Total Pageviews

Thursday, June 7, 2012

இளையராஜா - ஆம் இது தமிழனின் சரித்தரத்தில் ஒரு மைல் கல்
இளையராஜா - ஆம் இது தமிழனின் சரித்தரத்தில் ஒரு மைல் கல், இவரின் இசையை இன்று வெளிப்படையாக ரசிப்பதை விட ரகசியமாக ரசிக்கும் ஆட்கள் தான் அதிகம் ஏன் என்றால் இளையராஜா பாட்டு பிடிக்கும் என்றால் நீ அவ்வளவு ஓல்ட் ஜெனரேஷனா என்று நக்கலாக கேட்டு அவர்களின் ஐபாட் அல்லது போணை பார்த்தால் கண்டிப்பாக இளையராஜாவின் இசை இருக்கும். இவரின் பிறந்த நாள் இன்று அதனால் எனக்கும் அவருக்கும் இருக்கும் பழக்கத்தில் சில துளிகள்.

வரை எல்லோரும் போல் 2005 ஆண்டு வரை போஸ்டரிலும், புகைப்படத்திலும் தான் பார்த்திருக்கிரேன். அடித்தது ஜாக்பாட் ஆம் ஜெயாடிவி 2005 ஆம் ஆண்டு புதுசா ஒரு பெரிய நிகழ்ச்சி ஒன்னு நடத்தனும் அதுக்கு நாம் ஏன் இளையராஜாவை வச்சு செய்யகூடாதுன்னு பிளான் போட்டாங்க ஆனா நிறைய பேர் ஐயோ அவர் டீவிக்கு இன்டர்வியூ கூட கொடுக்கமாட்டாரு அவரை போய் லைவ் ஷோ சான்ஸே இல்லை என்று எதிர் குரல் கொடுத்தபோதுதான் முடியும்னு இரண்டு பேர் சேலஞ்சை நடத்தி காட்டினாங்க ஒன்னு முரளிராமன் - வைஸ்பிரசிடன்ட் இன்னொன்னு டயமன்ட் பாபு ஆமா இவங்க ரெண்டு பேரும் தான் இந்த நிகழ்ச்சியின் தூன்கள். நான் அப்ப ஜெயா டிவியின் சில டெக்னிக்கள் விஷயங்களை கவனித்து கொண்டிருந்த போது தான் டெய்லி மீட்டீங்கிள் இந்த பிராஜக்ட்டின் ஒரு அங்கத்தினர் ஆனேன். முதன் முதல் மீட்டிங் இளையராஜாவை அதுவும் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அவரின் அறையில் அப்போது தான் தெரிந்தது இளையராஜா ஒரு மூளை சூடு உள்ளவர், அவரிடம் ஜாக்கிரைதயா பேசனும், அவர் ஒரு ஷார்ட் டெம்பர் ஆள் என்று பொதுவாக உள்ள கருத்துக்கள் எவ்வளவு பெரிய பொய் என்று. உண்மையிலே பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான் கேட்டகரியில் இவரும் இருக்கிறார் என்று அடித்து சொல்லுவேன். அப்படி ஒரு சிம்பிள் சோல் தான் இளையராஜா. அது வரை அவர் லைவ் ஷோ அதுவும் 140 ஆர்டிஸ்ட் வைத்து ஒரே மேடையில் பண்ணினது இல்லை. அதனால் 1 வாரம் ரிகர்ஸல் இன் நேரு ஸ்டேடியம். மனுசன் கடைசி ரிகர்ஸல் வரைக்கும் பயந்த பயம் - அப்பா இதனாலதான் இவர் வெற்றி நாயகன் ஆக காரணம்னு தெரிஞ்சது. 140 பேர் வாசிச்சாலும் எங்காவது ஒரு பிசிறு இருந்தாலும் உடனே கண்டுபிடிசு சொல்லுவார் - இசையும் சாப்பாடும் ஒன்னு, சிறு குறை இருந்தாலும் சாப்பாடும் அதை சாப்பிடும் ஆளும் கெட்டுபோயிடுவாங்கன்னு. அவ்வளவு ஒரு பர்ஃபெக்ஸனிஷ்ட். ஒரு வழியாக விழா அன்று கூடிய கூட்டத்தை பார்த்து உண்மையிலே இளையராஜா ஹை டென்ஷனில் தான் இருந்தார். நான் தேடும் செவ்வந்திபூ இது பாட்டு பாடும் போது சரனத்தில் ஒரு சின்ன மிஸ்டேக், அதை மக்களும் விடவில்லை, ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர்னு சொல்லி அவருக்கே புரிந்தது தான் தவறு செய்துவிட்டோம்னு அதை ஒப்பனா அங்கேயே தெரிவிச்சு அந்த சரனத்தை திருப்பியும் பாடி காட்டின ஒரு எளிமையான உள்ளம். தான் இளையராஜா அப்படின்னு ஒரு இன்ச் ஈகோ கூட கிடையாத என்னைபொருத்த வரை அவர் ஒரு ஞானக்குழந்தை. (See The Link -http://www.youtube.com/watch?v=OT83a_mCA5c) அதுக்கபுறம் 4 மாதத்தில் நிறைய பழக்கம் ஏன் என்றால் கார்த்திக்கும், யூவனும் நெய்பர்ஸ். அதனால் அடிக்கடி அவர் வீட்டில் பொழுது கழியும். இளையராஜா பெரிய பேனர் பெரிய ந்டிகர்கள், பெரிய இயக்குனர்களுக்குத்தான்னு நிறைய பேர் தெரியாம சொன்ன விஷயத்தை பொய்னு நிருபிச்சாரு ஒரு புதுமையான படத்திற்க்கு இசை அமைக்க முடியுமானு நான் பெர்ஸனலா கேட்டபோது - நோ பிராப்ளம் ரவி நீங்க சொன்னா அதுல கண்டிப்பா ஒரு புதுமை இருக்கும்னு ஒரு வார்த்தை கூட பேசாம ஒரு படத்துக்கு "உயிர்" கொடுத்தார் அதை நாளை பார்ப்போம்...........

No comments:

Post a Comment