்ளார் அறம் பொருள் இன்பம் என்பன பற்றி கூறியவர் இந்த மூன்று கட்டங்களையும் தாண்டிச் செல்பவன் தானாகவே வீடு பேறு அடைவான் என்று அவர் கூறாமல் விளங்கவைத்துள்ளார்.


தர்மத்தின் படி இல்லறம் நடத்தி நீதி தவறாமல் பொருள் திரட்டி மனையாளோடு இன்பம் கண்டவன் முக்தி அடைவான் என்ற அர்த்தம் திருக்குறளில் தொக்கி நிற்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. திருக்குறளைத் துருவி ஆராயும் போது அதன் ஆசிரியர் மறுபிறப்பில் நம்பிக்கையுள்ளவர் என்ற உண்மை புலப்படும் மனித வாழ்வின் நான்கு படிநிலைகளான திருமணமாகாத காளைப்பருவம் இல்வாழ்வு ஒடுப்பம் துறவறம் என்பனவற்றில் திருவள்ளுவருக்கு ஏற்புடமை உண்டு என்பதை 41வது குறளில் இருந்து அறியலாம் கீதையின் அடிப்படைத்தத்துவமான கர்மயோகத்திற்கு நிகரான கருத்தை 371ஆம் குறளில் காணலாம்.


வெற்றி தோல்வி பாராமல் எடுத்த கருமத்தில் முழு ஈடுபாடும் முயற்சியும்காட்டும் பணிச் சிறப்பை இந்தக் குறள் வலியுறுத்துகிறது 618ஆம் இலக்கக் குறளிலும் இதே கருத்து வலியுறுத்தப்படுகிறது. இல்லறம் நடத்துபவன் உலக விவகாரங்களில் முழுஈடுபாடு காட்ட வேண்டும் ஒதுக்கக் கூடாது என்று வள்ளுவர் கூறுகிறார்.


அதே சமயத்தில் ஒரு இல்லறத்தான் வீண் விரயம் செய்யாமல் டாம்பீக மற்று வாழ வேண்டும் என்றும் அவர் எடுத்துரைக்கிறார். இல்வாழ்வு நல்லறமாக அமைய வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தக் கருத்துக்களை 48, 225ஆம் குறள்களில் காணலாம் பொருள் அனிதனுக்கு அடிமையாவதில்லை மனிதன் தான் பொருளுக்கு அடிமையாகிறான் என்ற கருத்தையும் திருக்குறளில் இருந்து திரட்டிக்கொள்ளலாம்.


ஓவ்வொரு அத்தியாயத்திலும் பத்துக்குறள் பாக்களைக் கொண்ட 133 அத்தியாயங்கள் குறள் நூலில் காணப்படுகின்றன மொத்தம் 2,660 வரிகளைக் கொண்ட 1330குறள் பாக்கள் இருப்பது கண்கூடு பெரும்பாலான குறள் பாக்களின் முதல் வரிகளில் ஏழு சொற்கள் இருப்பதால் அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகத்திய குறள் என்று அவ்வையார் அதைப் புகழ்ந்துள்ளார்.


திருக்குறளின் முதலாம் பாகம் இல்லறம் தொட்டு துறவறம் பற்றிய சிறப்பைக் கூறுகிறது. முதலாம் பாகத்தில் 38 அத்தியாயங்கள் இருக்கின்றன. அரச நெறி இராசதந்திரம் போர்த்தந்திரம் உள்ளடங்கலான உலக விவகாரங்கள் பற்றிக் குறளின் இரண்டாம் பாகம் கூறுகிறது. இதில் 70 அத்தியாயங்கள் உள்ளன குறளின் மூன்றாம் பாகத்தில் ஆண் பெண் இல்லற உறவுகள் பற்றிக் கூறும் 25 அத்தியாயங்கள் காணப்படுகின்றன மேற்கூறிய இராண்டாம் பாகக் குறள் பாக்கள் அரசர்களுக்கும் படைத்துறையினருக்கும் மாத்திரம் உரியதன்று உலகியல் வாழ்வில் ஈடுபடும் பொதுமக்கள் உள்ளடங்கலான அனைவருக்கும் பொருத்தமான கருத்துக்கள் அவற்றில் செறிந்துள்ளன ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்போரும் வரலாற்று ஆசிரியர்களும் இரண்டாம் பாகக் குறள்பாக்களை இன்ரும் துரவி ஆய்ந்து வருகின்றனர்.


இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த குறள் நூலின் உண்மையான பெயரும் அதன் ஆசிரியர் திருவள்ளுவரின் உண்மையான பெயரும் இன்று வரை தெரியவரவில்லை. குறள் என்பது காரணப்பெயர் சிறியது சுரக்கமானது குறகலானது என்பது குறள் என்ற சொல்லின் பொருள் அதேபோல் வள்ளுவர் என்பதும் குலப்பெயர் என்று ஆய்வாளர்கள் கூறுவர். வள்ளுவரின் இயற்பெயர் என்னவென்பது அறியப்படாததாக இருக்கிறது குறளைவிட வேறு நூல் அல்லது நூல்களை வள்ளுவர் படைக்கவில்லை என்பது ஆய்வாளர் முடிவு.


தமிழிலக்கியப் பரப்பில் மிகக் கூடுதலான பிறமொழிகளுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட ஒரே ஒரு நூல் என்ற சிறப்பு திருக்குறளுக்கு உண்டு. அதை ஆங்கில மொழிக்கு மாற்றிய ஜீ யூ போப் என்ற தமிழில் பாண்டித்தியம் பெற்ற ஆங்கிலேயர் தனது குறள் மொழிபெயர்ப்பு நூலுக்குச் செய்த முகவுரையில் பின்வருமாறு கூறுகிறார். குறள் ஒரு தனித்துவமான நூல் அதை வடமொழியில் இருந்து தமிழுக்கு மாற்றப்பட்ட நூல் என்று கூறுவது மிகப் பெருந்தவறு குறள் தூயதமிழில் ஆக்கப்பட்டுள்ளது அதில் வடமொழிக் கலப்பு சிறிதளவும் இல்லை தமிழறிஞர் போய் தனது மொழிப் பெயர்ப்பை ஆங்கில கவிதை நடையில் பாய்த்துள்ளார் பின்பு வந்த பல அறிஞர்கள் ஆங்கில மொழிக்குத் திருக்குறளை மாற்றியுள்ளனர்.


எமது காலத்தில் வாழும் கஸ்தூரி சிறினிவாசன் தவிர்ந்த பிறிதொருவராவது குறளை ஆங்கில கவிதை நடையில் மொழியாக்கம் செய்யவில்லை ஜீ.யூ.போப் அவர்கள் திருக்குறளின் மூன்றாம் பாகமான காமத்துப்பாலை மொழியாக்கம் செய்யாமல் விடுத்துள்ளார் கஸ்தூரி சிறினிவாசன் மூன்று பாகங்களையும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார் ராஜாஜி என்றழைக்கப்படும் ராஜகோபாலச்சாரியார் குறளின் முதலாம் இரண்டாம் பாகங்களில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பல குறட்பாக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நூலாக்கியுள்ளார். இந்த ஆக்கம் வித்தியாசமானது தத்துவ விளக்கங்கள் பிற இலக்கிய ஒப்பீடுகள் போன்றவற்றையும் குறள் ஒவ்வொன்றின் மொழிப் பெயர்ப்போடு ராஜாஜி இணைத்துள்ளார்.


மிக நீளமானதொரு முகவரையைப் போப் ஜயர் என்று மரியாதைகாரணமாக அழைக்கப்படும் ஜீ. யூ. போப் தனது குறள் மொழிபெயர்ப்புக்கு எழுதியுள்ளார் தமிழை வளப்படுத்திய பிற நாட்டு அறிஞர்களுள் வீரமா முனிவர் என்று தமிழிலும் தைரியநாத சுவாமி என்று வடமொழியிலும் இஸ்மதிசந்யாசி என்று உருதுவிலும் அழைக்கப்படும் கிறிஸ்தவ அருட்தந்தை கொன்ஸ்ரன்ரைன் பெஸ்சி என்பார்தான் முதன்மையானவர் என்று போப் குறிப்பிட்டுள்ளார் பெஸ்சி அவர்கள் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களையும் தமிழ் அகராதிகளையும் எழுதியதோடு தமிழ் எழுத்ததுச் சீர்திருத்தத்தையும் மேற்கொண்டார் திருக்குறளை இலத்தீன் மொழிக்கு மாற்றிய சிறப்பு பெஸ்சிக் உண்டு.


இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டாலும் அதில் மாற்றங்களோ இடைச்செருகல்களோ அகற்றுதல்களோ செய்யப்படாமல் அன்று போல் இன்றும் இருக்கும் சிறப்புக் குறளுடையாதகும் திருக்குறளுக்குப் பரிலேழகர் செய்த உரைநூலில் குறளில் வரும் அச்சம் என்ற சொல்லிற்கு மக்கள் என்று பொருள் கூறியுள்ளார். தமிழ் ஆர்வலரான எலிஸ் என்ற ஆங்கிலேயர் அச்சம் என்ற சொல்லை அகற்றிவிட்டுக் குறளில் மக்கள் என்று திருத்தம் செய்யலாமே என்று கூறியதோடு அதற்கான முயற்றிகளையும் மேற்கொண்டார் மூல நூல் களில் திருத்தம் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் எலிஸ் அவர்களின் முயற்றிக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அவர் அதைக் கைவிட நேர்ந்தது.


