Total Pageviews

Thursday, November 22, 2012

Wednesday, November 21, 2012

மனிதனை நம்புறதைவிட மண்ணையும் மரத்தையும் நம்பலாம்...
பச்சைத் தங்கத்தில் பொம்மை செய்வோம்!

''மனிதனை நம்புறதைவிட மண்ணையும் மரத்தையும் நம்பலாம். இன்றைய சூழ்நிலை யில் நெல், தென்னை விவசாயத்தை விட மரம் வளர்ப்புலதான் கணிசமான லாபம். அதற்கு நானே சாட்சி'' என தன்னைச் சந்திப்பவர்களிடம் எல்லாம் பூரிப்போடு
 சொல்கிறார் புதுக் கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் வசிக்கும் ராமநாதன். வானம் பார்த்த பூமியில் மரத்தை வளர்த்து, மழையை எதிர்பார்க்கிறேன். நான் மண்ணுக்குச் செய்றேன். மண் எனக்கு செய்யுது. பொது நலத்திலும் நான் நிறைவான வருமானத்தோட தான் வாழறேன்

அவரது வீட்டின் முகப்பில் பசுமைத் தோட்டம் எனப் பெயரிடப்பட்டு இருந்தது. உள்ளே சென்றதும் ஏதோ காட்டுக்குள் நுழைந்த உணர்வு. பலவிதமான மரங்கள் ஒன்றை ஒன்று தழுவி கலப்படம் இல்லாத காற்றை வீசிக் கொண்டு இருந்தன.

''இந்த மரங்களாலதான் பிள்ளைகளோட திருமணத்தையே செஞ்சு முடிச்சேன். ஒரு ரூபாய் கடன் வாங்கலை. சொத்தில் ஒரு பிடி மண்ணை நான் விற்கலை. எல்லாம் மரம்தந்த வரம். மரம் வளர்ப்புல பலருக்கு விருப்பம் இல்லாம இருக்கக் காரணமே, உடனடியான பலன் எதுவும் கிடையாது என்கிற எண்ணம் தான். மற்ற விவசாயத்துல செலவுகள்போக கிடைக்கிற லாபத்தைவிட மரங்களால பல மடங்கு அதிகம். என்னை பார்த்து நிறையப்பேர் மரம் வளர்ப்புல இறங்கி இருக்காங்க. நானும் அவங்களுக்கு என்னால் முடிஞ்ச உதவிகள் செய்றேன்'' என்றார்.

தோட்டத்தைச் சுற்றிப்பார்க்கத் தொடங்கினேன். ஆங்காங்கே பறவைகளுக்காக சிறிய தண்ணீ ர் தொட்டிகள் உள்ளன. அவைகள் மூலமாக, பல்வேறு மர விதைகள் கிடைத்தனவாம். '' இங்கே 120 வகையான மரங்கள் இருக்கின்றன. நம் மண்ணுக்கான மரங்கள் பலவற்றை நாம் புறக்கணிச்சுட்டோம். அதனால், நம் பழமையான மரங்களையும் தேடிக்கிட்டு இருக்கேன்'' என்றவர் ஒவ்வொரு மரத்தைப் பற்றியும் சொல்லி சிலிர்க்க ஆரம்பித்தார்.

''இந்த மரத்தின் பெயர் கருங்காலி. பச்சைத் தங்கம் என மர ஆர்வலர்கள் அழைப்பாங்க. இந்த மரத்தில்தான் குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைகள் செய்வாங்க. சாதாரணமாக, விளையாட்டுப் பொருட்களை புள்ளைங்க வாயில்வைக்கும். ஆனா,இந்த மரம், நோய் நீக்கி. அதனால், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இதோ... இந்த ஈர பலாமரக் காய்களைச் சமைச்சா, அசைவ கறிபோலவே இருக்கும். இதன் பெயர் பாம்பு கொல்லி. இந்த மரம் இங்கே கிடைக்காது. மலைப் பிரதேசங்கள்லதான் கிடைக்கும். இது இருக்கும் இடத்தைச்சுத்தி 100 அடி சுற்றளவில் எந்தப் பாம்புகளும் வராது. இரவு நேரத்துலகூட நான் பயம் இல்லாம தோட்டத்தைச் சுத்திவர இந்த மரம்தான் காரணம்.

