Total Pageviews

Saturday, July 21, 2012

எலுமிச்சை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.




எலுமிச்சை இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடது. எலி மிச்சம் வைத்ததாதல்தான் என்னவோ இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்ததோ என்னவோ.

சுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று. இதில் சிட்ரிக் அமிலம் 5% உள்ளது.

எலுமிச்சை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் பழம், காய், இலை என அனைத்துமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இதில் செடி, கொடி என்று இரண்டு வகைகள் உண்டு. புளிப்புச்சுவை கொண்ட எலுமிச்சை, குளிர்ச்சியானது.

பசியைத் தூண்டி நா வறட்சியைப் போக்கும். இயற்கையாகக் கிடைக்கும் வைட்டமின் சி இதில் நிறைய உண்டு. அதுமட்டுமில்லாமல் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்களும் உண்டு. வெயில் காலங்களில் வெளியில் சென்று வந்த உடன் நிறைய பேருக்கு தலைவலி ஏற்படும்.
எலுமிச்சை பழத்தின் தோலை நன்றாக காய வைத்து பவுடர் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தலைவலி வரும் போது இந்தப் பவுடரை தண்ணீரில் கரைத்து வலி இருக்கும் இடங்களில் தடவி வந்தால் இந்த பசை குறையும் போது தலைவலி குறைந்து விடும்.
கோடைகாலத்தில் சிலருக்கும் வியர்க்குரு மற்றும் கட்டிகள் வரும். அதற்கு எலுமிச்சை மிகச் சிறந்த மருந்து. எலுமிச்சை சாற்றில் சந்தனத்தை அரைத்து தடவினால் வியர்க்குருவும், வேனல் கட்டியும் சரியாகும். வெயில் காலங்களில் அதிகளவு எலுமிச்சை சாறு பருகுவது நல்லது. உடல் வெப்பத்தை தணிப்பதற்கு பயன்படுகிறது.

No comments:

Post a Comment