தமிழ் எழுத்தக்கள் தொடர்பான ஆய்வாளர்கள் திருக்குறளில் இன்று உயிர் எழுத்தாக கருதப்படும் (ஒள) இல்லையென்பதையும் குறளாசிரியர் (அவ்) என்ற உயிர்மெய் எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் அவதான்த்துள்ளார் தம்pழ் அரிச்சுவடியில் (ஒய) (ஐ) என்பன திருவள்ளுவருக்குப் பிந்திய காலத்தில் உய்ர் எழுத்துக்களாக இணைக்கப்பட்டுள்ளன இரண்டையும் அகற்றவேண்டும் என்ற அயக்கம் வலுப்பெற்று வரும் நிலையயில் திருக்குறளில் உள்ள ஆதாரம் அதற்கு உரமூட்டுவதாக அமைகிறது.


திருக்குறள் மொழிபெயர்ப்பை விட நாலடியார் 51 மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்களையும் ஜி. யூ. போப் ஆங்கிலத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் நாலடியார் நூல் நாலடி நானூறு என்றும் அழைக்கப்படுவதுண்டு நாலடி வெண்பாக்கள் நானூறைக் கொண்ட நூல் என்பது பொருள் தமிழ் நீதி நூல்களைப் பொறுத்தளவில் குறளுக்கு அடுத்த இடத்தில் நாலடியார் இருக்கிறது.


இனிமையும் கருத்தாழமும் இருந்தாலும் குறளின் சொற்களால் சுரங்கக்கூறி நயமாய் உரைக்கும் சிறப்பை நாலடியாரில் காணமுடியவில்லை குறளின் தனித்துவம் சொற் சிக்கனம் ஒவ்வொறு குறளிலும் வேறுபட்ட கருத்துக்களைத் தூயதமிழில் கூறும் திறமை என்பன வற்றில் பெருமளவில் தங்கியுள்ளது. திருக்குறளைத் தன்னகத்தே மொழியாக்க வடிவில் கொண்டிராத உலக மொழியொன்றும் இல்லை என்று துணிந்து கூறலாம்மிகக் கூடுதலான மொழிபெயர்ப்புக்கள் ஆங்கில மொழியில் காணப்படுகின்றன தமிழர்களில் மிகச் சிறந்ததொரு ஆங்கில மொழி பெயர்ப்பைச் செய்த புகழ் வ.வே. சு ஜயர் எனப்படும்வரகனேரி வேங்கட சப்பிரமணியம் என்பாருக்கு உண்டு தமிழ் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர் என்று வ.சு.வே ஐயர் சிறப்பிக்கப்படுகிறார்கள்.


தமிழ் மொழி ஆராய்ச்சி படைப்பிலக்கியம் கம்பராமாயண ஆய்வு மொழி பெயர்ப்புத்துறை பத்திரிக்கை துறை என்ற பல திசைகளில் அவர் ஆர்வம் காட்டினார் சங்க இலக்கியப் புலமையுடன் திருக்குறள் ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்கினார். தனது கட்டுரைகள் பலவற்றில் திருக்குறள் பாக்களை மேற்கோள்காட்டியும் விரிhவாக விளக்கியும் உள்ளார்.


ஆங்கிலம் பிரெஞ்சு ஜேர்மன் இலத்தீன் தமிழ் மொழிகளில் 1820-1886காலப்பகுதிகளில் வெளிவந்த மொழிபெயர்ப்புக்களை ஆய்வு செய்த பின் தனது திருக்கறள் ஆங்கில மொழி பெயர்ப்பை 1914இல் வெளியிட்டார்.
இந்த நூலுக்கு மிக நீண்ட அரிய ஆய்வுரையை அவர் எழுதினார் திருக்குறள் ஆராய்ச்சிக்கு இந்த ஆய்வுரை அடித்தளமாக அமைகிறது. தமிழனத்தின் நாகரீக வளர்ச்சியின் உயர்வை கூறுவதோடு தமிழ் மொழியின் அன்றைய உன்னத நிலையையும் திருக்குறள் கூறி நிற்கிறது. வட மொழியின் தாக்கத்தால் உயர்ந்த தமிழ் மொழி என்ற பொய்யுரையை மறுக்கும் சான்றாதாரமாகத் திருக்குறள் விளங்குகிறது. சொல் வளமிக்க தனித்தியங்கும் திறன்மிக்க திராவிட மொழிக் குடம்பத்தின் தாயகத் தமிழ் துலங்குகிறது.


தமிழ் எல்லாவகையிலும் வட மொழிக்கு நிகரானது அல்லது உயர்வானது என்று போப் ஐயர் கூறியதை ஒவ்வொரு தமிழனும் தனது சிந்தையில் பதிவு செய்து வைத்திருக்கவேண்டும் இதற்குத் திருக்கறள் துணைநிற்கும்.