குமிழ் மரம் ஆஸ்திரேலிய மரம். ஏழு ஆண்டுகள்ல வளர்ச்சி அடைஞ்சுடும். செயற்கை கை, கால்களை இதுலதான் செய்வாங்க. எடை குறைவானது. செஞ்சந்தன மரம் ஜப்பான் நாட்டுல பாதுகாப்புக்காகப் பயன்படுத்துறாங்க. இந்த மரத்தை ஊடுருவி அலைகற்றைகள் வர முடியாது. மகோகனி மரத்துலதான் வெள்ளை மாளிகை கட்டப் பட்டது. கொக்கு மந்தாரையும் அந்தி மந்தாரை யும் பில்லி சூன்யம் நெருங்கவிடாம செய்யும்'' என விவரித்துக்கொண்டே சுற்றிக்காட்டினார். இங்கே வருடந்தோறும் வனத் துறையில் இருந்து மாணவர்கள் பயிற்சிக்காக வருவார் களாம்.

''எனக்கு பணத் தேவைகள் வரும்போது மரத்தை விற்றுவிடுவேன். அந்த இடத்தில் மரக் கன்று ஒன்றை உடனே நட்டுவைத்து விடுவேன். யாராவது மரம் வளர்க்க ஆசைப் பட்டால் சொல்லுங்கள். நான் அவர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன்'' என்ற ராமநாதன்.

நன்றி: சி.சுரேஷ்

Hi,

SUGA Employment Services is providing Human Resources (HR) and Placement Services, Employment Services to Software / IT / ITES / BPO and other Core industries.

SUGA Employment Services provides the following Employment Services:

 • HR and Placement Consulting Services
 • Providing required Manpower in various skill levels
 • Providing Permanent employees on Monthly income basis
 • Providing Human Resources on hourly basis for various value-added services with good computer skills
 • Cost Reduction and Cost Minimization in Employees Recruitment and Training
 • Campus Recruitment
 • Training before Campus Recruitment
 • Conducting Recruitment Written test, Interviews, Group Discussions as per Client Human Resources Requirements
 • Employees Communication Skills Training
 • Employees Soft skills Training
 • Employees Self Development / Motivational Training
We have 130+ clients in Software, BPO, ITES, Banking, Financial Services, Insurance, TPA, Automobiles, Construction, Real Estate, Medical industry, Hospitals, Jewelry Industry, Air conditioning and Refrigeration, Electrical wires and Cables, Plastics,  Fabrication and Welding, Education and Electronics industry

Thanks & Regards

Sugavanam N, M.A., F.I.I.I., MBA
CEO and Chief Strategic Consultant,

Mobile:  Vodafone: 91-91762-44989, 9176871191,  AirTel: 91-9940058497,  
Landline: 91-44-2498-4149

Please visit our Official web site:  www.sugaconsulting.in 

Please visit our another Official web site:  www.suga-consulting-services.com 

Email: nsugavanam@gmail.com

sugaemployment@gmail.com 


SUGA Employment Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Shopping Complex, 180, Luz Church Road, (Landmark: Near Luz Pillaiyar Koil)
Mylapore, Chennai – 600004
----------------------------------------------------------------------
SUGA = Success Unlimited Guaranteed Always
----------------------------------------------------------------------
Please visit our blog for Employment Opportunities and Employment Services:

Please visit our blog for our Consulting Services:

Please visit our blog for our Educational and Training Services:

For Job Seekers:  Please send your Resume / CV to: nsugavanam@gmail.com

Join me in FaceBook:  

நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் , தொழிலகங்களிலும் ஒரு மரம் நடுங்கள் - துபாய்...Plant a Tree in Dubai...

ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரு சிறிய பாலைவன நாடு ஏழு சிறு ராஜ்யங்களை உள்ளடக்கியது. இந்த நாடு உருவானதன் 41 ஆம் ஆண்டுகள் ஆகிறது.இந்த நாட்டின் தேசிய தினம் டிசம்பர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிற து. இந்த ஆண்டு தேசிய தின கொண்டாட்டங்களின ் கருவாக இந்த நாட்டின் துணை ஜனாதிபதியும், பிரதமரும் துபாய் ராஜ்யத்தின் ஆட்ச்சியாளருமான மாண்புமிகு ஷைக்.முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் நாட்டுக்கு விட்டுள்ள வேண்டுகோள் : "ஐக
்கிய மரம் (Union Tree)" நடுங்கள் என்பதாகும்! அதாவது நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் , தொழிலகங்களிலும் ஒரு மரம் நடுங்கள் என்பதாகும். இப்படி நடப்படும் ஒவ்வொரு மரக்கன்றையும் புகைப்படம் எடுத்து அவரது ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் பகிருமாறுவேண்டுகோள் விடுத்துள்ளார். நகராட்ச்சிகள், அரசுத்துறை அலுவலகங்கள், தன்னார்வ அமைப்புகள்,மற்ற ும் பல தனியார் நிறுவனங்கள் மரக்கன்றுகளை மொத்தமாக உருவாக்கி மக்களுக்கு வழங்க ஏற்பாடுகளை துவக்கியுள்ளனர் . வரும் டிசம்பர் இரண்டாம் தேதிக்குள் இங்கு பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கு ம், இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள் அவை கணிசமாக வளர்ந்து கண்ணுக்கும், மனதுக்கும் குழுமையை தருவதுடன் சுற்றுச்சூழலுக் கும் பெரும் மாற்றம் தரும்.
என்ன ஒரு உன்னதமான வழிமுறை? பாராட்டப்படவேண் டிய முயற்சி. நோக்கம் வெற்றியடைய வாழ்த்துவோம்!.
-நன்றி:கரீம் கனி

முருங்கைக்கீரை...
முருங்கைக்கீரை என்றவுடன் நம் எல்லோருக்கும் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம்தான் ஞாபகம் வரும். ஆனால் முருங்கைக்கீரையில், மற்ற உணவுப்பொருட்களில் இல்லாத அற்புதமான வைட்டமின்,இரும்பு சத்துக்கள் இருப்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கின்றோம். பெரும்பாலும் இது இலவசமாகவே கிடைப்பதால், இதனை பலர் அலட்சியப்படுத்துகிறார்கள். இதில் உள்ள பயன்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

தேங்காயை கற்பக விருட்சம் என அழைப்பது போல முருங்கையை பிரம்ம விருட்சம் என போற்றுகின்றனர். இக்கீரை மரத்தில் கிடைப்பதால் நிறைய பஞ்சபூத ஆற்றல்கள் உள்ளன. மனிதர்கள் சாப்பிடக்கூடிய கீரைகளில் மிகவும் முக்கியமாக சாப்பிடக்கூடிய கீரை முருங்கையும், கறிவேப்பிலையும் தான். ஏழைகளின் பிணிகளை விரட்டும் அற்புதக்கீரை. மலிவானது. எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. மனித குலத்திற்கு என படைக்கப்பட்ட முதல் தர கீரை முருங்கையாகும்.

 

முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.  

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். முருங்கைக் கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும், உறுதியும் கிடைக்கிறது.

முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும். மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக் கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும்போது, ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுவலி குணமாகும்.

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையையும் அகற்றும். 

தலை முடி நன்கு வளர தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த முருங்கைக்க்கீறை சூப் செய்யும் முறையை தற்போது பார்ப்போமா?

முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு

முதலில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

தினமும் இந்த முருங்கைக்கீரை சூப் பருகினால் தலைமுடி உதிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த முருங்கைக்கீரையை இனியும் நாம் உதாசீனப்படுத்தாமல், தினமும் பயன்படுத்தி, ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திடுவோம்.

