Total Pageviews

Tuesday, May 8, 2012

கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும்...



கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் 
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும்...

இன்றைய தலைமுறையினர் நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதற்கு நாம் நமது உணவு பழக்கவழக்கத்தில் சிறிது கவனம் செலுத்தினால் போதும். இந்த நோயிலிருந்து எளிதில் தப்பிக்க கோவைக்காய் உணவில் அடிக்கடி சேர்த்துத்கொண்டால் போதும்.

கோவைக்காயை நிறைய பேர் பாகற்காயை ஒதுக்குவது போல உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி விடுகிறார்கள். அவர்கள் நாக்கு சுவை யை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டால் எல்லா உணவுகளும் போன்று கோவைக்காயும் விருப்பமுடையதாகத் தான் ஆகும்.

கோவைக்காய் கொஞ்சம் துவர்ப்பு சுவையுடையது. இதை பொறியல், கூட்டு, சாம்பார் என்றெல்லாம் பலவிதமாக செய்து சாப்பிடுவார்கள். ஆனால் இதில் கோவைக்காய் பச்சடி தான் சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. இது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

பரம்பரையாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் உணவில் கோவைக்காயை 35 வயது முதலே சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க லாம். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பி விட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.

வாரம் 2 நாள் கோவைக்காயை சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் சரியாகும். கோவைக்காயை பீன்ஸ் போல பொறியல் செய்து சாப்பிட்டா லும் சுவையாக இருக்கும். மோருடன் ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து சேர்த்து அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன எல்லாப் பலன்களையும் பெறலாம்.

ஆகவே கோவைக்காய் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து சாப்பிடுவதினால் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்..

No comments:

Post a Comment