Total Pageviews

Thursday, October 18, 2012

சுஜாதா... சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்' என்ற நிறுவனத்தில் நண்பர் ஆண்டோ பீட்டர், திருக்குறள் முழுவதையும் நான்கு உரைகளுடன் குறுந்தகட்டில் கொடுத்திருக்கிறார்



சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்' என்ற நிறுவனத்தில் நண்பர் ஆண்டோ பீட்டர், திருக்குறள் முழுவதையும் நான்கு உரைகளுடன் குறுந்தகட்டில் கொடுத்திருக்கிறார் (மு. வரதராசனார், பரிமேலழகர், மணக்குடவர், ஜி.யு. போப் உரைகளுடன்).

அதேபோல், குழந்தைப் பாடல்கள் சிலவற்றையும் அனிமேஷன் செய்து, சங்கீதத்துடன் பாடிக் குறுந்தகடாகக் கொடுத்திருக்கிறார். ஆர்வத்துடன் இவர் பதிப்பிக்கும் குறுந்தகடுகளின் வியாபாரம்தான் சரியாக இல்லை என்றார். அடக்க விலைகூடக் கிடைக்கவில்லை என்றார்.

வெறும் ஆர்வத்தை மட்டும் வைத்துக்கொண்டு, எப்படி வியாபாரம் நடத்த முடியும்? தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகள் இருக்கின்றன? யாரும் தமிழில் பாப்பா பாடல்களைச் சொல்லிக் கொடுக்க ஏன் முன்வருவதில்லை?

இன்னும் எத்தனை நாளைக்கு 'ரிங்கா ரிங்கா'வையும் 'ஹிக்கரி டிக்கரி டாக்'கையும் ராணியைப் பார்க்கச் சென்ற பூனையையும் பாடிக் கொண்டிருப்போம்?

தமிழில் எத்தனை நல்ல பாடல்கள் உள்ளன? அவற்றைக் கற்றுக்கொடுத் தால், அந்தப் பள்ளிகளுக்குப் பெற்றோர் தம் பிள்ளைகளை அனுப்ப மாட்டார்களாம். இதைவிட ஆச்சரியம்... பால் மறவாத கைக்குழந்தைக்கு கம்ப்யூட்டர் கிளாஸ் என்று பணம் பிடுங்குவது.

அதாவது, தாய்மொழியில் இருந் தால் பரவாயில்லை. மத்தியப் பிரதேஷ், சத்தீஸ்கர் மாநிலங்களில் கிராமங்களைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளிகளில் இந்தி மூலம் கணிப் பொறியைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுப்பது மிகப்பெரிய வெற்றி என்று சொல்கிறார்கள்.

'ஷிக்ஷா' என்னும் திட்டத்தின்கீழ் தாய்மொழி இந்தி மட்டும் தெரிந்த கிராமத்துக் குழந்தைகள் இயல்பாகக் கணிப்பொறியைக் கையாள்கின்றனவாம்!

மெள்ள இந்த நிலை இந்திய மொழிகளில் வந்துகொண்டிருக்கிறது. இதற்கு 'யூனிகோட்' என்னும் ஒருமித்தக் குறியீட்டு முறை முக்கியம்.



No comments:

Post a Comment