Hi,

SUGA Employment Services is providing Human Resources (HR) and Placement Services, Employment Services to Software / IT / ITES / BPO and other Core industries.

SUGA Employment Services provides the following Employment Services:

 • HR and Placement Consulting Services
 • Providing required Manpower in various skill levels
 • Providing Permanent employees on Monthly income basis
 • Providing Human Resources on hourly basis for various value-added services with good computer skills
 • Cost Reduction and Cost Minimization in Employees Recruitment and Training
 • Campus Recruitment
 • Training before Campus Recruitment
 • Conducting Recruitment Written test, Interviews, Group Discussions as per Client Human Resources Requirements
 • Employees Communication Skills Training
 • Employees Soft skills Training
 • Employees Self Development / Motivational Training
We have 130+ clients in Software, BPO, ITES, Banking, Financial Services, Insurance, TPA, Automobiles, Construction, Real Estate, Medical industry, Hospitals, Jewelry Industry, Air conditioning and Refrigeration, Electrical wires and Cables, Plastics,  Fabrication and Welding, Education and Electronics industry

Thanks & Regards

Sugavanam N, M.A., F.I.I.I., MBA
CEO and Chief Strategic Consultant,

Mobile:  Vodafone: 91-91762-44989, 9176871191,  AirTel: 91-9940058497,  
Landline: 91-44-2498-4149

Please visit our Official web site:  www.sugaconsulting.in 

Please visit our another Official web site:  www.suga-consulting-services.com 

Email: nsugavanam@gmail.com

sugaemployment@gmail.com 


SUGA Employment Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Shopping Complex, 180, Luz Church Road, (Landmark: Near Luz Pillaiyar Koil)
Mylapore, Chennai – 600004
----------------------------------------------------------------------
SUGA = Success Unlimited Guaranteed Always
----------------------------------------------------------------------
Please visit our blog for Employment Opportunities and Employment Services:

Please visit our blog for our Consulting Services:

Please visit our blog for our Educational and Training Services:

For Job Seekers:  Please send your Resume / CV to: nsugavanam@gmail.com

Join me in FaceBook:  

Tuesday, November 20, 2012

இன்று வலைக்குள் போட்டுவிட்டால், அது கி.பி.2104 ஆகஸ்டில்கூட யாரோ ஒரு தனியனால் படிக்கப்படலாம். உறைந்த நிரந்தரம்தான் அதன் சிறப்பு - http://sugavanam-tamil-stories-jokes.blogspot.in/Tamil Writer Sujatha writing about blogs...

இன்று வலைக்குள் போட்டுவிட்டால், அது கி.பி.2104 ஆகஸ்டில்கூட யாரோ ஒரு தனியனால் படிக்கப்படலாம். உறைந்த நிரந்தரம்தான் அதன் சிறப்பு. இதனால் வலைப்பதிவுகளை நம் பழங்காலத்துக் கல்வெட்டுகளுக்கு ஒப்பிடலாம். இப்போது புதிதாக பிலாக்ஸ் (blogs) என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயசில் நாங்கள் எல்லோரும் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையின் மறுவடிவம்தான். ‘இதோ பார் என் கவிதை’, ‘இதோ பார் என் கருத்து’, ‘இதோ பார் உலகுக்கு என் உபதேசம்’ என நானும் இருக்கிறேன் நண்டுவளை யில் என்று, ஒவ்வொரு தனிமனித னும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக் குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு, யாராவது பதில் தரு கிறார்களா என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது! பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்.

Saturday, November 17, 2012

ஆளுக்கொரு மரம் நடவேண்டும்....ஆளுக்கொரு மரம் நடவேண்டும்...

பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன நிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன.
காடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்வு, புவி வெப்பம
் ஏற்பட்டு சில பகுதிகளில் அதிக மழை, சில பகுதிகளில் வறட்சி உருவாகிறது. கடலோரப் பகுதிகளில் மரங்கள் வளர்க்கப்படும்போது அலைகளை கட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்கு உண்டாகிறது. புவியைக் காத்தால் தான் உயிரினங்களைக் காக்க முடியும்.
இந்தியாவில் 33 சதவிகித அளவுக்கு இருந்த காடுகள் குறைந்து தற்போது 22 சதவிகித காடுகள் மட்டுமே உள்ளன. இந்த 11 சதவிகிதத்தை அடைய வேண்டும் என்றால் 54 கோடி மரங்களை நடவேண்டும். வனத்துறை மட்டுமே இந்தப் பணியை செய்ய முடியாது. எனவே நாமும் ஆளுக்கொரு மரம் நடவேண்டும்.

பழ மரங்கள் நட்டாலும் பலன் தரும் வரை காத்திருக்கும் பொறுமை வேண்டும்...நாம் மரமோ அல்லது செடியோ வளர்க்கலாம். முதலில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது வளர்க்க தேவைப்படும் இடம். ஒரு கனசதுர அடி அளவு மண் போதுமானது ஒரு பப்பாளி வளர்க்க. இன்னும் இரண்டு கனஅடி இருந்தால் ஒரு முருங்கை நட்டு விடலாம். இன்னும் இரண்டு கனஅடி இருந்தால்வேம்பு நட்டு விடலாம். மக்கள் மரங்களிடமும் உடனடி பலனை எதிர்பார்க்கிறார்கள். பழ மரங்கள் நட்டாலும் பலன் தரும் வரை காத்திருக்கும் பொறுமை வேண்டும். பெரிதாக
 வளருமே கூரையை இடிக்குமே என்றும் காரணம் சொல்கிறார்கள், எந்த மரமும் ஒரே நாளில் அப்படி வளர்ந்து விடப்போவதில்லை எப்படி வளர வேண்டும் என நம்மால் தீர்மானிக்க இயலுமே! மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதிலும் சிரமம் பார்க்கிறார்கள். எந்த மரமும் வடிகட்டிய குடிநீரை எதிர்பார்பதில்லை, கழிவு நீரை திருப்பி விட்டாலும் போதும். மேலதிக பலனாக கொசுக்களிடமிருந்து விடுதலையும், நிலத்தடி நீரும் உயரும். கைவிடப்பட்ட மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை இந்த வழியில் செயல்படுத்தலாமே!
வீடுகளை சுற்றி சுற்றுச்சுவர், கொஞ்சம் சந்து போல நிலம் இருந்தால் நெட்டலிங்க மரம் நடலாம். வீட்டில் தூசி சேராது. கிளைகள் பரப்பாது, உயரமாக வளரும். நகரமயமாகி வரும் சூழலில் நம் குழந்தைகள் ஆஸ்த்துமா, தோல் வியாதிகளில் இருந்து காக்கும். இதிலும் மக்களுக்கு புயல் வந்தால் சாய்ந்து விடும், வீடு இடிந்து விடும்!! என்றெல்லாம் அச்சம் இருக்கிறது!! மிக ஆழமாக தோண்டி நடலாம் அல்லது மாற்றுச் செடியாகசவுக்கு நடலாம்.

நிழல் தரும் மரம் நடுவது... நிழல் தரும் மரம் நடுவது....