நாவல் பழத்தையும் சாப்பிடலாம். அதுவும் சர்க்கரை நோயை கட்டு படுத்தும்.
நாவல் பழத்தையும் சாப்பிடலாம்.  அதுவும் சர்க்கரை நோயை கட்டு படுத்தும்.


நாவல் பழக்
கொட்டையை நன்றாகக்
காயவைத்துப்
பொடி செய்து தேனில்
மூன்று நாட்களுக்கு ஊறவைத்து,
சர்க்கரை நோய்
உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன்
அளவுக்குத் தினமும்
மதியச்
சாப்பாட்டுக்கு அரை மணி நேரம்
முன்பாகச் சாப்பிட்டு வர
வேண்டும். இப்படி 48
நாட்களுக்குச்
சாப்பிட்டுவர, இன்சுலின்
சுரப்பு அதிகரித்து சர்க்கரை நோய்
கட்டுப்படும்.நாவல் பழத்தையும் சாப்பிடலாம்.  அதுவும் சர்க்கரை நோயை கட்டு படுத்தும்.

Saturday, May 19, 2012

தொப்பை குறைக்க உதவும் அன்னாசிப்பழம் பற்றிய தகவல் !!!

தொப்பை குறைக்க உதவும் அன்னாசிப்பழம் பற்றிய தகவல் !!!

எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் அன்னாசிப்பழம் . பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இப்போது எல்லா நாடுகளிலும் உற்பத்தி ஆகிறது .

அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரியமருந்தாகவும் இருக்கிறது .

எல்லா பழங்களிலுமே இயற்கையாகவே அதிக சக்தியளிக்கும் தன்மை உண்டு.
100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் விட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது. அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலினிக்கு செரிமான சக்தி உண்டு

நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும். இச்சாற்றால் நன்கு வாயை கொப்பளித்தால் தொண்டை அழற்சி நோயில் இருந்து விடுபடலாம்.இரத்தசோகை ,மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி ஆகிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மையும் இப்பழத்திற்கு இருக்கின்றது என்றால் பாருங்களேன் இதன் சக்தியை .

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில்கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை இருக்காது .இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.....

தேகத்தில் போதுமான இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்து . நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அதன் பயன்களை நீங்களே அறிவீர்கள் .

அன்னாசிப் பழத்தில் ஜாம் , ஜூஸ், வற்றல் என்பன தயாரிக்கப்படுகிறது . அன்னாசி பாயாசம் ரொம்பவும் ருசியாக இருக்கும் . அன்னாசி பழம் சப்பிடாதோர் ஒருமுறை சாப்பிட்டு தான் பாருங்களேன் 

Better light a candle than curse the darkness (New Version = Better install solar panels than curse the government)


 Better light a candle than curse the darkness (New Version = Better install solar panels than curse the government)For further details on Collective Farming and  Solar Energy consulting, contact:
SUGA Consulting Services
Flat No.C-3-4, C-Block, 3rd Floor, Panna Oasis Apts,
35-36, M.K. Amman Koil Street, Mylapore, Chennai – 600004.
Mobile:
Airtel: 91-99400-58497,
BSNL: 91-94454-37117, 
Vodafone: 91768-71191
Landline: 91-44-2498-4148
http://www.suga-consulting-services.com/


FREE Consulting Services to Agriculturists in Tamil Nadu
---------------------------------------------------------
SUGA Consulting Services dedicated and offerig FREE Consulting Services to Agriculturists in Tamil Nadu to offer a potential growth in their levels.  All Agriculrists in Tamil Nadu can contact us for consulting services.


SUGA Consulting Services – Blog
Please visit our blog for our SUGA Consulting Services activities
http://suga-consulting-services.blogspot.com/


SUGA Employment Services – Blog
Please visit our blog of SUGA Employment Services, for Employment Opportunities and Employment Services.
http://suga-employment-services.blogspot.com/


SUGA Educational Services – Blog


Please visit our blog of SUGA Educational Services, to know the Educational Services provided by us.
http://suga-educational-services.blogspot.in/


SUGA Business Services – Blog
Please visit our blog of SUGA Business Services, to know the Business Services provided by us
http://suga-business-services.blogspot.in/


Email :
N.Sugavanam, CEO – nsugavanam@gmail.com,
For enquires in Consulting Services, with SUGA Consulting Services, send email to:
sugaconsultingservices@gmail.com 
For enquires in Employment Services, with SUGA Employment Services, send email to:
sugaemployment@gmail.com
For enquires in Business Services, with SUGA Business Services, send email to:
suga.business.services@gmail.com


Mobile:
Airtel: 99400-58497,
BSNL: 94454-37117, 
Vodafone: 91768-71191
Landline: 91-44-2498-4148