மக்கள் பயனுற செய்யும் மூன்று செயல்கள் நிலையான தர்மங்கள் ஆகும் :
1. மக்கள் தாகம் தீர்க்க கிணறு வெட்டுவது
2. அறியாமை அகற்றும் கல்வி புகட்டுவது
3. நிழல் தரும் மரம் நடுவது.
இவை மூன்றும் நாம் மறைந்த பிறகும் நமக்கான நன்மைகளை தேடித் தரும். அசோகர் போர் செய்து பலரைக் கொன்றார் என்பதை விட அவர் சாலையெங்கும் மரம் நட்டினார் என்பதே பலரின் நினைவில் நிற்கிறது. குழந்தையொன்று பிறந்தால் அதன் பெயரில் தேக்கு மரம் நடலாம
், வளர்ந்த பின் பலன் தரும். திருமணங்களில் மாமரம், தென்னங்கன்று பரிசளிக்கலாம், வாழ்வாங்கு வாழும். அன்புக்குரியவர் இறந்தால் அவர் பெயரில் வேம்பு நடலாம், நிழலாகிநிற்கும்.
குழந்தைகளை மரங்களை நேசிக்க கற்றுக் கொடுத்தால் அவை மனிதர்களை நேசிக்கவும் எளிதில் கற்றுக் கொள்ளும். குழந்தைகளிடம் ஜீவகாருண்ய ஒழுக்கம் வர செல்லப் பிராணிகளை வளர்க்க பழக்கலாம். சுத்தம், இடமின்மை சவால்கள் ஏற்படும் சூழலில் செடிகள் வளர்ப்பதே சிறந்த மனப்பயிற்சி.வாழ்வோம் மரம்களுடன்

Wednesday, November 14, 2012

கூகிள் உருவான கதை ...கூகிள்`ளை தெரியாதவர்கள் கிடையாது...
ஆனால் கூகிள்`ளை பற்றி தெரிந்தவர்கள் எத்தனை பேர்?....

இன்று கூகிள் என்றாலே தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் அப்படிப்பட்ட கூகிள் உருவான கதை எத்தனை பேருக்கு தெரியும்! இதோ உங்களுக்காக, கற்றது கையளவு கல்லாதது உலகளவு தெரியாதவருக்கு இந்த பதிவு உதவும் ..

தெரியாததை தெரிந்து கொள்ளுங்கள் ..

ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள். அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட உள்ளக படங்களையெல்லாம் இணைத்திருக்கிறேன். இது எவ்வளவு ஜாலியான கம்பனின்னு படங்களை பார்த்தாலே தெரியும்.

ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரியJustify Fullஅமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.

இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்?

வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், “”அப்படியா, தேங்க்ஸ்!” என்றார்.

“”தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!”

இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.

லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.

கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது. 1998 நவம்பரில் தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கி யிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை. Sun-னும் IBM-மும் சில Sun Ultra II,F50 IBM RS/6000 செர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்க விலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது. (அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள் என்னவாயிருக்கும்?…யூகிக்க கூட இயலவில்லை.)

நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்… ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?

கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒரே குறைபாடு, குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்த மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத வலைப் பக்கங்களையெல்லாம் பீறாய்ந்து கொண்டுவந்து போட்டுவிடும். தங்கள் வெப் சைட்தான் முதலில் வர வேண்டும் என்பதற்காக சர்ச் எஞ்சினை நயவஞ்சகமாக ஏமாற்றுவதற்குப் பலர் சதித் திட்டங்கள் வேறு செய்து வைத்திருந்தார்கள்.

கூகிள்தான் முதல் முதலாக பக்கங்களைத் தரப்படுத்தி மார்க் போட்டு உருப்படியான தகவல்களை முதலில் கொண்டு வந்து தர ஆரம்பித்தது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தவர் லாரி பேஜ். ஒரு வலைப் பக்கத்தை நிறையப் பேர் சிபாரிசு செய்து இணைப்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தால், அதிலும் பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்தால் அதிக மார்க் என்பது இதன் தத்துவம். கூகிளையும் ஏமாற்ற முடியும்; ஆனால் கஷ்டம்.

கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னவோ கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

கூகிள் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில் தருகிறது;

கூகிள் மேப் என்ற சேவையில் அமெரிக்காவின் வரைபடம் மொத்தமும் வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஓர் ஏரியாவில் போய் நின்றுகொண்டு இங்கே பக்கத்தில் பிட்ஸா எங்கே கிடைக்கும் என்றால் உடனே காட்டுகிறது.

லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி நடத்துகிறார்கள்.

பி.எச்டி மாணவர்கள் காப்பி அடிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேடித் தருகிறார்கள்.

பறவைப் பார்வையாக சாட்டிலைட்டிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள் (ஊரான் வீட்டு நெய்யே என்று இந்தியாவின் தலைப்பக்கம் கொஞ்சம் கிள்ளி பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை.)

கூகிள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்கள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டாப்பில் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது வரை காட்டுகிறது (ஆழ்வார்பேட்டையில் அல்ல, அமெரிக்காவில்!). கூகிள் செவ்வாய் என்ற ப்ராஜெக்டில் செவ்வாய் கிரகத்தின் நுணுக்கமான போட்டோக்களை கலர் கலராக சேமித்து வைத்திருக்கிறார்கள்.

உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனம்- ஒரு வலைப் பக்கம் தேவை என்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக்கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்; மற்றதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜி மெயில்தான் இப்போது சூடான மெயிலை விட அதிகம் நாடப்படுகிறது. எல்லா இ-மெயில் கம்பெனிகளும் பிசுகிப் பிசுகி ஐம்பது மெகாபைட், நூறு மெகாபைட் என்று இடம் தந்துகொண்டிருந்தபோது கூகிள் மட்டும் ஒரேயடியாக ஆயிரம் எம்.பி. இலவசம் என்று அறிவித்துப் போட்டியாளர்களைப் பதறி ஓட வைத்தார்கள். பிறகு இது இரண்டாயிரத்தைத் தாண்டி இலவசமாக இன்னும் வளர்ந்துகொண்டே போகிறது.

இன்டர்நெட் பூராவும் அநியாயத்துக்குக் கொட்டிக் கிடக்கும் மற்றொரு விஷயம் செக்ஸ். குழந்தைகள் கூகிளில் தேடும்போது பலான சமாச்சாரங்கள் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பதற்காக முக்கியமான வார்த்தைகளை வைத்து மேற்படி சரக்கா என்பதை நிர்ணயித்து வடிகட்டி விடுகிறார்கள். ஆனால் படங்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டருக்கு கண்ணில்லை. ஒரு படத்தைக் காட்டி பக்திப் படமா, பலான படமா என்று கம்ப்யூட்டரை சரியாகச் சொல்ல வைத்துவிட்டால் கேள்வி கேட்காமல் டாக்டர் பட்டம் கொடுக்கலாம். சில கூகிள் விஞ்ஞானிகள் சேர்ந்து இதற்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

மனித வடிவம், தோல் நிறம் எல்லாவற்றையும் எண்களாக மாற்றி ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்குப் போட்டு படத்திலிருப்பது சம்திங் சம்திங்தான் என்பதை பெரும்பாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

எந்த வார்த்தையை எந்த ஊர் ஜனங்கள் அதிகம் தேடுகிறார்கள் என்று தேதி வாரியாகப் படம் வரைந்து காட்டுகிறார்கள்.

அப்துல் கலாம் என்ற பெயரை கோவை மக்கள்தான் அதிகம் தேடுகிறார்கள்.

ஷகீலாவை கேரளத்து ரசிகர்கள் கூகிள் பூராத் தேடித் துரத்தியிருக்கிறார்கள்.

இந்தியாவின் டாப் டென் என்று பார்த்தால் பொதுவாக நாம் கிரிக்கெட் பற்றித்தான் அதிகம் விசாரித்திருக்கிறோம். அடுத்தபடி சானியா மிர்ஸா, ப்ரியங்கா சோப்ரா, நமீதா வருகிறார்கள்.

சில படிக்கிற பையன்கள் இந்திரா காந்தி யுனிவர்சிட்டியையும் தேடியிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான x86 செர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux-ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் ஓட்டுகிறார்கள்.அவர்கள் வெப் செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, current Version 2.1.அதாவது Apache-ன் கூகிள் வடிவம் என்கிறார்கள்.

கூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.அம்மாடியோவ்!!!